Wednesday, 1 August 2012

சொசைட்டி செய்திகள்



      அசோக் லேலண்ட் தொழிலாளர் கூட்டுறவு நாணய சங்க அலுவலகம் தற்போது தண்டையார் பேட்டையில் செயல் படுகிறது. அந்த இடத்திற்கு மாதா மாதம் வாடகை செலுத்தப்படுகிறது. தற்போது செயல்படும் அந்த இடத்தையே சொந்தமாக வாங்கிவிட்டால் வாடகையை மிச்சப்படுத்த முடியும். சென்ற ஆண்டு நடைபெற்ற சொசைட்டி பொதுப் பேரவையிலும் இந்தக் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. நமது சொசைட்டியில் போதுமான நிதி ஆதாரம் உள்ளதால் தற்போது சொசைட்டி அலுவலகம் செயல்படும் இடத்தை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

      நமது சொசைட்டியை, பன்மாநில கூட்டுறவு சங்கமாக (Multi State Society) மாற்றி அமைத்தால், ஆ கிளாஸ் உறுப்பினர்களுக்கும் 14% டிவிடெண்ட் கிடைக்கும். தேர்தல் நடத்தப்பட்டு, சொசைட்டி இயக்குனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜனநாயக முறையில் நமது கூட்டுறவு நாணய சங்கம் இயங்கும் நிலையும் உருவாகும். மேற்கண்ட பிரச்சனையில் தனி அலுவலர் அவர்கள் தொடர் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா