Wednesday, 1 August 2012

ஹைக்கூ கவிதைகள் | கவிதை



வாகன் K. தன்ராஜ்,
பெரிய ஒபுளாபுரம், விநாயகர் இன்ஜினியரிங்

பலவகை உணவு...
பசியோடு பரிமாறினாள்
வேலைக்காரி

வயல்வெளி
இருந்த இடம் எங்கும்
வீடுகளாயின
வீட்டுச் சுவற்றில்
அலங்கரிக்கிறது
வயல்வெளி புகைப்படங்கள்!

கேள்வி கேட்காமல்
உழைத்தால்...
முதுகு மட்டுமல்ல
வாழ்க்கையும் ``?'' தான்!

திருட்டுக் கதையில்
திரைப்படம் உருவானது!
கவலையில் இயக்குனர்
திருட்டு சி.டி.க்களால்...

தன்வினை தன்னைச்சுடும்
ஆனால் மற்றவரையும்
சுடுகிறது
புகைப்பவனால்...!

பஸ் வசதி இல்லாத ஊரில்
போக்குவரத்து நெரிசல்!
தேர்தல் பிரச்சாரம்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா