Tuesday, 25 December 2012

இசையால் வளமாகும் ஆளுமைத் திறன் - பாகம் 9



உரிமைக்குரல்: ஒரு இசை வடிவம் உருவாக்கப்பட்ட காலத்தின் நினைவு தொடர்ச்சியாகவே என்றும் இருக்கும். அந்தக் காலத்தை வேறு ஒரு புதிய இடத்தில் புதிய காலகட்டத்தில் மீண்டும் உருவாக்கி காட்டுவது அல்லது அந்தக் காலத்திற்குள் நாம் நுழைந்து வெளிவருவது என்கிற நிலை ஏற்படுகிறது என்று நீங்கள் கூறுவீர்களா?

JS: நிச்சயமாக, இல்லையென்றால் இத்தனை வித்தியாசமான இசை கோர்வைகளும், வடிவங்களும் ஏற்பட முடியாது இல்லையா? தற்பொழுது உள்ள சில சங்கீத போக்குகள் உலகம் முழுமைக்கும் ஒரே மொழி, ஒரே இசை என்பது, எல்லாவற்றையும் ஒன்று போலவே மாற்றும் முனைப்புடன் உள்ளன. ஒருவருக்குத் தொடர்பற்ற ஒரு கலாச்சாரம். பெரும்பான்மை மக்கள் சமூகத்தின் மீது திணிக்கப்படுகிறது. இது தகவல் தொடர்பு சாதனங்களின் அசூர வளர்ச்சியால் நிகழ்கிறது. தொலைக்காட்சி, இணையதளங்களின் மிகப் பெரிய தாக்கத்தினால் நமது இசை, மொழி, கலாச்சாரம் ஆகியவை பாரம்பரிய அடையாளத்தை விரைவாக இழந்து கொண்டிருக்கின்றன.
      உயர் தொழில்நுட்பம், உலக சந்தை நுகர்வு இந்த நசிவுக்கு முக்கிய காரணம். மனித ஆற்றல் மதிப்பிழந்து, இயந்திரத்தின் துல்லியத் தன்மை பெரும் மதிப்பு பெற்று விடுகிறது. இசையின் வேறுபாடுகள் அவற்றின் தனித் தன்மைகளை அப்படியே கொண்டு வரப்பட வேண்டும். இம்முயற்சியில் உரிமைக்குரல் அன்பர்களும் இணைந்து கொள்ளலாம்.
உரிமைக்குரல்: நாம் இரண்டு வகையான இசைக் கலைஞர்களைப் பார்க்க முடிகிறது. முதல் வகை அதிகம் காணக் கூடிய வகை. ஏற்கனவே உள்ள ஒரு இராகம். ஏற்கனவே உள்ள ஒரு இசை வடிவம். இவற்றை தங்கள் அளவில் சிறப்பாக மீண்டும் இசைப்பது, நிகழ்த்திக் காட்டுவது, வாசித்துக் காட்டுவது. இரண்டாவது வகை அதிகம் காண முடியாதது. தாங்களே, புதிய புதிய இசைக் கோர்வைகளையும், ராக அமைப்புகளையும், உருவாக்கி தருவது, முதல் வகையிலும் பெரும் மேதைகள் உயர்ந்த கலைஞர்களை காண முடிகிறது, ஆனால் இவர்கள் இசையை நிகழ்த்துபவர்களாகவும், 2வது வகையினர் இசையை படைப்பவர்களாகவும் உள்ளனர். இதைப் பற்றி இசை ஆசிரியரான உங்கள் கருத்து என்ன?
ஒந: பெர்ஃபார்மர் என்பவர் புதிதாக எதுவும் உருவாக்க இயலாது. இசையை நிகழ்த்திக் காட்டத்தான் முடியும். ஆனால் கிரியேட்டர் என்பவர் படைக்க வேண்டும். பின் நிகழ்த்தவும் வேண்டும். தனது இசை படைப்பை தானே நிகழ்த்தவும் முடிந்தால் படைப்பு முழுமையடைகிறது.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா