இனியவன்
ஜி.ஸ்ரீதர் 256/38176
வரிகளுக்கு
வேகத்தடை
கமா!
மனித
வாய் குகையில்
பளிங்கு
கற்கள்
பற்கள்!
முற்றும்
துறப்பது என்பது
முடியாத
காரியம்
முற்றுப்புள்ளி
கூட
காகிதத்தைப்
பற்றி இருக்கிறது
விண்கலத்தை
ஏந்தி
விண்ணில்
சீறிப் பாயும்
ஸ்ரீஹரிகோட்டா
துப்பிய
தோட்டா
ராக்கெட்
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா