V.கோவிந்தசாமி
352/K302 Mechanical Maintenance
பொதுவாக இந்தத் தலைப்பைப் படிக்கிற ஒருவருக்கு
ஏதோ ஒரு சினிமா ரசிகன், நடிகையைப் பற்றி காணும் கனவுகள், கற்பனைகள் பற்றி சொல்லப்படும்
சமாச்சாரமாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றும்! அல்லது 10 ஆண்டுகளாக லாட்டரி சீட்டு
வாங்கும் ஒருவன் தான் எப்படியும் ஒரு நாளைக்கு கோடீஸ்வரனாக ஆகிவிடலாம் என கனவு கண்டு
வாழும் ஒரு அப்பாவி பற்றிய விஷயமாக இருக்கலாம் என்று கூடத் தோன்றும்.
கற்பனையில் மிதக்காத, கனவுகள் காணாத மக்கள் யாரும்
இருக்க முடியாது? ஆனால் இந்தக் கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் ஓர் அடித்தளம், ஆதாரம்
இருந்துதான் ஆக வேண்டும். கனவுதான் அது உன்னை முன்னேற்றப் பாதைக்கு இழுத்துச் செல்லும்
என்கிறார் டாக்டர் அப்துல் கலாம். ஒரு மனிதன் தான் எந்த உதவியும் இல்லாமல் ஆகாயத்தில்
பறப்பது போல கனவு கண்டான். கற்பனை செய்தான் என்றால் அதற்கு ஆதாரம்; அடையாளம் நிச்சயம்
உண்டு. அவன் பறக்கும் பறவைகளைப் பார்த்ததால்தான் அவனுக்கு அந்தக் கற்பனைகள் தோன்றின.
இந்தக் கற்பனைகளும் புனைவுகளும் கூட யதார்த்தத்தின் பிரதிபலிப்பு என்றுதான் மார்க்சிய
விஞ்ஞானம் கூறுகிறது. செயற்கைக்கோள்களின் தந்தை என்று சியால் கோவஸ்கி என்கிற ரஷ்யரைச்
சொல்லலாம். இவரின் புனைவுகள் ஒரு செயற்கைக் கோளுக்கான சாத்தியப் பாட்டை உருவாக்கித்
தந்தது. மனிதன் செயற்கைக் கோளை இன்று உருவாக்கி விண்வெளியில் விட்டுக் கொண்டே இருக்கிறான்.
மனித வாழ்க்கையில் கற்பனைகள், கனவுகள், புனைவுகள் என்பது ஒன்றிப் போன ஒன்று. புறக்கணிக்க
முடியாத ஒன்று.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஆர்தர் கிளார்க் என்ற
எழுத்தாளர் 1945ம் ஆண்டு வயர்லெஸ் வேர்ல்ட் என்ற பத்திரிகையில் செய்கையான கோள்களை உருவாக்கி
பூமி சுற்றும் வேகத்திற்கு இணையாகச் சுற்றச் செய்தால், அதன்மூலம் பூமிக்கு செய்தியை
அஞ்சல் செய்ய முடியும் என்று புரட்சிகரமான கருத்தினைச் சொல்ல... இந்தக் கருத்தை 20
வருடங்களுக்குப் பிறகு அமெரிக்க விண்வெளி ஆய்வகமான நாசா வேத வாக்காக எடுத்துக் கொண்டு
தனது முதல் செயற்கைக்கோளை உருவாக்கியது. 1958ம் ஆண்டு `ஸ்கோர்' என்ற செயற்கை கோளை பூமிக்கு
இணையாகச் சுற்ற விட்டு அமெரிக்க ஜனாதிபதி ஐஸனோவரின் கிறிஸ்துமஸ் செய்தியையும் அஞ்சல்
செய்ய (தொலைக்காட்சியில்) அடேங்கப்பா...? என்று உலகமே மூக்கின் மேல் விரலை வைத்து பெருமூச்சு
விட்டது. அடுத்ததாக பிரஞ்சு எழுத்தாளர் ``ஜில்ஸ் வெர்ன்'' என்பவர் கணிப்பொறிகளுக்கிடையே
கடிதங்களை பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என்று தனது கற்பனையை தனது டைரியில் கிறுக்கித்
தொலைய... இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு 1960 களிலிருந்து கம்யூட்டர்களுக்கிடையே
கடிதம் பரிமாறத் தொடங்கியது. ஜில்ஸ் வெர்ன் தனது கற்பனையை காகிதத்தில் கிறுக்கவில்லை
என்றால் இப்போது ஏது இ-மெயில் (மின்னஞ்சல்) நம்மூர் யுவ, யுவதிகளின் காதல் கடிதங்கள்
(!)
கனவுகளும்... கற்பனைகளும்.... தொடரும்
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா