Sunday, 21 April 2013

வீட்டு வைத்தியம்


B.டில்லி, சித்த மருத்துவர், செல்: 8122309822

 

தேவையான பொருட்கள்: இஞ்சி, எலுமிச்சம்பழம், நல்ல தேன்.

செய்முறை: நல்ல இஞ்சியைக் கழுவி, மேல் தோலைச் சீவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்சியில் அரைத்துக் கூழாக்கி, முழு வெள்ளைத்துணியில் போட்டுப் பிழிந்து, சாறு எடுத்து தெளிய வைக்க வேண்டும். 1\2 மணி நேரம் கழித்து, வேறோரு பாத்திரத்தில் வடித்துக் கொள்ள வேண்டும். அடியில் வெள்ளையாக சுண்ணாம்பு படிந்திருக்கும் .அதை நீக்க வேண்டும். இரண்டாவதாக எலுமிச்சையை இரண்டு துண்டாக்கி சாறெடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு சாறுகள் 500 கிராம், 500 கிராம் அளவு இருக்க வேண்டும். இந்த இரண்டு சாறுகளையும் ஒன்றாகக் கலந்து நல்ல தேன் ஒரு கிலோ (1000 கிராம்) அளவு கலந்து 10 நிமிடம் அல்லது 20 நிமிடம் வரை சூடு செய்ய வேண்டும். முதலில் கொதி வந்தவுடன் இறக்கி விட வேண்டும். அதன்பின் கண்ணாடி பாட்டிலில் ஊற்றிப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

சாப்பிடும் முறையும் பயன்களும்: தினமும் காலையும், இரவும் உணவுக்குப் பின் இரண்டு ஸ்பூன் அளவு சாப்பிட வேண்டும். சாப்பிட்டவுடன் சிறிது தண்ணீரையும் அருந்த வேண்டும். பித்த சம்பந்தமான நோய்கள், தலைச்சுற்றல், வாந்தி, குமட்டல், செரியாமை, செரியா கழிச்சல், அஜீரணம், வயிற்றுவலி, இரத்தச் சோகை, உயர் ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம், இரத்தத்தில் உள்ள கொழுப்பு, பசியின்மை, விக்கல் ஆகியவை தீரும். இவை அனுபவ முறைகள் உண்மை

குறிப்பு: சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இதைத் தவிர்க்க வேண்டும்.

ஒரு அனுபவம்: நண்பர் ஒருவருக்கு 20 வருடமாக இருந்து வந்த உயர் ரத்த அழுத்தம் மாத்திரைகள் சாப்பிட்டும் குறையாமல் இருந்தது. இதைச் சாப்பிட்ட பின் உயர் இரத்த அழுத்தம் சரியான அளவில் வந்து, நிலையாக நிரந்தரமாக சரியான அளவிற்கு வந்துவிட்டது. இது அனுபவம் கண்ட உண்மை.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா