Sunday, 21 April 2013

சிறுவர்களும் குற்றங்களும் - கிரைம் ஸ்டோரி


பிரேம் N.பிரேமராசன் B.Sc., B.L., 450/F159, QC-Lab

 

      18 வயதுக்குள் இருப்பவர்களை சிறுவர்கள் என்று சட்டம் சொல்கிறது. அப்படி குற்றம் இழைக்கும் சிறுவர்கள் தண்டிக்கப்படுவது கிடையாது. சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப் படுகிறார்கள்.

      ஏன் சிறுவர்கள் குற்றம் இழைக்கிறார்கள் என்றால், முதலில் அந்தச் சிறுவர்களின் குடும்பம், வாழும் சூழல், வறுமையே காரணம் என்று பல காரணங்களைச் சட்டம் சொல்கிறது. அவர்களைக் குற்றச்சிறார் (ஒன்ஸ்ங்ய்ண்ப்ங்) என்று சட்டம் அழைக்கிறது. இந்தச் சிறுவர்களுக்காக சிறார் சட்டம், சிறார் நீதிமன்றம் (ஒன்ஸ்ங்ய்ண்ப்ங் இர்ன்ழ்ற்), ஒன்ஸ்ங்ய்ண்ப்ங் ஒன்ள்ற்ண்ஸ்ரீங் அஸ்ரீற், ஒன்ஸ்ங்ய்ண்ப்ங் ஈங்ப்ண்வ்ன்ங்ய்ஸ்ரீஹ் (குற்றம் சிறுவர்களால் இழைக்கப்படுவது) போன்றவைகள் உண்டு.

      சமீபத்தில் டில்லி மாணவி பலாத்கார வழக்கில் சிறுவன் ஈடுபட்டதைத் தொடர்ந்து அமைச்சரவைக் கூட்டத்தில் சிறார் வயது 16ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் அவன் தண்டிக்கப்பட வேண்டும். வயதைக் காட்டி தப்பிவிடக் கூடாது என்பதால்!

      சிறுவர் குற்றம் என்றால், அவர் வயது 15-17 வரை இருக்கும், அவர்கள் மேல் குற்றங்களைப் பதிவு செய்ய இயலாது. (சர் ஊழ்ஹம்ண்ய்ஞ் இட்ஹழ்ஞ்ங்ள்). சிறுவர் நீதிமன்றமே விசாரிக்கும். தனிப்பட்ட முறையில் விசாரணை நடக்கும்; பொது விசாரணை கிடையாது; கடும் தண்டனை கிடையாது.

      சிறுவர் குற்றங்கள் குறைய, தனிப்பட்ட முறையில் குழந்தைகள் மீது அக்கறை, நல்ல படிப்பு கொடுத்தல், கெட்ட நண்பர்கள் இல்லாது கவனிப்பது, நல்ல அறிவுரைகள் கொடுப்பது, அரசு அவசியமான சட்டம் இயற்றுவது, அரசியல் இல்லாமல் இருப்பது.

சிறுவர் வாரியம்: இது மாஜிஸ்டிரேட் மற்றும் சமூகத்தின் மீது அக்கரை கொண்டவர்களைக் கொண்டது. குற்றம் சுமத்தப்பட்ட சிறுவர்கள் ஆஜர்ப்படுத்தப்பட்டு, அதன் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, கண்காணிப்பு இல்லத்துக்கு அனுப்பப்படுவர். இந்த இல்லம் அரசு அல்லது சமூக அமைப்பால் அமைக்கப்படும்.

      வருங்காலம் சிறுவர்கள் கையில்! எனவே சிறார் குற்றங்களை அகற்றுவோம்! அதற்கான அடிப்படைக் காரணங்களைப் போக்கிடுவோம்!
      நாடும், வீடும் வாழ நாம் சிறார்களுக்கு நல்ல பாதை அமைத்துக் கொடுப்போம்! வாரீர்!!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா