Friday, 14 June 2013

முஸ்லீம் தண்டனைச் சட்டம்



பிரேம் N.பிரேமராசன் B.Sc., B.L., 450/F159, QC-Lab

      முஸ்லீம் சட்டம் (மொகமத் லா) நமது இந்தியாவில் இந்திய சட்டத்திற்கு முன்பு இருந்தது. அப்போது முஸ்லீம் மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர். நமக்கென்று தனியாகச் சட்டம் வரையறுக்கப்படாத காலம்.
      பின்னர் நம்மை ஆங்கிலேயர் ஆண்டபோது லண்டன் தான் நமக்கு உச்சநீதிமன்றமாக (சுப்ரீம் கோர்ட்) இருந்தது. ஆங்கிலேயச் சட்டம் (பிரிட்டிஷ் லா) கடைப்பிடிக்கப்பட்டது. பிறகு 1950ம் ஆண்டு ஜனவரி 26ல் நமது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் indian constitution) டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களால் உருவாக்கப்பட்டு, எல்லாச் சட்டங்களும் இயற்றப்பட்டது. இது படிப்படியாக நடந்தது.

      அன்றைய முஸ்லீம் தண்டனை சட்டத்தில் என்ன வகைகள் இருந்தன என்பதைப் பின்வருமாறு காண்போம்.
      தடி, கொம்பால் அடிப்பது (FLOGGING), கையைத் துண்டிப்பது (MUTILATION, நெற்றியில் `' என்று குறியிடுவது - இதில் T என்பது THIEF திருடன் என்பதைக் குறிக்கும் (BRANDING), சாகும் வரை கல்லால் அடிப்பது STONNING TO DEATH), தலை, கால்களைத் தூணில் கட்டி வைத்து அடிப்பது PILLARY PUNISHMENT), நாடு கடத்துவது, சமூகத்தை விட்டு ஒதுக்கி வைத்தல் - என கடுமையான தண்டனைகள் முஸ்லீம் தண்டனை சட்டத்தில் இருந்தது.
நமக்கு இப்போது உள்ள தண்டனைகள்
      தூக்கு தண்டனை, ஆயுள் மற்றும் சிறைதண்டனை, சொத்தை ஜப்தி செய்வது மற்றும் அபராதம்.
      குற்றங்கள் பெருகி விட்டதால், பழைய முஸ்லீம் தண்டனைச் சட்டமே இருக்கக்கூடாதா என்ற எண்ணம் மக்களுக்குத் தோன்றும். இருப்பினும் குற்றவாளி திருந்தி நல்லவனாக வாழ வழி செய்யும் வகையில் தற்போதைய நமது சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா