Friday, 14 June 2013

சாவே உனக்கொரு சாவு வந்து சேராதா?



V.ஸ்ரீனிவாசமூர்த்தி Tok.No: 5656 Shop X

வங்காள தேசத்தில் ஓர் கட்டிடம் இடிந்து சரிந்ததில் சிக்கி மாண்ட இளம் தம்பதிகள் இருவரும் ஒருவர் மற்றவர் கைகளைப் பிணைத்தபடி உயிர் பிரிந்த நிலையைப் புகைப்படத்தில் காண நேர்ந்தது. மனது பதறித் துடிக்கச் செய்யும் செய்தி... பரிதவித்து எழுதுகிறேன் இக்கவிதையை

இயற்கை அன்னையே... நீ ஏன் இப்படிச் செய்தாய்?
மலர்த் தூவி வாழ்த்தி முறை செய்தல் தவிர்த்து
மாண்புகள் சரிந்து உடனடி மரணத்தை
அரவணைத்ததோ... இவ்விரு மானுடப் பூக்கள்!
எதிர்பாரா இன்னலின் பால்
இடிபாடுகளில் எதிர்கால வாழ்வைப் புதைத்த அவலம்!
இவ்விரு பிஞ்சு உள்ளங்களின் அலறல்
உனக்கென்ன தாலாட்டாய் ஆனதோ?

சாவே... உனக்கொரு சாவு வந்து சேராதா?...
இட்ட உயிர் இவ்வாறு பறித்தல் தகுமோ?


30.6.13ல் பணி நிறைவு பெறும் நண்பர் திரு.V.ஸ்ரீனிவாசமூர்த்தி எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ உரிமைக்குரல் வாழ்த்துகிறது.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா