அனந்த நாராயணன் 275\L192
ATM உருவான வரலாறு
ATM உருவான கதை உங்களுக்குத்
தெரியுமா?
இயந்திர சாதனம் ஒவ்வொன்றுக்கும்
வரலாறு உண்டு.
ATM (அன்ற்ர்ம்ஹற்ண்ஸ்ரீ பங்ப்ப்ங்ழ் ஙஹஸ்ரீட்ண்ய்ங்) உருவான கதை கூட சுவாரசியமானது .
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜோன்
ஷெப்பர்ட் பேரோன் தன் மனைவிக்குப் பரிசளிக்க விரும்பி பணத்தை எடுக்க வங்கியில் வரிசையில்
நின்றார்.
தனது முறை வந்த போது பணத்தைக்
கொடுக்க வேண்டிய காசாளர், நேரம்
முடிந்துவிட்டது என்று கவுண்டரைப் பூட்டி விட்டுச் சென்றுவிட்டார்.
ஜோன் வெறுங்கையோடு மனைவியைப்
பார்க்க விரும்பவில்லை.
கையில் இருந்த சொற்ப சில்லறையை
வைத்து கொஞ்சம் சாக்லேட்டுகளை வாங்கிக் கொடுத்து மனைவியைச் சமாதானப் படுத்தலாம் என்று
நினைத்து சாக்லேட் வெண்டிங் இயந்திரத்தைத் தேடிச் சென்றார்.
அப்போதைக்கு அவர் மனைவியை
சமாதானப் படுத்தினாலும் பூட்டிய வங்கிக் கவுண்டரும், காசு போட்டால் உதிர்ந்த சாக்லேட்டுகளும் அவர் மனதில் மீண்டும் மீண்டும் வந்து போயின
அதன் விளைவுதான் முதல் ஏ.டி.எம். உருவாக வித்திட்டது.
1969-ல் இவர் உருவாக்கிய முதல் ஏ.டி.எம். வடக்கு லண்டனின் பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது.
அதிலும் ஒரு சிக்கல். ஜோனின்
மனைவியால் அப்போதைய ஏ.டி.எம். அட்டைக்கான ஆறு இலக்க குறியீட்டை (டண்ய் சன்ம்க்ஷங்ழ்) ஞாபகம்
வைத்துக் கொள்ள முடியவில்லை.
உடனே செயலில் இறங்கிய ஜோன்,
அதை நான்கு இலக்கங்களாகக் குறைத்தார். ஏ.டி.எம். தற்போது ஏராளமான
மாற்றங்களைக் கண்டு விட்டாலும், அதற்கெல்லாம்
அடிப்படையாக இருந்தது. ஜோன் தன் மனைவியின் மேல் வைத்திருந்த காதலினால்தான்!
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா