Friday, 14 June 2013

உழவன்



அ.பன்னீர்செல்வம் 261/36354

உழைக்கும் வர்க்கம் கைகளை நம்பியே
      இந்த உலகம் முழுதும் சுழலுதடா!
உழைப்பவர் வாழ்க்கை மலராமல்
      ஓர் விடியலும் இன்றி தவிக்குதடா!
பசிப்பிணி போக்கிட கழனியிலே
      உழைத்துச் சிவந்த கரங்களிலே
இரத்தமும் வியர்வையாய் ஓடிவர
      கசக்கிப் பிழிந்த கூட்டமது!
கடும் உழைப்பின் பலனைச் சுரண்டுதடா!
உழைத்தவன் கணக்கிலே
      உழக்கு மட்டும் மிஞ்சுதடா!
வறுமையை விரட்டி
      வளத்தினைக் காண
மீண்டும் வயலினை உழுபவன்
      கடமையின் பின்னே
நம் வாழ்வு இருப்பதை எண்ணி
      உழவனை மதிப்போமடா!
அவன் பெருமையில் உளம் மகிழ்வோமடா!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா