M.ஆதிகேசவன், 264/J066
லத்தீன் அமெரிக்க நாடுகளில்
ஒன்றான வெனிசுலா முதலாளித்துவத்திற்கு மாற்று சோசலிசமே என்பதை உலகுக்கு பறைசாற்றும்
விதத்தில் படிப்படியாக சோசலிசப் பாதையில் முன்னேற்றம் கண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக
கடந்த 10 ஆண்டுகளுக்கு
மேலாக தொழிற்சங்கங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதன் விளைவாக தொழிலாளர்களின்
வேலை நேரம் குறைப்பு வேலை உத்திரவாதம் நீண்ட மகப்பேறு விடுப்பு உத்திரவாதம் அனைவருக்கும்
ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த சட்டம் உலகில் மிக முன்னேறிய தொழிலாளர் சட்டம் ஆகும்.
வெனிசுலாவில் உள்ள அனைத்து
தொழிலாளர்களுக்கும் வாரத்தில் வேலை நேரம் 40 மணி நேரம் மட்டுமே. இனி வேலை நேரம் 44 மணிநேரம் என்பது கிடையாது. மகப்பேறுக்குத் தயாராகும் பெண்களுக்கு பிரசவத்துக்கு
முன்பு 6 வாரம் விடுப்பும்,
பிரசவத்திற்குப் பின்பு 20 வாரம் விடுப்பும் வழங்கப்படும். அதே போல் குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் தந்தைக்கு
2 வாரம் விடுப்பு அளிக்கப்படும். இது மட்டுமல்ல,
அனைத்து தொழிலாளர்களுக்கும், சுய தொழில் செய்பவர்களுக்கும், குடும்பப் பெண்களுக்கும் பென்சன் வழங்கப்படும் என்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள்
இந்த புதிய சட்டத்தில் இடம் பெறுகிறது.
இந்தச் சட்டத்தின் கீழ் எந்த
ஒரு தொழிலாளியையும் இணைக்காமல் இருந்தால் ஆலைக்கு அபராதம் விதிக்கப்படும். தொழிலாளர்கள்
இந்த சட்டம் தங்களுக்கு அமுலாக்கப்படுகிறதா என்பதைக் கண்காணித்திட வேண்டும். தேவைப்பட்டால்
தொழிலாளர் துறையிடம் இதுகுறித்து தகவல் தெரியப்படுத்தலாம் எனத் தொழிலாளர் துறை அமைச்சகம்
அறிவித்துள்ளது. வெனிசுலா மக்களின் மகத்தான தலைவரும்,
அந்நாட்டின் ஜனாதிபதியுமான மறைந்த ஹூகோ சாவேஸ் இச்சட்டம் பற்றி
குறிப்பிடுகையில் 20 ஆண்டுகளுக்கு
மேலாக இந்த குடியரசு வரலாற்றில் தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் நியாயமான சட்டம் இருந்ததில்லை.
அதையெல்லாம் இந்த சட்டம் முறியடித்து தொழிலாளர் நலனைப் பாதுகாக்கும் என்று குறிப்பிட்டார்.
நமது நாட்டில் தற்போதைய ஆட்சியாளர்களிடமிருந்து
இது போல நியாயமான தொழிலாளர் சட்டங்களை எதிர்பார்க்க முடியாது. தொழிலாளர்களின் ஒன்றுபட்ட
போராட்டத்தின் மூலம் தொழிலாளர் நலன் காக்கும் மாற்றுக் கொள்கையுடைய அரசு அமையும் போதுதான்
இது சாத்தியம் என்பதையே வெனிசுலா அரசின் தொழிலாளர் நலச் சட்டம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா