Friday, 14 June 2013

தமிழா! - நீ பேசுவது தமிழா?



முகநூலிலிருந்து - எஸ்.உமாகாந்தன் 258/L210

தமிழா! நீ பேசுவது தமிழா?
தமிழா! நீ பேசுவது தமிழா?
அன்னையைத் தமிழ்வாயால்
`மம்மி' என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை
`பேபி' என்றழைத்தாய்...
என்னடா, தந்தையை
`டாடி' என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழைக்
கொன்று தொலைத்தாய்...

தமிழா! நீ பேசுவது தமிழா?
உறவை `லவ்' என்றாய்
உதவாத சேர்க்கை...
`ஒய்ப்' என்றாய் மனைவியை
பார் உன்றன் போக்கை...
இரவை `நைட்' என்றாய்
விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை `ஸ்வீட்' என்றாய்
அறுத்தெறி நாக்கை...
தமிழா! நீ பேசுவது தமிழா?
வண்டிக்காரன் கேட்டான்
`லெப்ட்டா? ரைட்டா?'
வழக்கறிஞன் கேட்டான்
என்ன தம்பி `பைட்டா?'
துண்டுக்காரன் கேட்டான்
கூட்டம் `லேட்டா?'
தொலையாதா தமிழ்
இப்படிக் கேட்டா?
தமிழா! நீ பேசுவது தமிழா?
கொண்ட நண்பனை
`பிரண்டு' என்பதா?
கோலத் தமிழ்மொழியை
ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம்
`சார்' என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி
சாவது நல்லதா?
தமிழா! நீ பேசுவது தமிழா?
         - கவிஞர் காசி ஆனந்தன்

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா