Saturday, 17 August 2013

10ம் ஆண்டு வாழ்த்துப் பா

இனியவன் ஜி.ஸ்ரீதர் 256/38176

உழைக்கும் மக்களின் உரிமைக்குரல்
நல் மாற்றம் விளைத்திடும் கலகக் குரல்
உழைப்போர் உரிமைக் குரல்!
ஒன்பதாண்டுகள் ஒவ்வொன்றாய்க் கடந்து
பத்தாம் ஆண்டில் பாதம் பதித்து
புத்தம் புதிதாய் பூத்த மலர் - நமது
உழைப்போர் உரிமைக் குரல்
எத்தனை எத்தனை தடைகளைச் சந்தித்தோம்
நாங்கள் - அவை
அத்தனையும் தாண்டி தடம் பதிக்க
உரிமைக் குரலுக்கு ஊக்கம் தந்தது நீங்கள்!
எந்திர ஓசை நடுவினிலும்
சுதந்திர சிந்தனைச் சிற்பிகளாய்


படைப்புகளைத் தரும் தோழர்கள் - பேனாவால்
படையெடுக்கும் வீரர்கள்!
சட்டம் மருத்துவம் அரசியல் அறிவியல் என்றே
தத்தம் அறிவை ஆக்கித் தந்து
பத்தாம் ஆண்டிற்கு இட்டுச் சென்றனர் - எங்கள்
கம்பெனி கண்மணிகள்
இத்திறமைக்கும் துணிவுக்கும்
புலமைக்கும் படைப்புக்கும்
ஈடு இணை யாதென்று சொல்லுங்கள்?
உரிமைக்குரல் உங்கள் குரல்
உண்மைகளின் ஊதுகுழல்
புரட்சியின் திறந்த மடல் - அதில்
எரியூட்டப்படும்
சுரண்டலின் பூத உடல்
ஒன்பதாண்டுகள் ஓயாமல் உழைத்து
பத்தாமாண்டில் அடியெடுத்து வைக்கும்
பாட்டாளி வர்க்க பத்திரிகை
பல்லாண்டு பல்லாண்டு

வாழ்க வாழ்கவே!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா