B.டில்லி, சித்த வைத்தியர், 8122309822
செம்பருத்திப் பூ சர்பத் செய்யும் முறையும் அதனால் ஏற்படும்
பலன்களையும் சென்ற இதழில் படித்தோம். இந்த சர்பத்தின் பலன்களை மேலும் காண்போம்.
சிறு குழந்தைகளுக்கு வரும் இதய வியாதிகளுக்கு எந்தமருந்தைக் கொடுத்தாலும் பயன்
தருவதில்லை. குழந்தைகளுக்கு உஷ்ணம் அதிகரித்து, உடம்பு இளைத்து வயிற்று உப்பல் ஏற்பட்டு அவதிப்படும் சமயத்தில் இந்த செம்பருத்தி
பூ சர்பத் குழந்தைகளின் வயதுக்கு தக்கவாறு கொடுத்தால் குழந்தைகள் பூரண குணமடையும்.
மேலும், இதயம்
சுருங்கி விடுவது, இதயம்
வீங்கி விடுவது ஆகிய பிரச்சனைகள் அதிக குடியினாலும், அதிக போகத்தாலும் (உடலுறவு)
ஏற்படுகிறது. இதயம் சுருங்கி விடுமானால் கல்லீரல் வேலை செய்யாது;
கால் வீங்கும்; இதயம் வீங்கினால் ஜீரணம் குறைந்துவிடும். கல்லீரலும் சரியாக வேலை செய்யாது. சிறுநீர்
சரியாக இறங்காது. கால்கள், வயிறு
வீங்கும்; இதயத்துடிப்பு
அதிகமாகும். இதயத்தில் உண்டாகும் நோய் எதுவானாலும் ஒரு சிலருக்கு கல்லீரலையும்,
மூளையையும் பாதிக்கக் கூடியதாகவே இருக்கும். கல்லீரலில் உண்டாகும்
நோயினால் இதயம் கெட்டுவிடும். ஆகவே இதயத்துக்கும், கல்லீரலுக்கும், மூளைக்கும்
தொடர்பு உண்டு என்பதை நாம் உணர வேண்டும்.
மேற்கண்ட அனைத்து நோய்களையும் செம்பருத்தி பூ சர்பத் குணப்படுத்துகிறது. இது எனது
அனுபவ உண்மை.
செம்பருத்திப் பூவின் மகரந்தத்தை நன்றாக காய வைத்து,
தூள் செய்து தினமும் ணீ ஸ்பூன் அளவு தேனில் கலந்து சாப்பிட்டால்,
நீர்த்த விந்து உஷ்ணம் தணிந்து இறுகும். ஆண்மை பெருக உதவும்!
மேற்சொன்ன மருந்துகள் அனைத்துக்கும் கோழி, கருவாடு, மாட்டிறைச்சி
இவை கூடாது.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா