Saturday, 17 August 2013

இசையால் வளமாகும் ஆளுமைத் திறன் - பாகம் 13

உரிமைக்குரல்: (சிரிப்புடன்) இவ்வளவு இசை சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்டுவிட்டு இந்த வினாவைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உண்மையில் இசை கற்றுக் கொள்வதால் என்ன பயன்?
ஒந: இதில் தவறு எங்கு வந்தது! தற்போதைய இளைய தலைமுறையினரின் திறமைகளுக்கு பஞ்சமேயில்லை! ஆனால் பொறுமை?
      தூண்டில்காரனுக்கு உறுமீன் கிடைக்கும் வரை இருக்கும் பொறுமை கட்டாயம் வேண்டும்.

      ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது நடைமுறை உண்மை! அதனால் எவ்வளவு பெரிய பாதிப்புகள்! சமூகச் சீர்கேடுகள்! உணர்ச்சிகளை சீர்படுத்தாத கல்விமுறை! மதிப்பெண்களை திறமைக்கு அளவுகோலாய் வைக்கும் அவல நிலை!
      இதனைச் சரிப்படுத்த உன்னதமான இசையால் மட்டுமே இயலும். கவின் கலைகள் (நர்ச்ற் நந்ண்ப்ப்ள்) எந்த அளவிற்கு இளைய தலைமுறையினருக்கு பயிற்றுவிக்கப்படுகிறதோ, அந்தளவிற்கு வருங்கால சமுதாயம் மகிழ்ச்சியுடனும், சமூகப் பொறுப்புணர்வுடனும் திகழும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை.
உரிமைக்குரல்: பயனியர் இசை பயிற்சியகத்தின் எதிர்கால இசைத் திட்டங்கள் என்ன?
ஒந: திட்டங்கள் என்று கூறுவதைக் காட்டிலும் குறிக்கோள்கள் என்று கூறுவது மிகப் பொருத்தமாக இருக்கும். 3 ஆண்டுகளுக்குள்ளாக மிகத் தரமாக மூன்று இசைப் பயிலகக் கிளைகளை சென்னையில் திறக்க வேண்டும் என்பது எங்களது முக்கியமான இசைக் குறிக்கோள்.
டஙஅ அஸ்ரீற்ண்ஸ்ண்ற்ண்ங்ள் ர்ச் ஙன்ள்ண்ஸ்ரீ எழ்ர்ஜ்ற்ட் - மிக முக்கிய இசைக் கொள்கை திட்டத்தை வகுத்து வருகிறோம். அது மிகப் பெரிய இசை பயிற்றுவிப்பு திட்டமாகவும், யாருமே செய்யாத சங்கீதப் புரட்சியாகவும் அமையும்.
தொழில் நுட்பம் மிகைப்படாமல், இசையை, பயிற்றுவிப்பு முறையில் புகுத்துவது குறித்து மிக விரிவாக ஆய்வு செய்து வருகிறோம். இளைஞர்களிடையே சரியான இசைப் புரிதலை ஏற்படுத்தும் வகையில் ஙன்ள்ண்ஸ்ரீ ரர்ழ்ந்ள்ட்ர்ல்ள் - ஙன்ள்ண்ஸ்ரீ பட்ங்ழ்ஹல்ஹ் போன்றவை டஙஅவால் திறம்பட கல்லூரி மற்றும் பள்ளிகளில் சீரான இடைவெளியில் நடத்தப்படும். இதற்கு அச்சாரமாக டஙஅ புரசைவாக்கத்தில் புதிய கிளையை வருகிற செப்டம்பர் 7ந்தேதி முன்னுதாரணமான இசைப் பள்ளியாகத் திறக்க இருக்கிறோம்.

(வளரும்...)

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா