அற்புதம் ஜேசுராஜ், எவரெடி தொழிலகம்
அமெரிக்க பாடசாலை ஒன்றில் எட்டரை வயது சிறுவன் ஒருவனை
``இவன் அடிமுட்டாள், பாடசாலையில் இருந்தால் மற்ற மாணவர்களையும் கெடுத்துவிடுவான்;
இனி இவனுக்கு பாடசாலையில் இடமில்லை.''
என்று பள்ளி ஆசிரியர்கள் அவனை அந்தப் பாடசாலையில் இருந்து வெளியேற்றி
விட்டனர். அந்தச் சிறுவனின் தாயார் கவலை கொண்டாலும் தைரியமாக வீட்டில் வைத்து அவனுக்குப்
பாடங்களைக் கற்றுக் கொடுத்தார். தாயின் கல்வியிலேயே வளர்ந்த சிறுவன்,
பின்னாளில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டான்.
வருடா வருடம் அக்டோபர் மாதம் 21-ம் தேதி இரவு 9.59 மணிக்கு
தெருவிளக்குகளைத் தவிர மின்சார விளக்குகள் அனைத்தையும் ஒரு நிமிடம் அணைத்து அமெரிக்காவை
இருளாக்கிவிட்டு மீண்டும் ஒளிரவிட்டு தொலைக்காட்சி, வானொலியில் இப்படி அறிவிப்பார்கள் ``எடிசன் பிறந்திருக்காவிட்டால் உலகம் இப்படித்தான் இருளாக இருந்திருக்கும்.''
மேலே கூறிய அந்த முட்டாள் சிறுவன்தான் பின்னாளில் விஞ்ஞானிகளின் தந்தை எனப் போற்றப்படும்
தாமஸ் ஆல்வா எடிசன் ஆவார். இப்போது சொல்லுங்கள்; அந்த ஆசிரியர்கள் கூறியது போல எடிசன் முட்டாளா? ஆகவே, யாரும்
இங்கு முட்டாள் இல்லை. நீங்களும் அடுத்தவர் அபிப்பிராயத்தில் வாழ்வதை விட்டுவிடுங்கள்.
உங்களை நீங்களே நிர்ணயப்படுத்துங்கள். உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வைரம் இருக்கிறது.
அதைப் பட்டைத் தீட்டுங்கள்!
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா