ஹீலர் ஆர்.மாதவன் D.E.C.E., M.Acu.,
அக்குபங்சர் வாழ்வியல் மருத்துவ ஆலோசகர்,
செல்: 9840732871, 353/37026
இரத்த அழுத்தம் (B.P)
இரத்த அழுத்தத்தை மிகவும் சுலபமாக குணப்படுத்திவிடலாம்.
காரணம் இரத்த அழுத்தம் என்பது ஒரு `நோயே அல்ல'. நமது
உடலில் ஏதேனும் ஒரு உறுப்பில் சேதம் (கழிவுத் தேக்கம்) ஏற்பட்டால்,
அதை நிவர்த்தி செய்ய, இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்ய இதய இயக்கமும் (ஏங்ஹழ்ற் தஹற்ங்) தானே அதிகரிக்கிறது.
அதிக இரத்த அழுத்தம் (இரத்தக்
கொதிப்பு) என்பது
உடலுறுப்புகளில் ஏதோ ஒன்று சேதத்திற்கு உட்பட்டுள்ளது என்பதாகத்தான் நாம் தெளிவு பெற
வேண்டும்.
நாடி பரிசோதனை மூலம் பாதிக்கப்பட்ட உடல் உறுப்பின் தன்மையை நாம் துல்லியமாக அறிய
முடியும். குறிப்பிட்ட அந்த உறுப்பிற்குத் தேவையான சக்தியை அளிப்பதன் மூலம் அதிக இரத்த
ஓட்டத்திற்கு அவசியமில்லாமல் செய்திடலாம். இதனால் இதய இயக்கமும்,
இரத்த அழுத்தமும் தானாகவே சீரான நிலைக்கு வந்துவிடும். உதாரணமாக
சிறு நீரகத்தில் ஒரு பாதிப்பு ஏற்பட்டால், கை, கால்
மற்றும் மூக்கு வீங்குகிறது. இதனால் இரத்தக் கொதிப்பு (BP)
எற்படுகிறது. மேலும், வயிற்றில் வாயுத்தொல்லைகள் மிகுதியாகி, அதனாலும் இரத்தக் கொதிப்பு (BP)
உண்டாகிறது.
குடிப்பழக்கத்தால் கல்லீரல் கெடும்போதும் இரத்த அழுத்தம் தலை தூக்குகிறது. ஆக இரத்தக்
கொதிப்பு என்பது ``இதய நோய்''
அல்ல. உடலில் ஏதோ ஒரு உறுப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பு நீங்கும்
வரையில் அதிக இரத்த ஓட்டம் (இரத்தக்
கொதிப்பு) அந்த
உறுப்பினுள் நடைபெற்றே ஆக வேண்டும். இது மிகவும் அவசியம்.
இதற்கு நேர்மாறாக மருந்தியல் சார்ந்த மருத்துவம் இரத்தக் கொதிப்பை ஒரு இதயம் சார்ந்த
நோயாக கருதுகிறது. இயற்கைத் தன்மைக்கு மாறாக இந்த இரத்த ஓட்டத்தைக் குறைக்கவும்,
இயக்கத்தை குறைக்கவும் படாதபாடு படுகிறது. இதன் காரணமாக மருந்து,
மாத்திரைகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே இரத்த அழுத்தம்
மென்மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது. மருந்தியல் மருத்துவத்தின் இச்செயல் பழுதடைந்து
வரும் ஒரு உறுப்பில் மேலும் பாதிப்பினை அதிகப்படுத்துகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு
மேல் அதிகமாக இயங்கிக் கொண்டிருக்கும் இதயமும் சோர்வடைய வழிவகுக்கிறது.
(மீண்டும் முதல் பாராவைப்
படிக்கவும்)
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா