Saturday, 17 August 2013

கரிசலாங்கண்ணிக் கீரை

எஸ்.ரகுபதி 221/C879

வயல் வரப்புகளிலும், வாய்க்கால் கரைகளிலும் நீர்ப்பிடிப்புள்ள இடங்களிலும் உற்பத்தியாகும் கரிசலாங்கண்ணிக் கீரை நமது உடலில் உள்ள கல்லீரலை வலுப்படுத்தும் தனிக்குணம் வாய்ந்தது. இக்காரணத்தால் இக்கீரையை மஞ்சள் காமாலை மற்றும் சோகை போன்ற நோய்களுக்கு பயன்படுத்துகின்றனர். இக்கீரையை பச்சடியாகவும், துவையலாகவும், பருப்புடன் சேர்த்து கூட்டாகவும் செய்து உண்டால் கல்லீரலுக்கு சக்தியும், வலிமையும் ஏற்படும்.

      மஞ்சள் காமாலை நோய் கண்டிருக்கும் போது கரிசலாங்கண்ணி இலையை பச்சையாக இடித்து சாறெடுத்து வேளைக்கு இரண்டு அவுன்சு வீதம் காலை, மாலை 2  வேளைகளிலும் ஏழு நாட்கள் சாப்பிட மஞ்சள் காமாலை குணமாகும். இக்கீரையை உணவுடன் சேர்த்து உட்கொண்டால் கல்லீரல் பாதிப்புகளைத் தடுத்து நிறுத்த முடியும்.
      மாதவிடாய்க் கோளாறு காரணமாக பெண்களுக்கு இரத்தப் போக்கு அதிகமாக இருக்கையில், இக்கீரையின் இலையை வறுத்து அவித்து, டிக்காஷன் போல் வடிகட்டி நாளொன்றுக்கு 2 அவுன்சு காலையும் மாலையும் குடித்து வர இரத்தப் போக்கு நிற்கும். கரிசலாங்கண்ணிச் சாற்றுடன் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயைக் கலந்து அடுப்பில் இட்டு சூடேற்றி, தைலமாக வைத்து தலைக்குத் தடவி வர கேசம் கறுத்து, செழித்து வளரும். முடியில் நரை ஏற்படுவதையும், முடி உதிர்வதையும் தடுக்கும்.

      கரிசலாங்கண்ணி இலையை அடிக்கடி சமைத்து உணவுடன் சேர்த்து உண்டு வர உடல் நல்ல நிறம் பெற்று, பிரகாசத்தை அடையும்; கண்களும் மூளையும் குளிர்ச்சி பெறும்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா