கே.ராஜேஷ் கண்ணன், 217/38180
அரசியல், ஐபிஎல் விளையாட்டு சந்தடிகளில் நாம் கண்டு கொள்ளாமல் போன செய்தி;
ஆனால் பேரதிர்ச்சி உண்டாக்கிய செய்தி. குழந்தைகளுக்கான முகப்
பூச்சு பவுடரில் புற்று நோயை உருவாக்கும் எத்திலின் ஆக்சைடு நச்சுப் பொருள் அளவுக்கு
அதிகமாக கலந்திருப்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டது. இதன் காரணமாக,
பிறந்த சிசுக்கள் மற்றும் குழந்தைகளுக்கான பொருட்கள் என்றாலே
நம் மனதில் மின்னும் ``ஜான்சன்
அண்ட் ஜான்சனின் மும்பை - முகுந்த்
தொழிற்சாலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏழு லட்சம் வேதியியல் கலப்பு பொருட்களில் சுமார் 1700 பொருட்களுக்கு மட்டுமே சர்வதேசப் பாதுகாப்பு விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அனுமதி
அல்லாத சுமார் 50 ஆயிரம்
வகை வேதியியல் கலப்பு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் இந்தியா உள்ளிட்ட மூன்றாம்
உலக நாடுகளில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை அனைத்துவித தரப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தி
பின் விளைவுகளை சோதிக்க வேண்டும். பெரும்பான்மையான பொருட்கள் மேற்கண்ட சோதனைகளைத் தவிர்த்து
சந்தைக்குள் ஊடுருவிவிட்டன. அந்த அனுமதி அல்லாத பொருட்களின் சோதனைச் சுண்டெலிகள் ``மூன்றாம் உலக நாட்டின் மக்கள்'' தான்.
2008ல் சீனாவின் நியூலாந்தைச் சேர்ந்த சன்லு குழுமத்தின் பால் பவுடரை உட்கொண்ட 53,000 குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 80 சதவிகித குழந்தைகள் 2 வயதுக்கு
உட்பட்டவர்கள். அந்தப் பால்பவுடரை ஆய்வு செய்த போது, பால் பவுடரில் `மெலமைன்'
என்கிற நச்சு வேதியியல் பொருள் அளவுக்கு அதிகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
(வேதியியல் பொருள் கலப்பு இல்லாமல் எந்த உறையில் அடைக்கப்பட்ட
உணவும் தயாரிக்க முடியாது). சீன அரசு
அந்த நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுத்தது. அந்த நிறுவனத்திற்கு அனுமதி அளித்த
மேயரைப் பதவி நீக்கம் செய்தது. ஆனால், இந்தியாவில் அந்த நிறுவனம் இப்போதும் செயல்பட்டு வருகிறது.
தாய்ப்பால் கொடுத்தால் மார்பழகு குறைந்துவிடும் என்று பிரச்சாரம் செய்யவும்,
மக்கள் செயற்கைப் பால் பவுடரை நம்பி விழுந்தார்கள். அதன்பிறகுதான்
நாடு முழுக்க குழந்தைகளுக்கான நோய்கள் அதிகரித்தன. விதவிதமான நோய்களால் கொத்துக் கொத்தாக
குழந்தைகள் இறந்து போகும் நிலை ஏற்பட்டது. ஆனால், இப்போதோ, தாய்ப்பாலே
மகத்தானது; தாய்ப்பாலில்தான்
நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்று அறிவிக்கின்றனர்.
பால்பவுடர் மட்டுமல்ல, குழந்தைகளுக்கான
ஷாம்பு, சோப்பு
தொடங்கி அழகு சாதனப் பொருட்கள் வரை நச்சுக்களால் நிரம்பி இருக்கின்றன. (இந்த ஆபத்தைப் பற்றி அடுத்த இதழில் தொடர்வோம்.)
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா