ஆனந்த் நாராயணன் 275/எல்192
நீங்க கிரெடிட் கார்டு மூலம் கடன் வாங்கி வட்டிக் கட்டி
கடனை முடிக்க வில்லையா? வங்கியில்
இருந்து மிரட்டல் வருகிறதா... அப்ப முதல்ல இதைப் படிங்க.
வங்கி ஊழியர் : சார் நீங்க கடன் அட்டை மூலம் கடன் வாங்கியிருக்கீங்க.
தயவு செய்து பணத்தைக் கட்டிடுங்க! கட்டலைன்னா உங்க மேல நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.
கடன் வாங்கியவர் : கட்ட முடியாது சார்! என்ன பண்ணப் போறீங்க
வங்கி ஊழியர் : உங்க மேல பிராடு வழக்கு பதிவு செய்வோம். உங்களைக்
காவல் நிலையத்துக்கு அழைத்து கம்பி எண்ண வைப்போம்.
கடன் வாங்கியவர் : சார், நான் பத்தாம் கிளாஸ் தாண்டலை தான், அதுக்காக உங்க இஷ்டத்துக்கு அளந்து விடாதீங்க. என்ன வழக்கப் போடப்போறீங்க?
என்ன பிராடு? நான் பெற்ற கடன் எவ்வளவு? இதுவரை
நான் கட்டி வந்த வட்டி எவ்வளவு? அதற்காக
நீங்கள் போட்டுள்ள சேவை வரி, மற்றும்
இதர வரிகள் மற்றும் அபராதங்கள் எவ்வளவு? உங்க கிட்ட அது சம்பந்தமான விவரம் இருக்கும் பட்சத்தில்,
அதை முதலில் எனக்கு அனுப்பி வைங்க,
எனது தரப்பு விளக்கத்தைப் பின்னர் நான் பதிவு செய்கிறேன்.
வங்கி ஊழியர் : சார், இப்படி எல்லாம் பேசினால் சரிவராது, நான் உங்க வயதான பெற்றோரை அழைத்துப் பேச வேண்டிவரும்.
கடன் வாங்கியவர் : தாராளமாகப் பேசுங்கள். அவர்களைக் கேட்டா எனக்கு
கடன் கொடுத்தீர்கள்? இல்லை
அவர்கள்தான் உங்களுக்கு உத்தரவாதம் கொடுத்தார்களா? நீங்கள் இம்மாதிரியெல்லாம் பேசினால் காவல் நிலையத்தில் உங்கள் மீது நியூசன்ஸ் புகார்
தெரிவிப்பேன். அது சரி, நீங்கள்
சம்பந்தப்பட்ட வங்கி ஊழியரா? உங்கள்
நியமனப் பதவி என்ன?
வங்கி ஊழியர் : சார், நான் வங்கியால் நியமிக்கப்பட்ட கடன் வசூல் நிறுவனத்தைச் சேர்ந்தவன்.
கடன் வாங்கியவர் : அப்புறம் வங்கி என்று சொல்லாதீர்கள். முதலில் எதன்
அடிப்படையில் நீங்கள் என்னைத் தொடர்பு கொண்டுள்ளீர்கள்?
அதற்கான அதிகாரதை வங்கி உங்களுக்கு வழங்கியிருந்தால் அதைப் பற்றி
முதலில் எனக்குத் தெரிவித்திருக்க வேண்டும். மொட்டையாக வங்கியிலிருந்து பேசுவதாகக்
கூறியிருக்கக் கூடாது. நீங்கள் ரிசர்வ் வங்கி அறிவுரைப்படி நடந்த கொள்ள வில்லை என்று
நான் வங்கி ஓம்பட்ஸ்மேன் (வங்கி
விசாரணை அதிகாரி) அவர்களிடம்
புகார் அளிக்கப் போகிறேன். உங்கள் வங்கியிடம் அங்கு என்னைச் சந்திக்கத் தயாராக இருக்கும்படிச்
சொல்லுங்கள்.
வங்கி ஊழியர் : சார், வாங்கிய பணத்தைத் தர வேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு இருக்க வேண்டாமா?
உங்களுக்குப் பொறுப்பில்லையா?
கடன் வாங்கியவர் : உங்களைப் போன்ற கந்துவட்டிக் கும்பலிடம் எனக்கு
அந்தப் பொறுப்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. வாங்கிய கடனைவிட மூன்று மடங்கு மேல்
வட்டியாகக் கட்டிவிட்டேன். இதற்கு மேல் பேச ஏதுமில்லை. மீண்டும் மீண்டும் பேசினால்
உங்கள் மீது நியூசன்ஸ் புகார் தர வேண்டி வரும்!
(உரையாடல் முடிவுக்கு வந்தது. இப்படி அனைத்துக் கடன் அட்டை கடனாளிகளும் விவரமாக
இருந்தால் வங்கிகள் திருந்த வாய்ப்புண்டு)
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா