Saturday 17 August 2013

நில அபகரிப்பு

பிரேம் என்.பிரேமராசன் B.Sc., B.L. 450/F159, QC-Lab

      நில அபகரிப்பு என்ற வார்த்தையில் இருந்து இது என்ன என்று பொருள் கொள்ளலாம். ஒருவர் பெயரில் உள்ள நிலத்தினை, அல்லது வீட்டினை, அல்லது சொத்தினை அதில் உரிமை இல்லாத பிறர் குற்றச் செயலில் ஈடுபட்டு அபகரித்துக் கொள்வதே நில அபகரிப்பு!
      இது பற்றி நிலச் சட்டம் (பட்ங் கஹய்க் அஸ்ரீற்) என்ன சொல்கிறது? நில அபகரிப்புச் சட்டம் (கஹய்க் எழ்ஹக்ஷக்ஷண்ய்ஞ் அஸ்ரீற்), வாடகையாளர் சட்டம் (பட்ங் பங்ய்ஹய்ஸ்ரீஹ் அஸ்ரீற்) நில அரசு பொருள் சட்டம் என்று சட்டங்கள் உண்டு.

      நில அபகரிப்பு நடக்காமல் இருக்க, என்னதான் நமக்குச் சட்டம், அரசு, காவல்துறை, சொந்தபந்தம், நண்பர்கள் இருந்தாலும் கீழ்க்கண்ட குறிப்புகளை மனதில் கொள்ள வேண்டும். முதலில் நமது இடம், வீடு நமது பொறுப்பில் பயன்பாட்டில் இருக்க வேண்டும். சொத்து ஓரிடம், நாம் ஓரிடம் என நமது கட்டுப்பாட்டில் இல்லாமல் பல மைல்கள் தொலைவில் அச்சொத்து இருக்கக்கூடாது. கண்காணிப்பு முக்கியம்.
      ஒரிஜினல் பத்திரம் பத்திரமாக இருக்க வேண்டும். தேவையின்றி ஜெராக்ஸ் காப்பி யாரிடமும் கொடுக்கக் கூடாது. வில்லங்கச் சான்று சந்தேகம் ஏற்படும் நேரத்திலோ அல்லது பொதுவாகவோ, சப்ரிஜிஸ்டிரர் அலுவலகத்தில் பார்ப்பது நல்லது. சொத்தை அடமானம் வைக்கும் நிறுவனம், அரசு அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும். தனியார், ஏமாற்று நிறுவனங்களிடம் அடமானம் வைக்கக்கூடாது. கூட்டுறவு நிறுவனம் என்றாலும் தவறு நடக்க வாய்ப்பு உள்ளது.
      நிலத்திலோ, வீட்டிலோ நீண்ட நாட்கள் யாரையும் குடியமர்த்தக் கூடாது. 20 ஆண்டுளுக்கு மேல் அப்படி குடியிருந்தால், நிலச் சட்டத்தில் அனுபோக உரிமை (டழ்ங்ள்ஸ்ரீழ்ண்ல்ற்ண்ர்ய் ழ்ண்ஞ்ட்ற்ள்) என்று, சொத்தில் உரிமை கொண்டாட வழியுண்டு. நமது சொத்து அபகரிக்கப்படுகிறது என்ற நிலை வந்த உடனே, சட்டம், போலீஸ் மூலம், நமது ஆவணச் சான்றுகள் (ஈர்ஸ்ரீன்ம்ங்ய்ற்ஹழ்ஹ் உஸ்ண்க்ங்ய்ஸ்ரீங்) கொண்டு நிரூபித்து வெற்றி பெற வேண்டும். எதிரி மீண்டும் கோர்ட்டுக்கு சென்று அப்பீல் செய்தால் சந்திக்க வேண்டும். அவரது அப்பீல் 60 நாட்கள் கழித்து தக்க காரணம் இல்லாமல் இருந்தால் நீதிமன்றம் அதை ஏற்காது. அவ்வழக்கு தள்ளுபடி ஆகும். பொதுவாக நிலச்சட்டம் என்பது மாநிலத்துக்கு மாநிலம் சிறிது மாறுபடும். முன்பு ராவுத்தர்-ஜமீன்தார் காலத்தில் சட்டம் மாறுபட்டு இருந்தது. இப்போது நில அபகரிப்பு ஏற்படாதவண்ணம் சட்டம் வலுவாக உள்ளது என்றாலும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

      ஆங்ஜ்ஹழ்ங் ர்ச் ஆன்ஹ்ங்ழ் என்ற ஒரு வார்த்தை சட்டத்தில் உண்டு. அது போல நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இதற்கு மேற்சொன்ன குறிப்புகளை மனதில் கொண்டு சட்ட ரீதியாக விலை போகாத, தர்மத்தின் பக்கம் நிற்கும், சட்ட ஆலோசகர்களின் ஆலோசனை பெறுவது நல்லது. அவர் நிலச்சட்டம் நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா