Saturday 17 August 2013

துரத்தப்படுபவர்கள்

கே.என்.சஜீவ்குமார் 217/37918

      உலக வரலாற்றில் முக்கியமான ஆண்டு, சோவியத் நாடு வீழ்ந்த ஆண்டு. அதுவரை இரு துருவங்களாக இருந்த உலகம், அமெரிக்கா என்ற ஒற்றைத் துருவ உலகமாக மாறியது. சோவியத் இருந்தவரை வாலைச் சுருட்டிக் கொண்டிருந்த அமெரிக்கா இன்று உலக ரவுடியாக விளங்குகிறது.
      2001-ல் உலக வர்த்தக மையம் இடிக்கப்பட்ட பின் தீவிரவாத ஒழிப்பு என்கிற பேரில் பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது அமெரிக்கா. பாகிஸ்தானில் அனுமதியின்றி ஆளில்லா விமானம் மூலம் குண்டுகளை வீசியது. சந்தேகத்தின் பேரில் குவாண்டனாமோ சிறையில் பலரை அடைத்து வைத்து பல மனித உரிமை மீறல்களைச் செய்து வருகிறது.

      இது போதாதென்று தனிமனித வெளியையும் வேவு பார்க்க அமெரிக்கா தயாராகிவிட்டது. சமீபத்தில் எட்வர்ட் ஸ்னோடன் என்பவர் வாஷிங்டன் போஸ்ட் மற்றும் கார்டியன் பத்திரிகைகளில் அமெரிக்கா எவ்வாறு மற்ற நாட்டுத் தூதரகங்களையும், தனிமனித ஃபேஸ்புக் மற்றும் கூகுள் மின் அஞ்சல்களையும் உளவு பார்த்தது என்பதைப் போட்டுடைத்தார். ஒரு மணிநேரத்தில் 2 பீடாபைட் (1பீடா பைட் =
1 மில்லியன் கிகாபைட்) தகவல்களைத் திருடுவதாகவும் அதனை யுதாக் என்ற இடத்தில் சேமித்து ஆராய்ச்சி செய்வதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டார். இதை அமெரிக்காவின் நட்பு நாடுகள் கூட கண்டித்தன; ஆனால் நமது வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் இது உளவுபார்ப்பதல்ல, இது ஒரு இ-மெயில் மற்றும் தொலைபேசி ஆய்வு மட்டும்தான் என்று தன் அமெரிக்க விசுவாசத்தைப் பதிவு செய்தார். ஹாங்காங்கில் இருந்து ரஷ்யா சென்ற ஸ்னோடன் எங்கே அடைக்கலம் புகுவது என்று தேடிய போது, ``இந்தியா ஒன்றும் திறந்த வீடு அல்ல'' என்று சல்மான் குர்ஷீத் எச்சரித்தார்.
      ஸ்னோடனைத் தேடும் பணியில் பொலிவியா அதிபர் ஈவே மோரால்ஸ்-ன் விமானத்தை வியன்னாவில் தரையிறக்கி ஒரு நாட்டின் அதிபரை அவமானம் செய்தனர். இதற்குப் பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
      அதேபோல விக்கிலீக்ஸ் என்ற இணையதளம் மூலம் அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் நடத்திய கொடூரங்களையும், அமெரிக்கத் தூதரகங்கள் உலகம் முழுவதிலும் இருந்து அனுப்பும் இரகசிய கோப்புகளையும் வெளியிட்டு, அமெரிக்காவின் முகமூடியை கிழித்தெறிந்தார், ஜூலியன் அஸாஞ்சே. அவர் இப்போது லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.
      ஏரண் ஸ்வார்ட்ஸ் என்பவர் ஜனவரியில் தற்கொலை செய்து கொண்டார். அவர் கார்பரேட் திமிங்கலங்களின் தனிச் சொத்தாக இருந்த ஙஐப-ன் (ஙஹள்ள்ஹஸ்ரீட்ன்ள்ங்ற்ற்ள் ஐய்ள்ற்ண்ற்ன்ற்ங் ர்ச் பங்ஸ்ரீட்ய்ர்ப்ர்ஞ்ஹ்) அறிவியல் இதழ்களை கம்ப்யூட்டர் மூலம் எடுத்து இலவசமாக வெளியிட்டார். பல ஆராய்ச்சி மாணவர்கள் பலன் அடைந்தனர். அதற்கு அவருக்குக் கிடைத்த பரிசு 35 ஆண்டு சிறை மற்றும் ஒரு பில்லியன் டாலர் அபராதம். அறிவுசார்ந்த சொத்தை பொதுவாக்கப் போராடிய ஒரு அறிவு ஜீவிக்கு அமெரிக்காவால் நேர்ந்த கொடுமை இது.

      ஏகாதிபத்தியம் எங்கோ இதைச் செய்கிறது என்று நினைக்கத் தோன்றும். இல்லை! அது நம் படுக்கை அறை வரை வந்து விட்டது.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா