Thursday, 26 December 2013

செல்போன் கதிர்வீச்சில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி?

அனந்த நாராயணன் 275/L192

      இன்றைய உலகில் செல்போன் ஒரு அத்தியாவசிய `கருவியாகி' யாவரும் பயன்படுத்தியே தீர வேண்டிய நிலையில், செல்போன் கதிர்வீசை குறைத்து, நம்மைக் காத்துக் கொள்ளும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது, நமக்கும் நமது குடும்பத்தினருக்கும் உகந்த விஷயமாக இருக்கும்.

      கைப்பேசிகளால் நமக்கு எந்த அளவு நன்மை உள்ளதோ அதைவிட இரு மடங்கு தீமைகளும் உள்ளன. தீமைகளில் முக்கியமானது செல்பேசி கதிர்வீச்சினால் நம் மூளை செயலிழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது. கதிர்வீச்சினால் மூளையில் இரண்டு வகையான புற்றுநோய்க் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் கைப்பேசி உபயோகிப்பவர்களுக்கு இந்தப் புற்றுநோய் தாக்கும் அபாயம் உள்ளதாம். ஆகவே முடிந்த அளவு கைப்பேசி உபயோகிப்பதை நாம் குறைத்துக் கொள்ள வேண்டும். லேண்ட் லைன் உபயோகிக்கும் வசதியிருந்தால் அந்த இடங்களில் செல்பேசிகளைத் தவிர்த்துவிடவும்.
      கைப்பேசிகளில் பேசும்போது வலது பக்க காதில் வைத்துப் பேசாமல் இடதுபக்க காதில் வைத்துப் பேசவும். ஏனெனில் வலது பக்கத்தில்தான் மூளை பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாம். கைபேசிகளில் விளையாடுவதை முற்றிலுமாகத் தவிர்க்கவும். கைப்பேசிகளை சட்டையில் இடது பக்க பாக்கெட்டில் வைக்க வேண்டாம். இதன் மூலம் இதயத்தைக் கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பைக் குறைக்கலாம்.
      கைப்பேசிகளில் பேசும்போது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்துப் பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக் கொண்டு பேச வேண்டாம். ஏனென்றால் கைபேசியின் இண்டெர்னல் ஆண்டெனாவைப் பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள்.
      தூங்கும்போது போனை அருகிலேயே வைத்துக் கொண்டு தூங்கும் பழக்கம் இருந்தால் அதனை உடனே கைவிடவும். கைபேசியில் ஒருவரை தொடர்பு கொள்ளும்போது அவர் உங்கள் தொடர்பை ஆன் செய்தவுடன் போனை காதின் அருகே கொண்டு வந்து பேசவும். ஏனென்றால், பேசும்போது ஏற்படும் கதிர்வீச்சு அளவை விட, ரிங் போகும்போது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சு வெளிப்படுகிறது.
      எனவே, நண்பர்களே... இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவோம்! செல்போன் கதிர்வீச்சிலிருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்வோம்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா