Sunday, 21 April 2013

தில் கலைஞன் சார்லி சாப்ளின்


M.ஆதிகேசவன், 264/J066

 

      மொழி கடந்தது கலை! கலையை ரசிக்க மொழியே தேவையில்லை! எந்த மொழியில் இருந்தாலும் கலை ரசிக்கத் தகுந்ததுதான்!

      மொழியே இல்லாமல் வெறும் மௌனத்திலேயே கதை சொன்ன கலைஞன் ஒருவன் இருந்தான். அவன் சொன்னவை வெறும் கதைகள் மட்டுமல்ல, மிகவும் ஆழமான கருத்துக்களையும் அந்தக் கதைகளின் வாயிலாக சொன்னான் அந்தக் கலைஞன்!

      நாம் மகிழ்ச்சியாக இருக்கும் போது எதையும் வெகு சுலபமாக உள்வாங்கிக் கொள்ள முடியும். நம்மை மகிழ்வித்துச் சிரிக்க வைத்து, நாம் சிரித்துக் கொண்டிருக்கும் இடைவெளியில் அற்புதமான சிந்தனைகளை நமக்குள் பதிய வைத்ததுதான் அந்தக் கலைஞனின் மகத்தான சிறப்பு. அவர் வேறு யாருமல்ல! சார்லி சாப்ளின் தான்!

      மாடர்ன் டைம்ஸ் படத்தில் தொழில் உலகத்தில் மனிதன் எப்படி இயந்திர கதியாகிப் போகிறான் என்பதை மிகச் சிறப்பாக சித்தரித்திருப்பார்.

      சார்லி சாப்ளின் ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும், எல்லாமே வெகுவாகப் பேசப்பட்டவைதான்! அவர் நடித்த ``தி கிரேட் டிக்டேட்டர்'' - ஹிட்லரின் நாஜிக்களைக் கிண்டல் செய்த இந்தத் திரைப்படம், போர் வெறியை எதிர்த்து, சமாதானத்தை முன்னெடுத்துச் சொன்னது. ஹிட்லர் வாழ்ந்த காலத்திலேயே நகைச்சுவையுடன் இப்படி படமெடுக்க சாப்ளினுக்கு எத்தனை நெஞ்சுறுதி இருந்திருக்கும்! அதனால்தான் ``ஹிட்லர் காலத்தில், அந்தச் சார்லி சாப்ளின் ``தில்'' '' என்றொரு ஒரு திரையிசைப் பாடல் புகழ்ந்தது.

       இப்படிப்பட்ட ``தில்'' கலைஞன் சாப்ளினின் பிறந்த நாள் ஏப்ரல் மாதம் 16ம் தேதி!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா