க.ராமையன்
காட்டையும்,
மேட்டையும் வெட்டிச் சமமாக்கி, விளை
நிலங்களாய், கம்மாய்கள்,
ஏரிகள், குளங்கள் என உருவாக்கி, சேற்றிலும், சகதியிலும், வெயிலிலும், குளிரிலும், உருண்டு, புரண்டு
காலம் காலமாய் வறுமையின் கொடுமைகளைச் சந்தித்து, ஆலயத்திற்குள் நுழையத் தடை, டீ குடிக்கத்
தனிக் குவளை,
காலில் செருப்பணிய முடியாமல், தோளில் துண்டு போட முடியாமல், பொதுக்
கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியாமல், வாழ்வதும், சாவதும்
ஊர்களின் ஓரத்தில்தான். இறந்தாலும் தனி சுடுகாடு, பண்ணையார்களின் அடக்குமுறைக்கு
அடிபணியாத தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகளை வாயில் சாணிப்பால் ஊற்றி, சவுக்கால்
அடித்து, உதைத்து கொடுமைகள் புரிந்த நிலவுடமையாளர்களுக்கு எதிராகத் தலைநிமிரச் செய்த இயக்கம்
செங்கொடி இயக்கம்!

