Showing posts with label B.டில்லி. Show all posts
Showing posts with label B.டில்லி. Show all posts

Thursday, 22 January 2015

எலுமிச்சை

B.டில்லி 
சித்த வைத்தியர்
99401 66297



குற்றமற்ற எலுமிச்சங்காய் வாதம், பித்தம், கபம், பித்த உஷ்ணம் போன்ற நோய்களைத் தீர்க்கும். உடல் உஷ்ணத்தையும் தாகத்தையும் தணிக்கும். வயிற்றில் வெப்பத்தை உண்டாக்கி வாயுவைக் கண்டிக்கும். எலுமிச்சம் பழத்தைவிட காய்களை உப்பில் ஊற வைத்து ஊறுகாய்களாக பயன்படுத்துவதே சிறந்தது. இந்த ஊறுகாயைச் சிறிது அன்னத்துடன் சுவைத்து சாப்பிட சீரண சக்தியைக் கொடுத்து வாந்தியை நிறுத்தும்.

எலுமிச்சையின் சாறு 40 மி.லி. அளவுடன் வேண்டிய அளவு தண்ணீர் சேர்த்து சிறிது சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட, உடல் களைப்பு, தாகம், உடல் உஷ்ணம் நீங்கும். அம்மை நோயினால் வரும் சுரம், கொப்புளங்கள் மற்றும் அம்மை நோயின் பாதிப்பு குறையும். எலுமிச்சை சாறுடன் சிறிது உப்பு, சர்க்கரை சேர்த்து குடித்து வர சுரக்கட்டிகள் குணமாகும்.

இந்தியா, சீனா போன்ற நாடுகளில் எலுமிச்சையை விஷ முறிவு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். துணி மற்றும் சில பொருட்களின் மீது படிந்த சில குறிப்பிட்ட கறைகளை எலுமிச்சை சாறு கொண்டு போக்கலாம். தலைமுடியை மென்மையாக வைக்க எலுமிச்சை பழச்சாறு பயன்படுகிறது. முகம் மற்றும் உடலில் உள்ள அழுக்கு, வேர்வை இவைகளை நீக்கப் பயன்படுகிறது.

உடல் உஷ்ணம் அதிகமுள்ளவர்கள் குழம்பில் புளிக்கு பதிலாக எலுமிச்சை சாற்றினை உபயோகித்து குணமடைகின்றனர். சில சித்த மருந்துகள் எலுமிச்சை சாறு கொண்டு சுத்தி செய்யப்படுகின்றன.

என்ன.. தொழிலாளர்களே... இரண்டு இதழ்களில் எலுமிச்சையின் பயனைக் கூறிவிட்டேன். இதைப் பயன்படுத்துவது உங்கள் கையில்!






Wednesday, 20 August 2014

எலுமிச்சை நார்ச்சத்து நிறைந்துள்ள உயர்ந்த கனி...

ஆ.டில்லி
சித்த வைத்தியர்
99401 66297

நாம் சாதாரணமானவை என நினைக்கும் பொருட்கள் கூட பல சமயங்களில் உயிர் காக்கும் சஞ்சீவினியாய் பயன்படுகின்றன. இந்த வகையில் விஷச் சாராயம் அருந்தி, கண்பார்வை மங்கி, உயிர் போகும் நிலையில் உள்ள ஒருவரை சாதாரணம் என்று நினைத்த எலுமிச்சைப் பழம் கொண்டு பிழைக்க வைத்து, கண் பார்வையை மீட்டுக் கொடுத்த அதிசயத்தை எப்படிப் பாராட்டுவது?

விஷச்சாராயம் அருந்திய பலர் கண் மங்குதல் ஏற்பட்டு, படிப்படியாக இறந்து கொண்டிருந்த நிலையில், ஒருவர் மட்டும் சில எலுமிச்சைப் பழங்களைத் தோலுடன் மென்று சாப்பிட்டார்; கண்பார்வைத் தெளிவடைய, மேலும் சில பழங்களைச் சாப்பிட்டார்; அரை மணி நேரத்தில் மயக்கம் தெளிந்து, கண்பார்வையும் பெற்று குணமடைந்தார். ஆனால் இவருடன் விஷச் சாராயம் சாப்பிட்ட அனைவரும் இறந்து போனது பெரிய சோகம். இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த எலுமிச்சையின் பயன்பாட்டை விளக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

Saturday, 28 June 2014

அனுபவ மருந்துகளும், உணவில் மருந்துகளும்

B.டில்லி 264/L602 சித்த வைத்தியர் - 8122309822

சர்க்கரை (நீரிழிவு) வியாதிக்கு

சர்க்கரை வியாதிக்கு எத்தகைய உடல் வாகுடையவர்கள், எப்படிப்பட்ட எண்ணெய்க் குளியலை மேற்கொள்ள வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.

வாத உடம்பு உடையவர்கள் நெல்லிக் காய் தைலம், கரிசாலைத் தைலம், வாத ராஜாங்கத் தைலம் போன்றவைகளைத் தேய்த்து குளிக்க வேண்டும். கப உடம்புடையவர்கள் நொச்சி தைலம், சுக்குத் தைலம், இஞ்சித் தைலம், வேறு முறைகளில் தயார் செய்யப்பட்ட கரிசாலைத் தைலம் போன்றவைகளைத் தேய்த்துக் குளிக்க வேண்டும். இந்த எண்ணெய்க் குளியல் ஆண்கள் புதன், சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் வெள்ளிக் கிழமைகளிலும் காலை 8 மணிக்குள் குளிக்க வேண்டும். தலையில் எண்ணெய் ஊறும் நேரம் 1\2 மணியிலிருந்து 1 மணி நேரம் வரை. சீயக்காய்த் தூள் தேய்த்து வெண்ணீரில் தான் குளிக்க வேண்டும். எண்ணெய்க் குளியலன்று பகல் உறக்கம், உடல் உறவு, குளிர்ச்சியான பொருட்கள் இவைகளைத் தவிர்க்க வேண்டும். இந்த எண்ணெய்க் குளியல் செய்யும் போது உள்ளுக்கும் மருந்து கொடுக்க வேண்டும். சர்க்கரை வியாதி பூரணமாக குணமாகும். <ஆதாரம்: உயிர்நாடி மாத இதழ்>

Sunday, 27 April 2014

சர்க்கரை (நீரிழிவு) வியாதிக்கு

அனுபவ மருந்துகளும், உணவில் மருந்துகளும்

இந்த வியாதியை நுணுக்கமாக கவனித்துப் பார்த்தால் முன்பே கூறியது போல், இரத்தத்தில் சர்க்கரை என்பது, உப்பு போன்றதுதான். ஆகவே இவர்கள் எந்த மாதிரியான உடலுள்ளவர்களாக இருந்தாலும் <வாத, பித்த, கபம்> அவர்கள், புளிப்பு உணவுகளை நிறுத்துவது அல்லது குறைப்பது நல்லது. தனித்து புளிப்பு உணவைச் சாப்பிடக் கூடாது. ஒரு சிலருக்கு கசப்பு உணவான வேப்பிலை, ஆடுதீண்டாபாளை, சிறியாநங்கை, பாகற்காய், வெந்தயம் போன்றவற்றைச் சாப்பிட சர்க்கரை குறையும். இன்னும் சிலருக்கு துவர்ப்பான உணவான நெல்லிக்காய், கடுக்காய், நாவற்கொட்டை போன்றவை சாப்பிட குறையும். அதாவது வாத உடம்புள்ளவர் <குண்டான இறுகிய> துவர்ப்பு சுவையுள்ள உணவுகளைச் சாப்பிட்டால் அவருக்குப் பொருந்தாது. பித்த உடம்புள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆகவே, மூன்று விதமான உடல்வாகுடையவர்களுக்குத் தகுந்தாற்போல் மருந்துகளைக் கையாள வேண்டும். 1. குண்டான இறுகிய வாத உடம்புடையவர்களுக்கு இயற்கையிலேயே எண்ணெய்ச் சத்து <கொழுப்புச்சத்து> மிகுந்திருக்கும். 2. ஒல்லியான பித்த உடம்புடையவர்களுக்கு இயற்கையிலேயே உப்பு சத்து மிகுந்திருக்கும். 3. குண்டான இறுக்கமல்லாத தளர்ந்த உடம்புடையவர்களுக்கு <கபம் உடம்பு> இயற்கையிலே நீர்ச்சத்து மிகுந்திருக்கும். 

Thursday, 26 December 2013

சர்க்கரை (நீரிழிவு) வியாதிக்கு அனுபவ மருந்துகளும், உணவில் மருந்துகளும்

B.டில்லி, சித்த வைத்தியர்
8122309822

      1. பொன்முசுட்டை, சிறுகட்டுக்கொடி, ஆவாரை, வெள்ளைப்பூத்துத்தி, நாவல்விதை, சிறுகுறிஞ்சான், மாங்கொட்டைப் பருப்பு இவைகளைச் சம அளவில் எடுத்து, வெயிலில் காயவைத்து, நன்றாக இடித்து சூரணமாக்கி சலித்துக் கொண்டு 1\2 ஸ்பூன் வாயில் போட்டு ஆறிய வெந்நீர் அல்லது சுத்தமான தண்ணீர் குடிக்க வேண்டும். காலை + மாலை மூன்று நாட்களில் அடிக்கடி சிறுநீர் போவது நிற்கும். நாட்பட்ட நீரிழிவு நோயாக இருந்தால், தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட வேண்டும். ஆச்சரியப்படுமாறு நீரிழிவு எனும் சர்க்கரை வியாதி குணமாகும். இது 3 தலைமுறையாக அனுபவத்தில் பலன் கண்ட மருந்து.
ஆதாரம் : சோமானந்தா எனும் கொல்லிமலை அனுபவ சித்த மருத்துவம்.
குறிப்பு : மருந்து சாப்பிட ஆரம்பிக்கும் நாட்கள் செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக் கிழமை.

Tuesday, 15 October 2013

மருத்துவப் பொன்மொழிகள்



B.டில்லி, சித்த வைத்தியர், 8122309822
தண்ணீரைப் பற்றி

  • தூய தண்ணீர் உலகின் முதல் மாமருந்து
  • நீரின்றி வானும் இல்லை; வையகமும் இல்லை.
  • அருஞ்சுனை நீருண்ண, அப்போதே நோய் தீரும்.
  • ஆற்று நீர் வாதம் போக்கும், அருவி நீர் பித்தம் போக்கும்,
  • ஊற்று நீர் கபம் போக்கும், சோற்று நீர் (பழுது) மூன்று போக்கும்.
  • உணவும் தண்ணீர், உண்ண வைப்பதும் தண்ணீர்!

Saturday, 17 August 2013

செம்பருத்திப் பூவின் மகத்துவம்

B.டில்லி, சித்த வைத்தியர், 8122309822

செம்பருத்திப் பூ சர்பத் செய்யும் முறையும் அதனால் ஏற்படும் பலன்களையும் சென்ற இதழில் படித்தோம். இந்த சர்பத்தின் பலன்களை மேலும் காண்போம்.
      சிறு குழந்தைகளுக்கு வரும் இதய வியாதிகளுக்கு எந்தமருந்தைக் கொடுத்தாலும் பயன் தருவதில்லை. குழந்தைகளுக்கு உஷ்ணம் அதிகரித்து, உடம்பு இளைத்து வயிற்று உப்பல் ஏற்பட்டு அவதிப்படும் சமயத்தில் இந்த செம்பருத்தி பூ சர்பத் குழந்தைகளின் வயதுக்கு தக்கவாறு கொடுத்தால் குழந்தைகள் பூரண குணமடையும்.

Friday, 14 June 2013

வீட்டு வைத்தியம்



B.டில்லி 264/L602 சித்த வைத்தியர் - 8122309822

செம்பருத்திப் பூவின் வேறு பெயர்கள் சப்பாத்து, சம்பரத்தை ஆகும். இலை, பூ, வேர் ஆகிய உறுப்புகள் பயன்படும். வெள்ளைப்படுதல், குருதி வெள்ளை, இருதய சம்பந்தமான நோய்கள், ஆண்மை குறைவு இவைகள் நீங்கும்.
மருந்து செய்முறை: வேலூர் சித்த மருத்துவர் கண்ணப்பர் கூறிய அனுபவ முறைகள். ஐந்து இதழ்கள் உள்ள ஒற்றை அடுக்கு செம்பருத்திப் பூக்களை எடுத்து அதில் உள்ள மகரந்தத்தை எடுத்துவிட்டு, பூக்களை மட்டும் 200 மில்லி தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு, இரண்டு ஸ்பூன் தேன் கலந்து 50 மில்லியாக சுண்ட வைத்து தினமும் காலையிலும் மாலையிலும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இது போல் 3 மாதங்கள் சாப்பிட்டால் இதயத்தில் உள்ள ஓட்டை சரியாகிவிடும். இதய ஓட்டையால் வரும் பிரச்சனைகளும் சரியாகிவிடும். இம்முறையைப் பயன்படுத்தி இதயம் சார்ந்த நோய்களை குணப்படுத்திக் கொண்டு மூன்று குழந்தைகளையும் பெற்றெடுத்து ஜூனியர் விகடனில் செம்பருத்திப் பூவின் மகத்துவம் பற்றி பேட்டியளித்தார் ஒரு பெண். (20 வருடத்திற்கு முன் ஜூவியில் அட்டைப்படத்திலேயே போடப்பட்டது)

Sunday, 21 April 2013

வீட்டு வைத்தியம்


B.டில்லி, சித்த மருத்துவர், செல்: 8122309822

 

தேவையான பொருட்கள்: இஞ்சி, எலுமிச்சம்பழம், நல்ல தேன்.

செய்முறை: நல்ல இஞ்சியைக் கழுவி, மேல் தோலைச் சீவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்சியில் அரைத்துக் கூழாக்கி, முழு வெள்ளைத்துணியில் போட்டுப் பிழிந்து, சாறு எடுத்து தெளிய வைக்க வேண்டும். 1\2 மணி நேரம் கழித்து, வேறோரு பாத்திரத்தில் வடித்துக் கொள்ள வேண்டும். அடியில் வெள்ளையாக சுண்ணாம்பு படிந்திருக்கும் .அதை நீக்க வேண்டும். இரண்டாவதாக எலுமிச்சையை இரண்டு துண்டாக்கி சாறெடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு சாறுகள் 500 கிராம், 500 கிராம் அளவு இருக்க வேண்டும். இந்த இரண்டு சாறுகளையும் ஒன்றாகக் கலந்து நல்ல தேன் ஒரு கிலோ (1000 கிராம்) அளவு கலந்து 10 நிமிடம் அல்லது 20 நிமிடம் வரை சூடு செய்ய வேண்டும். முதலில் கொதி வந்தவுடன் இறக்கி விட வேண்டும். அதன்பின் கண்ணாடி பாட்டிலில் ஊற்றிப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

Tuesday, 25 December 2012

மருந்தில்லா மருத்துவம்



B.டில்லி 264/L602 சித்த வைத்தியர் - 8122309822

`அரச மரத்தைச் சுற்றி அடிவயிற்றைத் தொட்டுப்பார்' என்பார்கள். தற்போது நவீன மருத்துவ உலகில் இலட்சங்களைச் செலவு செய்து விட்டு குழந்தைக்காக ஏங்கி நிற்கும் தம்பதிகளுக்கு இந்த முதுமொழியில் தீர்வு இருக்கிறது என்பதே சித்தர்களின் கூற்று. அரச மரத்தின் மகத்துவம் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறோம். தற்போது குழந்தைகள் இல்லாத தம்பதிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளைக் காண்போம்.

Saturday, 13 October 2012

மருந்தில்லா மருத்துவம்



B.டில்லி 264/L602 சித்த வைத்தியர் - 8122309822

எட்டு எட்டா மனுஷன் வாழ்வப் பிரிச்சுக்கோ...!

இப்ப எந்த எட்டில் நீ இருக்கே புரிஞ்சுக்கோ...!

      - இது ரஜினியின் `பாட்ஷா' படத்தில் வரும் பாடல். இந்த எட்டுக்கும் மனிதனின் உடலுக்கும் உயிருக்கும் நெருங்கியத் தொடர்பு இருக்கின்றது. இரண்டு சக்கர வாகனத்தில் 8 (எட்டு) போட்டு காட்டினால்தான் ஓட்ட (லைசன்ஸ்) அனுமதி கிடைக்கும்.

Wednesday, 1 August 2012

மருந்தில்லா மருத்துவம்



B.டில்லி 264/L602,
சித்த வைத்தியர், செல்: 8122309822

      அரச மரத்தைச் சுற்றி அடிவயிற்றைத் தொட்டுப்பார் _ என்பார்கள். தற்போது நவீன மருத்துவ உலகில் இலட்சங்களைச் செலவு செய்துவிட்டு குழந்தைக்காக ஏங்கி நிற்கும் தம்பதிகளுக்கு இந்த முதுமொழியில் தீர்வு இருக்கிறது என்பதே உண்மை. இதை நான் சொல்லவில்லை. சித்தர்கள் சொல்லி இருக்கிறார்கள்.