Showing posts with label அ.அப்துல் வாஹிப். Show all posts
Showing posts with label அ.அப்துல் வாஹிப். Show all posts

Sunday, 21 April 2013

பளிச்சென்று வைத்தல் - SEISU - SHIWE


அ.அப்துல் வாஹித், 752/36991

 

5 S கொள்கைகளில் ஒன்றான ``பளிச்சென்று வைத்தல்'' உற்பத்தி. பகுதிகளில் கடைபிடிக்கப் படுகிறது. உற்பத்தி  செய்யப்படும் பொருட்களின் மீது கடைப்பிடிக்கப்படும் நடைமுறை, நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மீது காண்பிக்கப்படுகிறதா என்றால் கவலையோடு ``இல்லை'' என்றுதான் சொல்ல முடியும்.

      உதாரணத்திற்கு நமது தொழிலாளர்கள் பயணிக்கும் சார்ட்டர்டு டிரிப் பேருந்துகளின் மோசமான நிலை! பேருந்துகளின் இருக்கைகள் தூசிப் படிந்து, பல நாட்களாக சரிவரத் துடைக்காமல் அழுக்கேறிக் கிடக்கும் அவல நிலை! `பளிச்சென்று வைத்தல்' இதற்குப் பொருந்தாதா?

Tuesday, 25 December 2012

டீலக்ஸ் கொள்ளை



அ.அப்துல் வாஹித்
752\36991

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் டீலக்ஸ் பஸ்கள்அடிக்கும் கட்டணக் கொள்ளை சொல்லி மாளாது. உதாரணத்திற்கு சென்னை கடற்கரை பேருந்து நிறுத்தத்தில் இருந்து மெரினா கடற்கரை செல்வதற்கு 6டி என்ற சொகுசு மற்றும் விரைவுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. சாதாரண பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. இதற்குக் கட்டணம் ரூ.13\-, ரூ.9\- இடைப்பட்ட தூரம் 3 அல்லது 4 கி.மீ. மட்டுமே.

Saturday, 13 October 2012

தொழிலாளர் ஒற்றுமைக்குத் தடையாய் இருப்பது எது? (முதல் பரிசு பெற்ற கட்டுரை)



அ.அப்துல் வாஹிப் 752\36991

      தொழிலாளர்களுக்குள் ஒற்றுமை என்பது இல்லாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், இந்தக் கட்டுரையில் அந்த அளவுக்கு விவரிக்க இயலாத காரணத்தால் ஒரு சில கருத்துக்களை மட்டுமே குறிப்பிட விரும்புகிறேன்.

      சுயநலம் கொண்ட முரண்பாடான கருத்துக்கள் அதிகம் இருப்பதால், எந்த ஒரு செயல் மேற்கொண்டாலும் மாறுபட்ட கருத்துக்கள் எதிரொலிக்கின்றன.