Showing posts with label K.N.சஜீவ்குமார். Show all posts
Showing posts with label K.N.சஜீவ்குமார். Show all posts

Wednesday, 21 January 2015

அறிவியலும்! அரசியலும்!!

K.N.சஜீவ்குமார்
217\37918

நீயா நானா என்ற நிகழ்ச்சியை நம்மில் பலர் விரும்பிப் பார்ப்பதுண்டு. இத்தகைய விவாதங்களில் மிகவும் பழையது, கடவுள் உண்டா இல்லையா என்பது. இந்த விவாதத்தில், ``உலகம் இவ்வாறு இயங்குவதற்கு கடவுள் தேவையில்லை என்று கடவுளை மறுப்பதோடு நின்றுவிடாமல், கடவுளை மனிதன் படைப்பதற்கான சூழலையும் கண்டறிவதில் பொருள் முதல்வாதிகள் ஆர்வம் காட்டினர்.
மனிதன் விவசாயத்தைக் கண்டுபிடித்து நிலத்தை சொத்தாக்கிய போது, அதைக் காப்பாற்ற படைபலம் மட்டும் போதவில்லை. மனிதர்களைக் கட்டுப்படுத்த மதம் பயன்பட்டது.
அறிவியல் வளர்ந்த இந்தக் காலத்திலேயே ``குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான்'' என்ற அறிவியல் உண்மையை ஏற்காத மனிதர்கள் எல்லா மதங்களிலும் உண்டு. எனவே, கம்ப்யூட்டர், செல்போன் போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகளை பயன்படுத்துதல் வேறு, அறிவியல் பார்வை என்பது வேறு!
அறிவியல் பார்வை ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்வி கேட்கும். ஆனால், மதம் கேள்வி கேட்காமல் நம்பச் சொல்லும். அறிவியல், தகுந்த ஆதாரத்தைக் காட்டி நிரூபித்தால் அதை ஏற்கும். ஆனால், மதம், அறிவியல் உண்மைகளை சொன்னவர்களைத் தண்டிக்கும் <உ_ம்> புரூனோ, கலீலியோ.
நியூட்டன், ஐன்ஸ்டின் போன்ற விஞ்ஞானிகள் சொன்னது தவறு என்று நீங்கள் நிரூபித்தால் உங்களுக்கு நோபல் பரிசு நிச்சயம். ஆனால், மதம் சொல்லும் மூட நம்பிக்கைகளைத் தவறு என்று நிரூபித்தால், இன்றைய காலத்திலும் நீங்கள் கொல்லப்படலாம் <உ_ம்> நரேந்திர தபோல்கர்.

ஆனால், அறிவியலின் தாக்கத்தை மறுக்க முடியாமல், பலர் தங்களது பிற்போக்குத்தனத்துக்கு அறிவியலை ஊன்றுகோலாக பயன்படுத்துகின்றனர். தன் வாழ்நாள் முழுவதையும் அறிவியல் ஆராய்ச்சிக்காக தியாகம் செய்து கண்டுபிடித்த ஒன்றை, இது இந்தியாவில் 6000 வருடம் முன்னரே சொல்லப்பட்டது என்று சர்வசாதாரணமாகக் கூறுவோரிடம் ஒரு கேள்வி, ``6000 வருடமாக இருந்ததை நீங்கள் ஏன் வெளிச்சம் போட்டுக் காட்டவில்லை? ஏன் இந்தியாவைத் தலைநிமிரச் செய்யவில்லை?``

வான சாஸ்திரத்தில் எந்த நவீன கருவிகளும் இல்லாமல் ஆரியபட்டரும், வராகமிரரும் செய்த சாதனைகள் நம்மை பெருமை கொள்ளச் செய்யும். ஆனால் புஷ்பகவிமானம் இராமாயண காலத்திலேயே இருந்தது; நற்ங்ம் இங்ப்ப் பங்ஸ்ரீட்ய்ர்ப்ர்ஞ்ஹ் மூலமாகத்தான் கௌரவர்கள் பிறந்தார்கள் என்று சரடுவிடுவதுதான் ஏற்க முடியாதது.

நமது இதிகாசங்களில் காணப்படும் கற்பனை வளத்துக்காக வேண்டுமானால் ஒரு சபாஷ் போடலாம். கற்பனைகளை கண்டுபிடிப்புகளாக அறிவியல் ஏற்காது. ஹெலிகாப்டர் போன்ற வடிவத்தை வரைந்து வைத்தார் என்பதற்காக, அவர்தான் அதை வடிவமைத்தார் என்று சொல்ல முடியாது. அது கற்பனை அவ்வளவே.

தொழில் புரட்சிக்குப் பின் மதத்தையும், அறிவியலையும் பிரித்துப் பார்த்த ஐரோப்பா முன்னேறியது. சாதி மத அடையாளங்களில் மாட்டிக் கொண்ட இந்தியா அடிமையானது. அறிவியல் கண்ணோட்டம் மதத்தின் அஸ்திவாரத்தை அசைத்துவிடும் என்பதால் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது.

முற்போக்கு கருத்துகளைப் பேசியவர்கள் ``பேய் பிடித்தவர்கள்'' என்று கழுவிலேற்றப்பட்டனர். இதைச் சரி செய்யாமல் தங்கள் அரசியலுக்காக அறிவியலைத் திரித்து வெற்றுப் பெருமை பேசுவது உலக அரங்கில் நம்மைக் கோமாளிகளாக்கும்.

ஆனால், விண்வெளி ஆராய்ச்சியில் இருந்த சிரமங்களுக்கு இடையிலும் நமது விஞ்ஞானிகளின் ``மங்கள்யான்'' சாதனை நம்மை பிரம்மிப்படைய வைக்கிறது. அவர்களுக்கு நமது வாழ்த்துகள்! அறிவியல் வளர்ச்சியில்தான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது.

Wednesday, 20 August 2014

புதிய பானை... பழைய சோறு

K.N.சஜீவ்குமார்
217\37918

தவறான கொள்கைகளால் வரக்கூடிய பிரச்சனைகளை முன்கூட்டியே கணித்துச் சொல்பவர்கள் இடதுசாரிகள். 1991ல் இந்தியா பொருளாதார மந்த நிலையில் இருந்த போது, மன்மோகன் சிங்கை இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்கவல்ல பொருளாதார நிபுணர் என்று ஊடகங்கள் முன்னிறுத்தியது. அவர் கொண்டு வந்த நவீன தாராளமயம் உள்நாட்டு உற்பத்தியைப் பாதிக்கும் என்றும், இறக்குமதியை ஊக்குவிக்கும் என்றும், அதனால் பொருளாதாரம் அடிபடும் என்றும் இடதுசாரிகள் கூறினார்கள். இன்று அதை அனுபவிக்கிறோம்.

Friday, 20 June 2014

தனியார் மயமும் குழந்தைகளும்

K.N.சஜீவ்குமார்
217\37918

            குழந்தைகளின் உலகம் ஒரு தனி உலகம்; அதில் உயிரற்ற பொம்மைகள் பேசும், நிலவு சிரிக்கும், மரங்கள் கதை சொல்லும். ஆனால் இன்றைய முதலாளித்துவம் அந்த அழகிய உலகைக் களவாடி விடுகிறது. எப்படி?
            சமீபத்தில் `யூ டியூப்'ல் பார்த்த ஒரு குறும்படத்தில் பெயில் ஆன ஒரு குழந்தை, தனது ரிப்போர்ட் கார்டை பார்த்துக் கொண்டு வருத்தத்துடன் டிரெயினில் பயணம் செய்து கொண்டிருந்தது. பக்கத்தில் அமர்ந்திருந்த இரு பள்ளி ஆசிரியர்கள் ``இப்படி மார்க் எடுப்பதற்கு பதிலாக டிரெயின்ல இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளலாம்'' என்று சொன்னார்கள். உடனே அந்தக் குழந்தை நமது தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்தின் அர்த்தத்தைக் கேட்டது. ``இதைத் தெரியாத நீங்கள் உயிரோடு இருக்கும்போது, நான் ஏன் சாக வேண்டும்?'' என்று முகத்தில் அறைந்தாற்போல் கேட்டுவிட்டுச் சென்றது.
            தனியார்மயம் வந்த பிறகு பள்ளிகள் நமது சேசிஸ் லைன் போல ஆகிவிட்டது. கல்விக் கூடங்கள் தொழில் கூடங்களாகி குழந்தைகள் மதிப்பெண் பெறும் பொருட்களாகிவிட்டார்கள். பள்ளிக்கு பேர் வாங்கிக் கொடுக்க பிள்ளைகளைக் கசக்கிப் பிழிகிறார்கள். இந்தப் போட்டியில் சிக்கி சின்னாபின்னமாகும் குழந்தைகள் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
            கண் மருத்துவர் ஒருவர் செய்த ஆய்வில் கார்ப்பரேஷன் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் கண்ணாடி அணிவது மிகவும் குறைவு என்று கண்டுபிடித்துள்ளார். ஏனென்றால் அவர்கள் வெயிலில் விளையாடுகிறார்கள். அவர்கள் புத்தகப்புழுக்களாக மாற்றப்படுவதில்லை, மனப்பாடம் செய்யும் கருவிகளாக மாற்றப்படுவதில்லை.
            முதலாளித்துவ சமூகத்தில் கல்வி என்பது மனிதகுல நன்மைக்கு பயன்படாமல், முதலாளிகளுக்கு லாபம் கொடுக்கும் சரக்காகவே மாற்றப்பட்டுவிட்டது. ஆங்கிலேயர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட மெக்காலே கல்வி முறை, அவர்களது வர்த்தகத்திற்கு ஏற்ற குமாஸ்தா வேலைக்கு நம்மைத் தயார் செய்ய பயன்பட்டது. 1857-ன் முதல் சுதந்திரப் போரில் இந்தக் கல்வி பெற்ற நம் நாட்டவர் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக நின்றனர்.
            சுதந்திரத்திற்குப் பிறகு அண்ணல் அம்பேத்கர் வகுத்த அரசியல் அமைப்புச் சட்டம், ``கல்வி என்பது ஜனநாயக, சோசலிச, மதச்சார்பற்ற, சமத்துவ, சமதர்ம சமூகத்தைப் படைக்கக் கூடிய குடிமக்களை உருவாக்க வேண்டும்'' என்கிறது. ஆனால் தபஐ அஸ்ரீற் 2009 அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான நவீன தாராளமயத்தை நடைமுறைப்படுத்தக்கூடிய, பாகுபாடுகள் உடைய பல அடுக்குக் கல்வி முறையை அமல்படுத்துகிறது.
            நவீனத்துவம் வந்த பிறகு மாணவர்கள் படிக்க மட்டுமே செய்ய வேண்டும்; சமூக அக்கரை கொள்ளக்கூடாது; படித்து முடித்து கல்விச் செலவை ஈடுகட்டும் ஒரு நல்ல வேலையில் அமர வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். சமீபத்தில் நடந்த தேர்தலில் ஓட்டுகூட போடாமல் ஐடி துறை சார்ந்தவர்கள் வேலைக்கு செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். ஓட்டுரிமையை பெறுவதற்காக நடைபெற்ற போராட்டங்கள் பற்றித் தெரியாத ஒரு தலைமுறையை இந்தக் கல்வி நமக்கு தந்துள்ளது. நவீன அடிமைகளாக முதலாளித்துவம் நம்மை மாற்றியிருக்கிறது.
            எனவே குழந்தைகளைத் துன்புறுத்தாத, கல்வி கற்பதை ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக மாறும் வகையில் கல்வி அமைய வேண்டும். காசு இருந்தால் கல்வி என்ற முறை மாறி, அரசு எஈட-ல் 6% கல்விக்காக ஒதுக்க வேண்டும். பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் கட்டாயமாக வேண்டும். கழிப்பறைகள் இல்லாததால் வளர்ந்த பெண் குழந்தைகள் படிப்பை கைவிடுவது இந்தியாவில் அதிகம்.

            குழந்தைகளைச் சிந்திக்க வைக்கும், கருத்தைத் தடையின்றி வெளிப்படுத்தும் தாய் மொழி வழிக்கல்வியை அரசு கொண்டு வர வேண்டும். ஆங்கிலம் என்பது ஒரு மொழி, அதுவே அறிவாகாது என்று பெற்றோரும் உணரவேண்டும். மலர்கள் இயற்கையாக மலர்ந்தால் மணமுண்டாகும். அதை பலாத்காரமாக திறந்தால் மொட்டிலேயே கெட்டுவிடும்.

Sunday, 27 April 2014

காட்சியும்... கருத்தும்...

K.N.சஜீவ்குமார்
217\37918

காட்சி 1 : Jack_ம், Rose_ம் டைட்டானிக் கப்பலில் பயணம் செய்கிறார்கள். கப்பல் பனிப்பாறை மீது மோதி மூழ்குகிறது. கடல் கடந்து கரையை எட்ட வேண்டிய கப்பல், கடலின் அடியில் இருக்கும் தரையைத் தொட்டுவிடுகிறது. பனிப்பாறைகளின் தன்மை என்னவென்றால் 1\3 பாகம் தான் வெளியில் தெரியும், பாக்கி 2 \3 பாகம் வெளியில் தெரியாமல் நீருக்கு அடியில் இருக்கும்.

காட்சி 2 : ஒரு திருடன் தன்னை பிடிக்க ஓடிவரும் மக்களிடம் பிடிபடாமல் இருக்க தானும் அவர்களுடன் சேர்ந்து ``திருடன்! திருடன்!! பிடியுங்கள்!'' என்று கத்திக் கொண்டே ஓடுகிறான். எதிரே வரும் மக்கள் யாரைப் பிடிப்பது என்று தெரியாமல் விழிக்கின்றனர். நம் குடும்பங்களில் பிள்ளைகள் யாராவது அரசியல்வாதி ஆகப்போகிறேன் என்றால் வருத்தப்படுவோம். அரசியல் ஒரு சாக்கடை என்று அறிவுரை கூறுவோம். ஆனால் அவர்களே பில் கேட்ஸ் அல்லது அம்பானி ஆகப்போகிறேன் என்றால் அகமகிழ்ந்து போகிறோம். மும்பை தெருக்களில் துணிகளை முதுகில் சுமந்து விற்ற அம்பானியை ``உழைப்பால் உயர்ந்தவர்'' என்று கொண்டாடுகிறோம். ஆனால் காலில் கோணியைக் கட்டிக் கொண்டு வெயிலில் வெந்து ``ரோடு'' போடும் தொழிலாளியின் உழைப்புக்கு எந்த விலையும் இல்லை. அவர் உழைப்பால் எந்த உயர்வையும் அடையவில்லை.

Friday, 7 March 2014

இருட்டடிப்பு

K.N.சஜீவகுமார் 217 /37918

      2014 தேர்தல் ஆண்டு. ஒரு தவறான அரசு மத்தியில் அமைந்தால் அதனால் அதிகம் பாதிக்கப்படுவது தொழிலாளர்களே; அதனால் எச்சரிக்கை தேவை. சரியாக வரியை செலுத்துபவன் தொழிலாளி, ஆனால் வரி ஏய்ப்பு செய்து வெளிநாட்டு வங்கிகளில் பணத்தைக் குவிப்பது முதலாளிகள். வரிசையில் நின்று ஓட்டு கூட போடாத பெரு முதலாளிகள், ஆட்சி செய்பவர்களை ஆட்டிப் படைக்கின்றனர். <உ_ம்>: குறைந்தபட்சம் ரூ.10,000 சம்பளம் இருந்தால் தான் வாழ முடியும் என்ற கோரிக்கையில் நியாயம் உள்ளது என்று கூறிய பிரதமர், அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரைத் தடுத்தது யார்?

Thursday, 26 December 2013

யானையும் சங்கிலியும்

K.N.சஜீவ்குமார்
217/37918

      ஒரு கோயிலில் இரு யானைகள் கட்டப்பட்டிருந்தன. அதில் பெரிய யானை சிறிய சங்கிலியாலும், குட்டி யானை பெரிய சங்கிலியாலும் கட்டப்பட்டிருந்தன. இதைப் பார்த்த சிறுவன் யானைப்பாகனிடம் அதற்கான காரணத்தைக் கேட்டான். அதற்கு அந்த யானைப் பாகன், ``யானை குட்டியாக இருக்கும்போது குறும்பு அதிகமாக செய்யும். அது சங்கிலியை அறுக்க முழு சக்தியையும் பயன்படுத்தும்; அப்போது பெரிய சங்கிலியால் கட்டப்பட்டுள்ள போது பல முறை முயன்று இதை தன்னால் அறுக்கவே முடியாது என்ற எண்ணம் மனதில் பதிந்துவிடும். யானை பெரிதாகி சக்தி கூடிய பிறகும் இந்த சங்கிலியை அறுக்க முடியாது என்று எண்ணி எந்த முயற்சியிலும் இறங்காத காரணத்தால் சிறிய சங்கிலியே போதுமானது'' என்றான்.

Tuesday, 15 October 2013

நிழலோடு யுத்தம்

K.N.சஜீவ்குமார், 217/37918

            ஒரு பிரச்சனைக்கு முடிவு தேட வேண்டும் என்றால் அதன் அடி ஆழம் வரை செல்ல வேண்டும் என்றார் காரல் மார்க்ஸ். இன்று நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளான வேலை நாள் இழப்பு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பணவீக்கம், நடப்புக் கணக்கு பற்றாக்குறை ஆகியவற்றின் ஆணிவேர் எது என்று ஆராய்ந்தால், அது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஏகாதிபத்தியம்தான் என்பது நமக்குப் புரியவரும். அதனால்தான், உலகெங்கிலும் உள்ள இடதுசாரிகள், ஏகாதிபத்திய எதிர்ப்பினை முதன்மையாக வைக்கின்றனர். ஒரு நாட்டின் இறையாண்மையைக் காப்பதை முக்கியமாகக் கருதுகின்றனர். இன்று ஏகாதிபத்தியம் போரின்றி, தனியார் மயம், தாராள மயம், உலகமயம் மூலம் ஒரு நாட்டை சூறையாட முடியும்.

Saturday, 17 August 2013

துரத்தப்படுபவர்கள்

கே.என்.சஜீவ்குமார் 217/37918

      உலக வரலாற்றில் முக்கியமான ஆண்டு, சோவியத் நாடு வீழ்ந்த ஆண்டு. அதுவரை இரு துருவங்களாக இருந்த உலகம், அமெரிக்கா என்ற ஒற்றைத் துருவ உலகமாக மாறியது. சோவியத் இருந்தவரை வாலைச் சுருட்டிக் கொண்டிருந்த அமெரிக்கா இன்று உலக ரவுடியாக விளங்குகிறது.
      2001-ல் உலக வர்த்தக மையம் இடிக்கப்பட்ட பின் தீவிரவாத ஒழிப்பு என்கிற பேரில் பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது அமெரிக்கா. பாகிஸ்தானில் அனுமதியின்றி ஆளில்லா விமானம் மூலம் குண்டுகளை வீசியது. சந்தேகத்தின் பேரில் குவாண்டனாமோ சிறையில் பலரை அடைத்து வைத்து பல மனித உரிமை மீறல்களைச் செய்து வருகிறது.

Friday, 14 June 2013

பீச்சாங்கைகள்




K.N.சஜிவ்குமார், 217/37918

மலம் அள்ளுபவன் கைகளில்
எந்தக் கை பீச்சாங்கை...?
      சமீபத்தில் ஒரு வாரப் பத்திரிக்கையில் வந்த கவிதை. ஒரு யுகத்தின் வலியினை இரு வரிகளில் நோக்கிய கவிதை. சென்னை போன்ற மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு உள்ள பெருநகரங்களில் கூட மனிதர்கள் பாதாளச் சாக்கடைகளில் இறங்கி வேலை செய்வதைக் கண்டும் காணாமல் இருந்து விடுகிறோம். பலர் இந்த வேலையில் ஈடுபடும்போது இறந்து போவது தொடர்கதையாகியுள்ளது. அவர்களின் வறுமை காரணமாக கூடுதல் கூலி கொடுத்து இந்த வேலைகளில் சட்ட விரோதமாக ஈடுபடுத்தப் படுகின்றனர். இந்த சட்ட மீறலுக்கும் உரிமை மீறலுக்கும் அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர்.

Sunday, 21 April 2013

கிரிக்கெட் - விளையாட்டின் வரலாறு


K.N.சஜிவ்குமார், 217/37918

 

      ``கிரிக்கெட் எங்களது மதம், சச்சின் எங்களது கடவுள்.'' என்கிற புகழ்பெற்ற வாசகம், கிரிக்கெட் ஆர்வலர்களிடையே பரவலாகச் சொல்லப்  படுவதுண்டு. அந்தளவுக்கு கிரிக்கெட் நம்மை ஆட்கொண்டுள்ளது. ``டச்சு'' மொழியில் ``கிரிக்'' என்றால் ``கோல்''. பழங்காலத்தில், இப்போதைய ஸ்டம்புக்குப் பதிலாக ஏறக்குறைய அதே அமைப்புடைய ``விக்கெட்'' பயன்படுத்தினர். எறியப்படும் பந்து விக்கெட்டில் படாமல் தடுக்க கோலைப் பயன்படுத்தியதால், இது கிரிக் + விக்கெட் = கிரிக்கெட் ஆனது என்று கூறுவர். 1550ல் சர்ரே என்ற இடத்தில் கிரிக்கெட் விளையாடியதற்குச் சான்றுகள் உள்ளன. ஆங்கிலேயர் ஆண்ட அனைத்து நாடுகளிலும் கிரிக்கெட் விதைக்கப்பட்டு, அவர்தம் பண்பாட்டின் பாகமாகவே மாறிப்போனது. கோமான்களும், அரச குடும்பத்தினரும் விளையாடும் பொழுதுபோக்கானது. அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெர்னார்ட்ஷா ஆங்கிலேயரிடம் இருந்த வெறுப்பினால் இதை ``முட்டாள்களின் விளையாட்டு'' என்று கிண்டலடித்த கதையும் உண்டு.

Thursday, 21 February 2013

விளையாட்டு என்றால் விளையாட்டா என்ன?

கே.என்.சஜீவ்குமார் - 217/37918

      விளையாட்டு ஒரு சிறந்த பொழுதுபோக்கு மட்டுமல்ல; மக்களுக்கு பல நோய்களும், கலப்பட உணவுகளும் கிடைக்கும் இக்காலத்தில் அது அவசியமானதும் கூட. ஆஸ்திரேலியாவும், நெதர்லாந்தும் உலகின் ஆரோக்கியமான நாடுகளாகக் கருதப்படுகின்றன. இந்நாடுகளில் 1%க்கும் குறைவான பேர்களுக்கு மட்டுமே இதயநோய் வருகிறது. காரணம் இந்நாடுகள் விளையாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஆகும். ஆனால், இந்தியாவில் தனியார்மயம், தாராளமயம், உலகமயத்திற்கு பின் வயல்களும், ஏரிகளும் காணாமல் போவதுபோல, விளையாட்டு மைதானங்களும் ரியல் எஸ்டேட் முதலைகளின் பசிக்கு இரையாகின்றன. விளைவு, பணம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, தீய பழக்கங்களுக்கு ஆளாகும் இளைஞர் சமூகத்தை உருவாக்கி வைத்துள்ளோம். உதாரணத்திற்கு, டெல்லி மாணவி கற்பழிப்பில் ஒரு குற்றவாளிக்கு வயது 17 மட்டுமே.

Tuesday, 25 December 2012

யார் அவர்கள்?



K.N.சஜீவ்குமார்
217\37918

      நாடு விடுதலை அடைந்து 66 ஆண்டுகள் ஆகிறது. ஆனாலும் வெள்ளையர்கள் காலத்தில் இருந்த உழைப்புச் சுரண்டல் இன்றளவும் நீடிக்கிறது. ஒரு வித்தியாசம், வெள்ளை முதலாளிக்குப் பதிலாக உள்ளூர் முதலாளிகள் அந்த இடத்தை நிரப்பியிருக்கிறார்கள். நம் நாட்டின் ஒரு பகுதியில் உள்ள மக்கள் வேறு பகுதிகளில் கொடூரமாக சுரண்டப்படுகிறார்கள்.

Saturday, 13 October 2012

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்



K.N.சஜீவ்குமார் 217\37918

வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள். ஆனால் நம் அமைச்சர்களும் அதிகாரிகளும் அடிக்கும் காமெடிகளுக்கு வாய்விட்டுச் சிரித்தாலும், நமக்கு வயிற்றெரிச்சலும், இரத்தக் கொதிப்பும்தான் வருகிறது.

      ஐஸ்கிரீம் 20 ரூபாய் கூடினாலும் மக்கள் கவலைப்படுவதில்லை. ஆனால் அரிசி விலை ரூ.2 கூடினாலும் அவர்கள் போராட்டத்தில் இறங்கிவிடுகிறார்கள் என்று ப.சிதம்பரம் காமெடி செய்தார். உணவுக் கிடங்குகளில் எலியும், புழுவும் தின்னும் அரிசியை தங்களுக்குக் கேட்கும் மக்களின் போராட்டம் அவருக்கு எரிச்சலை ஏற்படுத்துவது ஏன்?

Wednesday, 1 August 2012

இனிக்கும் பொய்களும் கசக்கும் உண்மைகளும்



K.N.சஜீவ்குமார்
217/37918

      நமது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் கவலைக்கிடமாகவுள்ளது என்று ஒப்புக் கொண்டார். இதிலிருந்து மீண்டு எழுவதற்கு சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு போன்ற சீர்திருத்தங்களை மிக விரைவாக அமுல்படுத்த வேண்டும் என்று பல பொருளாதாரப் புலிகள் கூறுகின்றனர். அவர்கள் கூறும் பொய்கள் வருமாறு.