Wednesday 13 February 2013

கிரைம் ஸ்டோரி - குற்றம் (சட்டம் என்ன சொல்கிறது?)

பிரேம் என்.பிரேமராசன், பி.எஸ்.சி., பி.எல்.,


      கடந்த இதழில் குற்றம் என்பதன் தேவைகள் (எலிமென்ட்ஸ் ஆப் கிரைம்) குற்றத்தின் வகைகள், பிரிவுகள், இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.) 1860 படி என்னென்ன தண்டனைகள் என்பதைப் பகிர்ந்து கொண்டோம். இதன் தொடர்ச்சியாக எங்கு, எப்படி, எதனால் குற்றங்கள் ஏற்படுகின்றன. அதற்கான தண்டனைகள் என்னென்ன என்பது பற்றி இப்போது காண்போம்.

குற்றம் உருவாகும் அடிப்படைகள்: சமுதாயச் சீர்கேடு, குடும்பச் சீர்கேடு, உடைந்த குடும்பம் (புரோக்கன் பேமிலி) கணவன்-மனைவி சண்டை, வறுமை, ஊடகங்கள் மூலம் குற்றச் செய்திகள், வேலையின்மை, அதிக ஜனத் தொகை பெருக்கம், மன இறுக்கம், அரசியல் சூழ்ச்சி, மது அருந்துவது, செக்ஸ் ஆகியவை குற்றம் உருவாக அடிப்படை காரணங்களாக உள்ளன. (டெல்லியில் பாலியல் வன்முறையில் மாண்டு போன மருத்துவக் கல்லூரி மாணவியின் இறப்புக்குக் காரணம் - மதுவினால் ஏற்பட்ட குற்றம். பல பாலியல் குற்றங்களுக்கு மது குடித்தலும், செக்ஸ் வெறியும் தான் காரணமாக உள்ளன.)
குற்ற வகைகள்: 1) திட்டமிட்ட குற்றம் (ஆர்கனைஸ்ட் கிரைம்)
2) வெள்ளை காலர் குற்றம் (ஒயிட் காலர் கிரைம்) 3) இணையம் மற்றும் தகவல்தொடர்பு சாதனங்கள் மூலம் குற்றம் (சைபர் கிரைம்), 4) போதை சம்பந்தமான (மாத்திரை, மது அருந்துதல்) குற்றம்.
      இவைகள் மூலமே கொலை, கொள்ளை, கடத்தல், வரி ஏய்ப்பு, கலப்படம், பாலியல் தொந்தரவு, லஞ்சம், விபச்சாரம், கேம்ப்ளிங், நில அபகரிப்பு, போலி பத்திரம், கிரெடிட் கார்டு மோசடி, அரசுப் பணம் மோசடி, பொய்யான சான்றுகள் கொடுப்பது போன்ற குற்றங்கள் ஏற்படுகின்றன.
தண்டனை: (இந்திய தண்டனைச் சட்டம்) : தண்டனை என்பது சட்டப்படி குற்றவாளி திருந்தி நல்ல மனிதனாக சமுதாயத்தில் வாழ வேண்டும் என்பதாகும் (பனிஷ்மென்ட் ஆக்ட்). அதற்காக உருவாக்கப்பட்டதுதான் சிறைச்சாலை, பரோல் (ஏஸ் பெர் பிரிசன் ஆக்ட்) போன்றவைகள்.
      ஆக குற்றங்கள் குறைய, ஒழிக்க மேற்கண்ட அடிப்படைக் காரணங்கள் நீங்க வேண்டும்.
      ``சாலையோரத்தில் வேலையற்றதுகள்
      அதன் உள்ளத்தில் விபரீத எண்ணங்கள்.''
                        - என்றார் பேரறிஞர் அண்ணா
வேலையின்மை எவ்வளவு பெரிய விபரீதத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே குற்றமற்ற சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் கை கோர்ப்போம். குற்றங்கள் ஒழிய, சிறைச்சாலைகள் தேவையில்லை என்ற நிலை உருவாக இன்று முதலே செயல்படுவோம்! வெற்றி இலக்கை எட்டுவோம்!!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா