Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Saturday, 28 June 2014

நீதானே என்தன் பொன்வசந்தம்

S.கெஜராஜ்
375\K700
Mechatronics

தனது வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டுமென கற்பனையில் கோட்டை கட்டி வைத்திருந்தானோ அதே அழகான உருவம் அந்த பில் கவுண்டரில் தர்ம சங்கடத்தில் நெளிந்த போது ஆச்சரியத்துடன் அவளது அருகில் நெருங்கி விசாரித்தான் வினோத். ``இல்ல சார்.. பில் போட்டுட்டேன். என்னுடைய டெபிட் கார்டை எடுத்து வர மறந்துட்டேன்'' என்றாள் தயங்கியபடி ஸ்வேதா. நீங்க தப்பா நினைக்கலன்னா நான் குடுக்குறேன்'' என்றான் வினோத். மிகவும் தயங்கிய ஸ்வேதா அரைகுறை மனதுடன் வேறு வழியில்லாமல் ``நாளைக்கு இதே இடத்தில் உங்களிடம் திருப்பிக் கொடுத்துடறேன் சார். ரொம்ப தேங்க்ஸ் சார்'' என்றாள். மனதில் நிறைந்திருந்த தன் வருங்கால மனைவியை நேரில் சந்தித்ததை நினைத்து நினைத்து உறக்கமின்றி புரண்டு படுத்தான் வினோத்.

Friday, 20 June 2014

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்

S.சுகுமார்
266\C858

            பங்களாக்கள் நிறைந்த பகுதியில் சிறு சிறு குடிசைகள் அமைந்த சந்து ஒன்றில் சொகுசுக் கார் ஒன்று ரமாவின் வீட்டு வாசலில் வந்து நின்றது! வீட்டு வாசலில் பாத்திரம் தேய்த்துக் கொண்டிவள் ஆச்சரியத்துடன் பார்த்தாள். காரை விட்டு இறங்கி வந்த ரமேஷ், ``எப்படிக்கா இருக்கிற? புள்ளங்க எங்கக்கா காணோம்?'' என்றான். ``அவங்க ஸ்கூலுக்குப் போயிருக்காங்க. நீ வா'' என்று குடிசைக்குள், தம்பியை அழைத்துச் சென்றாள் ரமா! ``கொஞ்சம் உக்காரு. போய் டீ வாங்கிக்குனு வந்துடறேன்'' என்று பக்கத்தில் உள்ள டீக்கடைக்குச் சென்றாள். ``என்னாடா கார்ல வந்திருக்கே''. ``அது வந்து முதலாளி குடும்பத்தோடு வெளியூருக்குப் போயிருக்காரு. அடுத்த வாரம் தான் வருவாரு! அவரு வர்ற வரைக்கும் இந்தக் கார் நம்மளதுதான். அதான் காரை எடுத்துகினு உன்னையும், குழந்தைகளையும் பார்த்துட்டு போவலாம்னு வந்தேன்'' என்றான் ரமேஷ்.
            அக்காவும் தம்பியும் சேர்ந்தவுடன் ஊரைப் பற்றியும், சொந்த பந்தங்கள் பற்றியும் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டார்கள். ``சரி, நீ குளிச்சிட்டு வா டிபன் சாப்பிடலாம்'' என்று கூறி தகரத் தடுப்பு போட்ட பாத்ரூமைக் காட்டினாள். ``தண்ணி அதோ அந்த மூலைல தவலைல இருக்கு பாரு'' என்று கூறி ஒரு துண்டைக் கொண்டு வந்து கையில் திணித்தாள். பாத்ரூமுக்குள் போன ரமேஷ் , ``என்னக்கா, தண்ணி கொஞ்சமா இருக்கு...''. ``ஆமாடா தண்ணி இன்னிக்கு சாயங்காலம்தான் வரும். அதுவரைக்கும் இந்த தண்ணியத்தான் ஆண்டுக்கணும். இதான் எங்க நிலைமை. அதுலயே முடிச்சுக்கோ'' என்றாள் ரமா.
            குளித்துவிட்டு தலையைத் துவட்டிக் கொண்டே அக்கா பாத்திரம் தேய்ப்பதைக் கவனித்தான். சிறிய பாத்திரத்தில் உள்ள தண்ணீரை வைத்தே கையளவு தண்ணீரை எடுத்து எடுத்துத் தேய்த்து வைத்தப் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தாள் சிக்கனமாக. அக்காவைப் பார்க்க பாவமாக இருந்தது ரமேசுக்கு. ``அவ்வளவு தண்ணி பஞ்சமாக்கா இங்க'' என்ற ரமேஷ் ``எல்லா இடத்திலும் இப்படித்தான் ஆயிடுச்சு. நம்மவூரு கூட முன்ன மாதிரி இல்ல. அங்கேயும் தண்ணி ரொம்ப கீழ போயிடுச்சி. பணம் உள்ளவங்க எவ்ளோ செலவு ஆனாலும் போர் போட்டுக்குறாங்க. இல்லன்னா எவ்ளோ பணம் குடுத்தும் வாங்கிக்கிறாங்க! நம்ம மாதிரி ஜனங்க எங்க போறது! கவர்ன்மெண்ட் குடுக்கிற தண்ணியத்தான் நம்பியிருக்க வேண்டியிருக்கு'' என்றான் ரமேஷ்.
            பள்ளியை விட்டு வந்த குழந்தைகள் ரமேஷைப் பார்த்ததும் ``ஹையா மாமா வந்திருக்குது'' என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ``ஏய் கொத்தவரங்கா கோமதி நல்லா படிக்கிறியா? வாடா கருப்பா'' என்று குழந்தைகளைக் கொஞ்சினான். ``நாளைக்கு நாம ஜாலியா கார்ல ஊர் சுத்தப் போலாமா?''. ``நாளைக்கு எங்களுக்கு ஸ்கூல் லீவுதான் மாமா'' என்றார்கள் குழந்தைகள் குதூகலமாக.
            மறுநாள் காலையில் அக்காவையும், குழந்தைகளையும் காரில் ஏற்றிக் கொண்டு கிளம்பினான் ரமேஷ். குழந்தைகள் பீச்சிலும், சிறுவர் பூங்காவிலும் மகிழ்ச்சியாக விளையாடினார்கள். செயற்கையான நீரூற்று அமைக்கப்பட்டிருந்தது. உயரத்தில் ஏறி, சறுக்கி, தண்ணீரில் வந்து விழுவதுமாக உற்சாகத்தில் மிதந்தார்கள். இதையெல்லாம் ரமா ரசித்தாலும் நமக்குப் பாத்திரம் கழுவ, கால் கழுவவே தண்ணி கிடைக்கல. இங்க மட்டும் இவ்ளோ தண்ணி எப்பிடி கிடைக்குது என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டாள்.
            அனைவரும் மறுபடியும் காரில் பயணமானார்கள். ஒரு கோயில் வாசல் அருகில் கார் நின்றது. எல்லோரும் கோயிலுக்குள் சென்றார்கள். சாமி கும்பிட்டு விட்டு வந்த ரமா, ரமேஷின் நெற்றியில் திருநீரைப் பூசினாள். ``என்னக்கா வேண்டிக்கிட்ட சாமிக்கிட்ட...'' ``எங்க ஏரியாவுல தண்ணி தட்டுப்பாடு தீரணும். எல்லாருக்கும் எல்லா வசதி வாய்ப்புகளும் கிடைக்கணும். ஜனங்க எல்லாம் ஒத்துமையா, சந்தோஷமா வாழணும்னு வேண்டிக்கிட்டேன்''

            ``அதெல்லாம் சாமி குடுக்காது. நல்ல கவர்ன்மெண்ட் தான் அதக் குடுக்க முடியும்.''  ``சரி... அதையெல்லாம் குடுக்குற நல்ல கவர்ன்மெண்டை குடுன்னு வேண்டிக்கிறேன்'' என்று சொல்லி மீண்டும் உள்ளே சென்றாள்.

Sunday, 27 April 2014

``மாற்றம் தந்த ஏற்றம்''

S.கெஜராஜ்
375\K700
Mechatronics

``மேடம், நல்லா இருக்கீங்களா...?'' என்ற குரலைக் கேட்டு, தன் குழந்தைகளுடன் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சீதா,  குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினாள். ``யார்... யார் நீங்க...?'' என்றாள் கேள்விக்குறியுடன்.

``மேடம் எங்களைத் தெரியலையா...?'', ``ம்ம்... எங்கேயோ பார்த்த ஞாபகம், ஆனா சட்டுனு நினைவுக்கு வரலையே`` என்றாள் சீதா விழிகள் படபடக்க. ``மேடம் போன வருடம் நடந்த அந்த சம்பவத்தை நினைச்சா எங்களுக்கே அவமானமாவும், வெட்கக்கேடாவும் இருக்கு'' என்றார்கள் சீதாவிடம் பேசியவர்கள்.


``இரு, இரு... இப்போ நினைவுக்கு வருது, நீ... நீங்க... ரங்கனும், கோபியும்தானே...?'' என்று சொல்லி, ``சரி, சரி வீட்டுக்குள்ளே வாங்க!'' என்று கனிவுடன் கேட்டுக் கொண்டு, அவர்களுக்கு அருந்த நீர் கொடுத்து ``நீங்கல்லாம் எப்படி இருக்கீங்க...?' என்றும் அவர்களை விசாரித்தாள் சீதா. 

ஆளவந்தானும், ராஜதுரையும்

S.சுகுமார்
266\C858

செங்கழனியூர் பெயருக்கு ஏற்றார்போல செழுமையாக இருந்த ஊர்தான். இன்று தலைகீழாக மாறிவிட்டது. கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்தார்கள்! தேர் இழுப்பது, கூழ் ஊற்றுவது என்றெல்லாம் செய்துபார்த்துவிட்டார்கள். எந்த மாற்றமும் இல்லை.


விளைச்சல் இல்லை! விளைந்தால் நியாயமான விலை இல்லை. வேலையும் கிடைக்கவில்லை. கிடைத்தால் சரியான கூலி இல்லை! வாழ வழியின்றி தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வூர் மக்கள்! அதே நேரத்தில் ஆளவந்தான் குடும்பமும், ராஜதுரை குடும்பமும் மட்டும் செல்வச்செழிப்போடு அந்த ஊரின் எல்லா விவகாரங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக இருக்கிறார்கள்.

Tuesday, 11 March 2014

பசி

சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற சிறுகதை

S.கெஜராஜ் - 375/K700 - Mechatronics

      ``யோவ்...! நீயெல்லாம் ஒரு மனுஷனாயா...? கைக்குழந்தையோட இருக்கிற அந்த பொம்பள மேல ஏன்யா சுடுதண்ணிய வீசுற...?'' என்று டீக்கடைக்காரரைப் பார்த்துப் பொரிந்து தள்ளினார் பெரியவர்.
      ``ஏம்மா...? நீ இன்னா கேட்ட...?'' என்றார் பெரியவர். ``பசின்னு கேட்டேன். அதுக்கு இவ்வளவு ஆவேசமா தண்ணீ குவளையை வீசிட்டார். நல்ல வேளை மேல படல ஐயா'' என்றாள் அலமு.
      பசி என்றதும் தன்னிடமிருந்த இருபத்தைந்து ரூபாயை எடுத்துக் கொடுத்த பெரியவர், ``ஏம்மா? ஏதாவது வாங்கி நீயும், குழந்தையும் சாப்பிடுங்க...!'' என்றார். பசியின் கொடுமை அனைவரும் அறிந்த ஒன்றாயிற்றே.

இனி அழுதால் வராது நீதி!

S.சுகுமார், 266/C858

      களைப்புடன் வீடு வந்து சேர்ந்தான் வேலு. அவன் போகும் வேலைக்கு சரியான கூலியோ வேறு எந்த சலுகைகளோ கிடையாது எனினும், ஏதாவது செய்து வாழ்க்கையை ஓட்டித்தானே ஆக வேண்டியிருக்கிறது! எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவன் இன்று சோர்வுடன் வந்திருப்பதைப் பார்த்து, ``இன்னாயா ஆச்சி உனக்கு'' என்று கணவனின் நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள் ராசாத்தி. ``இன்னாயா இப்பிடி கொதிக்குது; போய் ஒரு டீ வாங்கிக்கினு வரட்டா'' என்றாள். பசி என்றாலும், உடம்புக்கு ஏதாவது என்றாலும் அவர்களுக்குத் தெரிந்த ஒரே தீர்வு டீ தான்!

Tuesday, 15 October 2013

நீ தான் என் மகள்



S.கெஜராஜ், 375/K700 Mechatronics

            பேரக் குழந்தையைப் பார்க்கும் ஆவலுடன் என் சம்பந்தி வீட்டுக் கதவை மெல்ல தட்டினேன். ``யாரது...?'' என்று மறுமுனையில் இருந்து வந்த சத்தத்திலேயே என் பெண்ணுடைய மாமியார் என்பதை உணர்ந்து கொண்டேன். பாதி கதவு திறந்த நிலையில், ``ஓ... நீங்களா!'' என்று ஒரு அலட்சியம் மற்றும் ஆணவப் பார்வை அவர் முகத்தில் தெரிந்தது.

Friday, 14 June 2013

என் உயிர் நீதானே



எஸ்.கெஜராஜ், 375/K700, Mechatronics

      அலுவலகம் வந்தும் வினோத்தால் காலையில் நடந்த நிகழ்ச்சியை மறக்க முடியவில்லை. ``டேய்...! என்னடா எதையோ நினைச்சிக்கிட்டு வேலை செய்யாம டல்லா இருக்கே?'' என்றான் ரவி. ``ஒண்ணுமில்லேப்பா, எனக்கும் என் மனைவிக்கும் இரண்டு நாளா சண்டை...! இன்னும் அவ என்னை புரிஞ்சிக்கல.. என்ன வாழ்க்கை? எல்லாம் ஒரே போராட்டமாத்தான் இருக்கு.'' என்றான் வினோத். ``சரி..! சரி..! எல்லாம் வீட்டுக்கு வீடு அப்படித்தான் இருக்கும், நீ வேலையைப் பாரு.'' என்றான் ரவி. மாலை அலுவலகம் முடிந்து வினோத் உடனடியாக வீடு செல்ல விரும்பவில்லை. `இன்னிக்கு வீட்டுக்கு கொஞ்சம் லேட்டா போனா போதும்' என்று நினைத்தான். அவனுடைய நண்பன் ஒருவன் நினைவுக்கு வர அவன் வீட்டுக்கு செல்ல முடிவெடுத்தான் வினோத்.

தண்டச்சோறு



S.சுகுமார் 266/C858

      விடியலைக் கூறும் சேவற்கோழியின் கூவலைக் கேட்டு திடுக்கிட்டு விழித்தான் ராமு. ஆழ்ந்த உறக்கமில்லாத இரவாகக் கழிந்ததால், மனமும் உடலும் உற்சாகமின்றிக் காணப்பட்டான் ராமு. `நமக்கு மட்டும் ஏனிந்த நிலை' என்று தன்னைத்தானே நொந்து கொள்வதா அல்லது விதியை நொந்து கொள்வதா? என்ற நிலையில் இருந்தான்.

Sunday, 21 April 2013

ஸ்வீட் எடு! கொண்டாடு! - சிறுகதை


எஸ்.கெஜராஜ், 375/K700, Mechatronics

 

            பண்பலையில், அந்த மாலைப் பொழுதில் பண்பாக இனிய பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

            ``அங்கே மாலை மயக்கம் யாருக்காக...?

            இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக...!''

            அந்த பிரம்மச்சாரிகளின் அறையில்தான் இந்தப் பாடல் தேனாகப் பாய்ந்து கொண்டிருந்தது. பணி முடித்து, ஒவ்வொருவராக தங்கள் அறைக்கு வந்து சேர்ந்தனர்.

மண்ணாங்கட்டியும் சொரிமுத்துவும் - சிறுகதை


எஸ்.சுகுமார், 266/C858

 

      தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனைப் பார்த்து வேதாளம் எள்ளி நகையாடியது, ``விக்கிரமாதித்தா, நான் சொல்லும் கதையை கவனமாகக் கேள். எனது கேள்விக்குப் பதில் தெரிந்தும் கூறாவிட்டால் உன் தலை வெடித்து சுக்குநூறாகிவிடும்.'' என்று கூறி கதையைக் கூற ஆரம்பித்தது.!

Thursday, 21 February 2013

கண்ணீரின் அர்த்தம்

எஸ்.கெஜராஜ் 375/கே 700

      சென்னையில் பிரதான திரையரங்கில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதற்காக முக்கிய விநியோகஸ்தர்கள், முன்னணி இயக்குனர்கள், மூத்த இசை அமைப்பாளர்கள் மற்றும் பிரபல நடிகர், நடிகையர்கள் அனைவரும் அந்தப் படத்தின் ப்ரிவியூவைக் காண வந்திருந்தனர். மேலும் திரையிடப்போகும் படத்தில் இருப்பவர் அனைவருமே புதியவர்கள். தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர், நடிகர், நடிகையர் மற்றும் பின்னணிப் பாடகர்கள் எல்லோரும் புதியவர்கள்.

Wednesday, 13 February 2013

கையில காசு - வாயில தோசை

எஸ்.சுகுமார் - 266/சி858

      வெளியில் விளையாடிவிட்டு வீட்டுக்குள் ஓடிவந்த வித்யா ``அம்மா பசிக்குதும்மா எப்பம்மா சோறு செய்வே? ரொம்ப பசிக்குதும்மா'' என்று சமையல் செய்வதற்கான ஏற்பாடு இருக்கிறதா இல்லையா என்று சமையல்கட்டை நோட்டம் விட்டுக் கொண்டே கேட்டாள்!
      மெல்ல தன் அருகில் வந்த குழந்தையை வாரியணைத்து ஆறுதல் சொல்லக்கூடத் தெம்பில்லாமல் ``அப்பா வரட்டும் கண்ணு, வந்தவுடன உனக்கு சோறு செஞ்சி கொடுக்குறேன். போய் விளையாடு'' என்று கூறி பெருமூச்சு விட்டாள் கோமதி.