தன.சம்பத்
255\J144
ஈரைந்து மாதங்கள்
இருட்டறையில் சுமந்தவளை
தொடர்ந்து வந்த காலத்தில்
தோளிலே சுமந்தவரை
காத்திட மனமிருந்தும்
தலையணை மந்திரத்திற்கு
தட்டாமல் தலைவணங்கி
காப்பகத்தில் சேர்த்து விட்டு
தானீன்ற தவப் புதல்வனை
தாலாட்டி வளர்த்திட்டான்!
கண்ணான தன் மகனை
கல்லூரியில் சேர்த்துவிட
விண்ணப்பம் வாங்கிவர
பெற்றோரை நாடி வந்தான் _ மறுக்காமல்
கால்கடுத்தாலும் _ கண் கலங்காது
கருணையுடன் காத்திருந்தனர்!
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts
Wednesday, 20 August 2014
`பளிச்' கவிதைகள்
B.பத்மநாபன்
217\38465
விருட்சம்
சிறு விதைகளாய் இருப்பதால்
சிறுமை கொள்ளாதே
என்றாவது ஒருநாள்
பெரும் விருட்சமாக மாறுவோம்
கவலை கொள்ளாதே
அந்த நாளை நீ தள்ளிவிடாதே
மின்னல்
வானுக்கும்
மண்ணுக்கும்
இடையே நடக்கும்
மின்னஞ்சல்
நீர்வீழ்ச்சி
காண்பவர்களுக்கு கண்கொள்ளாக் காட்சி
பிறர் வீழ்வதை ரசிக்கும் மனிதன்
நதியையும் விட்டு வைக்கவிலை!
பொய் முகங்கள்
பாலாடையில் பால்குடித்தது முதல்
பாடையில் நாம் போகும் வரை
ஆடை மாற்றுவது போல் மாற்றுகிறோம்
வேஷங்கள் மாற்றுகிறோம்
மாறும் மனதிற்கேற்ப
மாறும் முகமூடிகள்...
முகமூடிகள் நிஜமானால்
நம்முகத்தை நாமே மறந்திடுவோம்!
217\38465
விருட்சம்
சிறு விதைகளாய் இருப்பதால்
சிறுமை கொள்ளாதே
என்றாவது ஒருநாள்
பெரும் விருட்சமாக மாறுவோம்
கவலை கொள்ளாதே
அந்த நாளை நீ தள்ளிவிடாதே
மின்னல்
வானுக்கும்
மண்ணுக்கும்
இடையே நடக்கும்
மின்னஞ்சல்
நீர்வீழ்ச்சி
காண்பவர்களுக்கு கண்கொள்ளாக் காட்சி
பிறர் வீழ்வதை ரசிக்கும் மனிதன்
நதியையும் விட்டு வைக்கவிலை!
பொய் முகங்கள்
பாலாடையில் பால்குடித்தது முதல்
பாடையில் நாம் போகும் வரை
ஆடை மாற்றுவது போல் மாற்றுகிறோம்
வேஷங்கள் மாற்றுகிறோம்
மாறும் மனதிற்கேற்ப
மாறும் முகமூடிகள்...
முகமூடிகள் நிஜமானால்
நம்முகத்தை நாமே மறந்திடுவோம்!
Labels:
2014 08 August,
B.பத்மநாபன்,
கவிதை
நூலகமே ஆலயம்
M.பழனி
9952445378
செம்பிய மணலி
நூலகமே!
நீ ஒரு விதை நெல்...
உன்னுள் ஆரம்பமாகி வெளிப்படும்
ஒவ்வொரு கதிரும் நாளைய
தலைமுறையின் கல்தூண்கள்!
இப்போதெல்லாம் நீ
செல்லரித்து வீழ்வதில்லை
எங்கள் மனித குலம்
மூட நம்பிக்கைக்கு முக்காடு போட்டாலும்
அது முகம் மட்டுமாவது காட்டுகிறது.
9952445378
செம்பிய மணலி
நூலகமே!
நீ ஒரு விதை நெல்...
உன்னுள் ஆரம்பமாகி வெளிப்படும்
ஒவ்வொரு கதிரும் நாளைய
தலைமுறையின் கல்தூண்கள்!
இப்போதெல்லாம் நீ
செல்லரித்து வீழ்வதில்லை
எங்கள் மனித குலம்
மூட நம்பிக்கைக்கு முக்காடு போட்டாலும்
அது முகம் மட்டுமாவது காட்டுகிறது.
Labels:
2014 08 August,
M. பழனி,
கவிதை
Friday, 20 June 2014
பரிசு
258/C879
சிகரெட் புகையுங்கள்..
மது அருந்துங்கள்...
பான்பராக் சாப்பிடுங்கள்...
பரிசுகளை வெல்லுங்கள்...
முதல் பரிசு
: மரணம்
இரண்டாம் பரிசு
: புற்றுநோய்
மூன்றாம் பரிசு
: காச நோய், பக்கவாதம்
ஆறுதல் பரிசு
: பண நஷ்டம்
பரிசுகள் 100%
உத்திரவாதம்
Labels:
2014 06 June,
S.ரகுபதி,
கவிதை
ஏழைக்கோர் கீதை
M. பழனி
செம்பிய மணலி
9952445378
ஏழையே ஏன் சோர்ந்து விட்டாய்
வறுமையில் வாடும் உனக்கு
உயர்வு இல்லையே என்று வருந்தாதே!
வறுமையின் எல்லையில் விழுந்தவர்கூட
உயர்ந்திட்ட வரலாறு உண்டு!
தெருவிளக்கின் கீழ் படித்தவர்கள்
ஒளிவிளக்காய் ஆனதுண்டு!
நான் ஒரு கீதை உரைப்பேன்
உன் உழைப்பின் கூலியை
எங்கோ ஓடி வீணாகும் நீராக்காதே
குதிரைகள் வளர கிண்டிக்குப் போகாதே!
உன் குழந்தைகள் வளர
உண்டிக்கு செலவு செய்!
கள்ளுக்கும் சாராயத்துக்கும் தராதே!
நெல்லுக்கும் ஆகாரத்துக்கும் கொடு!
உன்னைக் கெடுப்பது `மது'
அதனில் ஏன் மீண்டும் மீண்டும் விழுகிறாய்
எழுந்துவா மனிதா!
புத்தகத்தை உன் கரங்கள் தொட்டிராவிட்டாலும்
உன் பிள்ளைகள் நாளை
புத்தகம் எழுதட்டும்!
வறுமையே இல்லாத பூமி...
எல்லார்க்கும் எல்லாமும்
கிடைக்கும் சமுதாயம்...
நிச்சயம் உருவாகும்!
ஒரு கை இரு கை
ஒரு கோடிக் கை
அதற்காகப் போராடும்
நீயும் வா...! இணைத்துக் கொள்!
புதியதோர் உலகு படைப்போம்!
செம்பிய மணலி
9952445378
ஏழையே ஏன் சோர்ந்து விட்டாய்
வறுமையில் வாடும் உனக்கு
உயர்வு இல்லையே என்று வருந்தாதே!
வறுமையின் எல்லையில் விழுந்தவர்கூட
உயர்ந்திட்ட வரலாறு உண்டு!
தெருவிளக்கின் கீழ் படித்தவர்கள்
ஒளிவிளக்காய் ஆனதுண்டு!
நான் ஒரு கீதை உரைப்பேன்
உன் உழைப்பின் கூலியை
எங்கோ ஓடி வீணாகும் நீராக்காதே
குதிரைகள் வளர கிண்டிக்குப் போகாதே!
உன் குழந்தைகள் வளர
உண்டிக்கு செலவு செய்!
கள்ளுக்கும் சாராயத்துக்கும் தராதே!
நெல்லுக்கும் ஆகாரத்துக்கும் கொடு!
உன்னைக் கெடுப்பது `மது'
அதனில் ஏன் மீண்டும் மீண்டும் விழுகிறாய்
எழுந்துவா மனிதா!
புத்தகத்தை உன் கரங்கள் தொட்டிராவிட்டாலும்
உன் பிள்ளைகள் நாளை
புத்தகம் எழுதட்டும்!
வறுமையே இல்லாத பூமி...
எல்லார்க்கும் எல்லாமும்
கிடைக்கும் சமுதாயம்...
நிச்சயம் உருவாகும்!
ஒரு கை இரு கை
ஒரு கோடிக் கை
அதற்காகப் போராடும்
நீயும் வா...! இணைத்துக் கொள்!
புதியதோர் உலகு படைப்போம்!
Labels:
2014 06 June,
M. பழனி,
கவிதை
சிட்டுக் குருவிகள்
R.இளம்வழுதி
250\L754
என் வீட்டு முற்றத்தில்
மீண்டும் சிட்டுக்
குருவிகள்
படம் பிடிக்க
செல்போன் எடுத்தேன்.
பறந்து போயின
சிட்டுக் குருவிகள்!
வரகு,
கம்பு, திணை கதிர்களை
உத்திரத்தில்
கட்டி வைத்தால்
சிட்டுக்குருவி
வரும் என்றார்கள்...
ஊருக்குச் சென்றிருந்தேன்
அம்மாவிடம் திணைக்கதிர்
கிடைக்குமா என்றேன்
திணை விளைந்த
நிலம்
ரியல் எஸ்டேட்
மனைகளாகிப் போனது
என்றார்!
சிட்டுக்குருவிகள்
காணாமல் போன
காரணம் புரிந்தது!
Labels:
2014 06 June,
R.இளம்வழுதி,
கவிதை
சிந்தனை ஈட்டி...
629\F290
98401 99207
வாழ்க்கை என்பது
மல்யுத்தம் போல்...
கீழே விழுவது
தோல்வி அல்ல!
எப்போது நாம்
எழுந்து கொள்ள
முயலவில்லையோ...
அப்போதுதான் தோல்வி!
உறவுகள் அழகானவை...
அற்புதமானவை...
நிபந்தனையில்லாமல்
சிரிக்கும்போது!
உள்நோக்கமில்லாமல்
பயணிக்கும்போது!
எதிர்பார்ப்பில்லாமல்
உதவும்போது!
ஒரு பொருளின்
விலைமதிப்பில்லா அருமை
இரண்டு முறைதான்
வெளிப்படும்
ஒன்று... அந்தப்
பொருள் நமக்குக் கிடைக்காதபோது!
மற்றொன்று...
அந்தப் பொருளை நாம் இழக்கும்போது!
வறுமை... வாழ்க்கையின்
பல கோடி பாடங்களைக் கற்பிக்கும்!
பணம்... பல கோடி
அழிவுக்கான பாதையைக் காட்டும்!
நமது வாழ்க்கை
எப்போது பொருள்படும் என்றால்
ஒரு சிலரின்
நினைவுகளில் நாம் வாழும்போது...
ஒரு சிலர் நமக்காகப்
பிரார்த்திக்கும்போது...
சில நேரங்களில்
தெரியாத நபர்கள் மூலம் கூட சரியான பாடம் கற்கலாம்!
ஒருவரது ஈகோ...
எந்த உறவையும் பிரிக்கவல்ல மிகப்பெரிய சக்தி கொண்டது!
அடுத்தவரின்
தவறுக்காக கோபப்படும்போது உன்னை நீயே தண்டித்துக் கொள்கிறாய்!
வாழ்க்கையில்
நாம் மகிழ்ச்சியும் வெற்றியும் அடைய தேவையானவை இரண்டு...
ஒன்று... ஒன்றுமே
இல்லாத போது நிலைமையை சமாளிப்பது!
மற்றொன்று...
எல்லாம் அடைந்த பின்பும் பணிவாய் நடந்து கொள்வது!
நண்பர்களே...
நமது சிந்தனையை மெருகூட்ட, சமூகத்திற்காய் சிந்திக்க...
சிந்தனை ஈட்டவே... இந்தச் சிந்தனை ஈட்டி...!
Labels:
2014 06 June,
S.உதயகுமார்,
கவிதை
Sunday, 27 April 2014
விழிப்புணர்வு
விழிப்புணர்வு...
தன.சம்பத்
255\J144
விடியலுக்குக் காத்திருந்த
செங்கதிரைக் கண்டதுமே
கமலமுகம் மலர்ந்ததுவே!
அதுவும் ஓர் விழிப்புணர்வே!
சூடமதன் பக்கத்தில்
சுடர்விடும் தீக்குச்சி
சுதந்திரமாய் நெருங்கியதும்
கணப்பொழுதில் கவருவதேன்?
அதுவும் ஓர் விழிப்புணர்வே!
நன்றிக்குச் சான்றான
வாலாட்டும் நாயினமும்
அயலாரைக் கண்டதுமே
புயலாகப் பாயுவதேன்?
அதுவும் ஓர் விழிப்புணர்வே!
மலரிடம் சேகரித்த
மதுவதனை அபகரிக்க
நெருங்கியதும் தேனீக்கள்
கொட்டிடவே துரத்துவதேன்?
அதுவும் ஓர் விழிப்புணர்வே!
வனத்தினிலே வாழ்கின்ற
அப்பாவி விலங்கினமும்
சிங்கமதைக் கண்டதுமே
தலைதெறிக்க ஓடுவதேன்?
அதுவும் ஓர் விழிப்புணர்வே!
பிரிவினை அரக்கனுக்கு
நாளெல்லாம் இரையாகும்
அப்பாவி மாந்தருக்கு
விடியலும் ஏன் வரவில்லை?
விழிப்புணர்வேன் பெறவில்லை?
தன.சம்பத்
255\J144
விடியலுக்குக் காத்திருந்த
செங்கதிரைக் கண்டதுமே
கமலமுகம் மலர்ந்ததுவே!
அதுவும் ஓர் விழிப்புணர்வே!
சூடமதன் பக்கத்தில்
சுடர்விடும் தீக்குச்சி
சுதந்திரமாய் நெருங்கியதும்
கணப்பொழுதில் கவருவதேன்?
அதுவும் ஓர் விழிப்புணர்வே!
நன்றிக்குச் சான்றான
வாலாட்டும் நாயினமும்
அயலாரைக் கண்டதுமே
புயலாகப் பாயுவதேன்?
அதுவும் ஓர் விழிப்புணர்வே!
மலரிடம் சேகரித்த
மதுவதனை அபகரிக்க
நெருங்கியதும் தேனீக்கள்
கொட்டிடவே துரத்துவதேன்?
அதுவும் ஓர் விழிப்புணர்வே!
வனத்தினிலே வாழ்கின்ற
அப்பாவி விலங்கினமும்
சிங்கமதைக் கண்டதுமே
தலைதெறிக்க ஓடுவதேன்?
அதுவும் ஓர் விழிப்புணர்வே!
பிரிவினை அரக்கனுக்கு
நாளெல்லாம் இரையாகும்
அப்பாவி மாந்தருக்கு
விடியலும் ஏன் வரவில்லை?
விழிப்புணர்வேன் பெறவில்லை?
Labels:
2014 04 April,
கவிதை,
தனசம்பத்
ஹைக்கூ... பூங்கா!
இனியவன் ஜி.ஸ்ரீதர் 256\38176
பாருக்குள்ளே நல்ல நாடு _ டாஸ்மாக்
``பாரு''க்குள்ளே தமிழ்நாடு
சிகரெட்டைப் பற்ற வைத்து
தீமைகள் விளைவிப்பதால்
தீ<ய>ப்பெட்டி
என்றானதோ?!
புலமையிலே பாத்திகட்டி
பேனா மை நீரைப் பாய்ச்சி
சங்கதிகளை சாகுபடி செய்வார்
சந்த நயத்தோடு
கவிஞர்
கடலோடு என்ன உறவோ கண்களுக்கு
கண்ணீரும் கரிக்கின்றதே
உப்பு!
Labels:
2014 04 April,
இனியவன் ஜி.ஸ்ரீதர்,
கவிதை
Tuesday, 11 March 2014
வண்ணங்களை விரிவாக்கு!
M.பழனி - 9952445378 - செம்பிய
மணலி
உட்கார் நண்பா நலந்தானா -
நீ
ஒதுங்கி வாழ்வது சரிதானா?
சுட்டுவிரல் நீ சுருங்குவதா
- உன்
சுய பலம் உனக்குள் ஒடுங்குவதா
புல்லாய் பிறந்தேன் நானென்று
- நீ
புலம்ப வேண்டாம் -
நெல் கூட
புல்லின் இனத்தை சேர்ந்தது
தான் - அது
பூமியின் பசியைப் போக்கிடுதே!
கடலில் நான் ஒரு துளியென்று
- நீ
கரைந்து வாழ்வதில் பயனென்ன?
கடலில் நான் ஒரு முத்தென்று
- நீ
காட்டு உந்தன் தலைதூக்கு!
மனைவி மக்கள் உறவென்று -
உன்
மனத்தின் எல்லையைச் சுருக்காதே
திண்ணை தானா உன் தேசம்?
தெரு ஒன்றேவா உன்னுலகம்?
திண்ணையை இடித்து தெருவாக்கு!
- உன்
தெருவை மேலும் விரிவாக்கு!
எத்தனை உயரம் இமயமலை -
அதில்
இன்னொரு சிகரம் உனது தலை!
எத்தனை ஞானியர் பிறந்த தரை
- நீ
இவர்களை விஞ்சிட என்ன தடை?
பூமிப் பந்து என்ன விலை -
உன்
புகழைத் தந்து வாங்கும் விலை!
நாமிப் பொழுதே புறப்படுவோம்!
- வா
நல்லதை எண்ணி செயல்படுவோம்!
Labels:
2014 02 பிப்ரவரி,
கவிதை
வீழ்வோமாயினும் வெல்வோம்!
அ.பன்னீர்செல்வம் 261/36354
தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்
பாட்டுடை கவி பாரதி கூற்று
தனியார் மயமாக்க கொள்கையிலே
தனி நபர் வளர்ச்சியை நோக்கியே
முதலாளித்துவ வர்க்கத்தின்
மூலதனமெல்லாம்
விழுதுகளின் வேர்விட்டு வளர்ந்திடவே
உழைக்கும் தொழிலாள வர்க்கத்தின்
வியர்வைதனை உறிஞ்சியே குடித்து
தன் கிளைகள் தனை பரப்புதடா
பூவாகி காயாகி பழுக்கின்ற
பலன்களெலாம்
தனியொருவன் செல்வாக்கில்
சொந்தமாகி போனதாலே
வேலையில்லாத் திண்டாட்டமும்
சமூகத்தில் தலைவிரித்தாடிவர
விலைவாசி உயர்வெல்லாம்
விண்ணை முட்ட செய்கையிலே
கலாச்சார சீர்கேட்டில்
மனம் தறிக்கெட்டுப் போகுதடா
பொது உடமை தத்துவத்தின் சித்தாந்த
தந்தையாம்
காரல் மார்க்சின் கொள்கையிலே
சமுதாய வளர்ச்சியின் தாக்கம்
சகலருக்கும் சென்றடைய
சந்தர்ப்பம் வாய்க்கின்ற
நாட்களெலாம்
வெகு தூரத்தில் இல்லையடா
வர்க்க உணர்வினில் போராடும்
எழுச்சிமிகு தொழிலாள போராட்டம்
வாழ்வுரிமை விழிப்புணர்வோடு
மலர்ந்திட
வீழ்வதும் நாளை வெல்வதற்கே!
Labels:
2014 02 பிப்ரவரி,
அ.பன்னீர்செல்வம்,
கவிதை
Friday, 7 March 2014
சிலிர்ப்பூட்டும் சிறுகவிதை
தனசம்பத் 255/J144
சுடர்விடும்
சூரியனை
கார்மேகம் சூழ்ந்திருக்க
வானத்தின் வர்ணத்தை
- தன்
வசமாக்கி வைத்திருக்கும்
வானவில் பொலிவு
கூட
அழகான ஒரு கவிதை
பசி என்று வந்தார்க்கு
பரிவுடன் உணவளித்து
ருசி கூடப் பாராது
- அவர்
புசிக்கின்ற அழகைப் பார்
அவர் மகிழ்வினிலே
மலர்ந்திடுமே
அழகான ஒரு கவிதை
Labels:
2014 02 பிப்ரவரி,
கவிதை
Thursday, 26 December 2013
பெண்
அ.பன்னீர்செல்வம்
261/36354
உறவெனும் கொடியிலே
கருவினைச் சுமந்திட
உதிரத்தைக் கொடுத்தவள்
தன்மான உணர்வினை
தாய்ப்பாலுடன் புகட்டியே
தன்னலம் கருதா அன்பினில்
தாயாகிக் காப்பவள்
சகோதரத்துவத்தை வளர்ப்பதிலே
அன்புத் தங்கையாய் உடன்பிறந்து
பாசத்தின் நிழலில் நேசத்தைப்
பொழிபவள்
போகப் பொருளாகப் பார்த்திடும்
கண்ணோட்டம் மறையவேண்டும்
ஆணாதிக்க சமுதாயத்தில்
அண்டியே பிழைத்திடும்
கொள்கைகள் மறைய வேண்டும்.
சமூகத்தின் பார்வையில்
சம உரிமை பெற்றிடவே
இட ஒதுக்கீடு கொள்கையிலே
பெண்ணுக்கு சம நீதி வர வேண்டும்
அவள் சிந்தனையின் கருத்தினிலே
புதுப் புரட்சிகள் மலர வேண்டும்
Labels:
2013 12 December,
அ.பன்னீர்செல்வம்,
கவிதை
சிவப்பின் வெள்ளை அறிக்கை
இனியவன் ஜி.ஸ்ரீதர்
256/38176
உதிக்கும் சூரியன்
வானத்தின் வெள்ளை அறிக்கை
உதட்டில் உண்மை
உள்ளத்தின் வெள்ளை அறிக்கை
வானவில் என்பது
வண்ணங்களின் வெள்ளை அறிக்கை
Labels:
2013 12 December,
இனியவன் ஜி.ஸ்ரீதர்,
கவிதை
Tuesday, 15 October 2013
ஞானத்தங்கமே!
B.சையத் இப்ராஹிம்
ஏற்றுமதி குறைஞ்சு போச்சு ஞானத்தங்கமே
இறக்குமதி அதிகமாச்சி ஞானத்தங்கமே
அந்நிய செலாவணி பற்றாக்குறை ஞானத்தங்கமே
ரூபாய் மதிப்பில் கைவைத்தது ஞானத்தங்கமே
மூலப்பொருள் இறக்குமதி ஞானத்தங்கமே
உற்பத்தியைப் பெருக்க வேண்டும் ஞானத்தங்கமே
இறக்குமதி அதிகமாகியும் ஞானத்தங்கமே
உற்பத்தியோ உயரவில்லை ஞானத்தங்கமே
வெளிநாட்டு நுகர்பொருள் தான் ஞானத்தங்கமே
விரைந்திங்கு கிடைக்கிறது ஞானத்தங்கமே
நம் நாட்டு உற்பத்தியோ ஞானத்தங்கமே
காணாமல் போனதுவே ஞானத்தங்கமே
வெளிநாட்டு கடன்கள் தான் ஞானத்தங்கமே
விண்முட்டும் அளவானது ஞானத்தங்கமே
வட்டி கட்டி மாளவில்லை ஞானத்தங்கமே
இனி வருமோ நமக்கெதிர்காலம் ஞானத்தங்கமே
நம்முடைய பொதுத்துறைதான் ஞானத்தங்கமே
நாட்டை கவசமாகக் காக்குது ஞானத்தங்கமே
திரை கடலோடி பெற்ற அந்நிய செலாவணி -
தேசம்
திவாலாகாமல் காத்து நிற்குது ஞானத்தங்கமே
Labels:
2013 10 October,
கவிதை,
சையித் இப்ராஜிம்
காணாமல் போனவை பற்றிய அறிவிப்பு…
இனியவன் ஜி.ஸ்ரீதர், 256/38176
ப்ரீபெய்டும்
போஸ்ட் பெய்டும் வந்தது...
கடிதம் காலாவதி ஆனது!
மின்னஞ்சலும்
குறுஞ்செய்தியும் வந்தது...
தந்தி தொலைந்து போனது!
ஏர்டெல்லும்
ஏர்செல்லும் வந்தது...
Labels:
2013 10 October,
இனியவன் ஜி.ஸ்ரீதர்,
கவிதை
நிலை என்ன?
தனசம்பத் 255/J144
பயிர் வளர்க்கும் கழனியிலே
பாய்ச்சுகிற நீர் அதுவும்
வேரிடம் செல்லாது
வேறிடம் சென்று விட்டால்
விளைச்சலை எதிர்நோக்கும்
விவசாயி நிலை என்ன?
வாக்குறுதி அள்ளி வீசி
Labels:
2013 10 October,
கவிதை,
தனசம்பத்
படித்ததில் பிடித்தது
V.கோவிந்தசாமி, 352/K302, Mechatronics
Maintenance
கோவண உழவனை
வேடிக்கைப் பார்க்கின்றன
பேண்ட் அணிந்த
வயற்காட்டு பொம்மைகள்!
சிறைபட்ட காற்றுக்கு
சிறிய முள்ளால் விடுதலை....
``பஞ்சர்!''
நெல்லு போட்டோம்
கம்பு போட்டோம்
சோளம் போட்டோம்
போட்ட பணம்
எடுக்கல...
பிளாட் போட்டோம்
உடனடி விற்பனை!
சாதிக்கா பிறந்தோம்...?
இல்லை....
சாதிக்கப் பிறந்தோம்!
Labels:
2013 10 October,
V.கோவிந்தசாமி,
கவிதை
காசு! பணம்! துட்டு! மணி!
அ.பன்னீர்செல்வம் 261/36354
பரந்த உலகில் வாழும் மனிதனை
பாடாய்ப்படுத்திடும் பணமே!
உயிரோட்டமில்லா வாழ்க்கையிலே
பகட்டுடன் வாழ்வதற்கே
பகடையென உருண்டோடி
சூதும் வாதும் உறவு கொள்ள
சுழலும் சக்கரமாய்
உருமாறிய பணமே!
காசில்லா மனிதனையும்
கடனாளி ஆக்கிவிட்டு
கைமாற்றாய்த் தருபவனை
கடவுளாய் காட்டிவிட்டு
முதலாளியிடம் சேரும் முழு பணமும்
அவரை அம்பானி ஆக்குதடா!
உழைப்பினைச் சுரண்டி
ஓரிடம் சேரும் பணம்...
நிலையான இன்பத்தை
ஒரு போதும் தருவதில்லை!
Labels:
2013 10 October,
அ.பன்னீர்செல்வம்,
கவிதை
Saturday, 17 August 2013
சொல்லினும் மேன்மை செய்கை
கற்றலுள் கற்றல் செயல்வழி கற்றல் அக்கற்றல்
கற்றலுள் எல்லாம் தலை.
கற்க கற்க செயல்வழி கற்க கற்றபின்
செவ்வனே செயல் படுக.
சொல்லினும் மேன்மை செய்கை -
அவை
சொல்லினும் சிறந்தது காண்.
தம்மிற் பெரியோர் செயல் கண்டு
தாமும் பலன் பெறுக.
நல்லதே செய்ய நன்மை தரும்
அல்லது தரும் பகை.
Labels:
2013 08 August,
M. பழனியப்பன்,
கவிதை
Subscribe to:
Posts (Atom)




















