Showing posts with label செய்தி. Show all posts
Showing posts with label செய்தி. Show all posts

Friday, 7 March 2014

சிந்திக்கத் தூண்டும் வைப்புநிதி அறங்காவலர் தேர்தல் முடிவுகள்

      ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற லேலண்ட் P.F.தேர்தல் பல வகையில் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கருத்தோட்டங்களை பிரதிபலிக்கிறது. தொழிற்சங்கம், தொழிலாளர்கள் என்ற பார்வையோடு செயல்பட்ட சிஐடியு இயக்கத் தோழர்கள் வி.பி.சிந்தன், டி.என்.நம்பிராஜன் ஆகியோர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தவர்கள் லேலண்ட் தொழிலாளர்கள். உழைப்போர் உரிமைக்கழகம் சார்பில் போட்டியிட்டு வென்ற தோழர் S.உமாகாந்தன் மீதும் அதே நன்மதிப்பை வைத்துள்ளார்கள் என்பதை இந்த அறங்காவலர் தேர்வு மீண்டும் நிரூபித்துள்ளது.

      கடந்த ஆறு ஆண்டுகளாக திருவாளர்கள் R.பாலசுப்ரமணியன், M.சக்திவேல், C.கணேசன், J.அல்லாபக்ஷ் ஆகியோர் ஒற்றுமையாகவும் வர்க்க சிந்தனையோடும் பணியாற்றியது போல், புதிய அறங்காவலர்கள் T.S.அன்பழகன், J.அல்லாபக்ஷ், S.உமாகாந்தன், S.வேலுச்சாமி ஆகியோர் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையோடு உழைப்போர் உரிமைக்குரல் புதிய அறங்காவலர்களை மனமார வாழ்த்துகிறது!

8.2.2014 அன்று நடைபெற்ற எவரெடி சங்கத் தேர்தலில் சிஐடியுவின் தோழர் அ.எ.காசிநாதன் தலைமையிலான அணி வெற்றிபெற்றது. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க.வின் திரு.த.ந.பாரதி தோல்வியடைந்தார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை வாழ்த்துகிறோம்!

Saturday, 17 August 2013

அசோக் லேலண்ட் ஓசூர் யூனிட் 1 ஒப்பந்த விபரங்கள்

(16.7.13 அன்று ஓசூர் லேலண்ட் சங்கத்தால் வெளியிடப்பட்ட துண்டறிக்கையில் இருந்து)

உற்பத்தி உயர்வு: நேரடி உற்பத்தியில் 440 (7.3%) நிமிட உற்பத்தியும், குறைவான ஙஉப உள்ள இடங்களில் உற்பத்தித் திறனை உயர்த்துவதன் மூலம் 7.7% சேர்த்து சராசரி உற்பத்தி உயர்வு 15% கொடுக்க முடிவாகி உள்ளது. எண்ணூரில் உள்ளது போல் கண்ட்ரோல் டைம் மெஷின்களில் உணவு இடைவேளையில் ஆட்கள் மாறி வேலை செய்வது என முடிவாகி உள்ளது. அவுட் சோர்ஸ், காண்ட்ராக்ட் மற்றும் இககளை வேலைக்கு எடுப்பது போன்ற மற்ற கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை.

Wednesday, 1 August 2012

சொசைட்டி செய்திகள்



      அசோக் லேலண்ட் தொழிலாளர் கூட்டுறவு நாணய சங்க அலுவலகம் தற்போது தண்டையார் பேட்டையில் செயல் படுகிறது. அந்த இடத்திற்கு மாதா மாதம் வாடகை செலுத்தப்படுகிறது. தற்போது செயல்படும் அந்த இடத்தையே சொந்தமாக வாங்கிவிட்டால் வாடகையை மிச்சப்படுத்த முடியும். சென்ற ஆண்டு நடைபெற்ற சொசைட்டி பொதுப் பேரவையிலும் இந்தக் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. நமது சொசைட்டியில் போதுமான நிதி ஆதாரம் உள்ளதால் தற்போது சொசைட்டி அலுவலகம் செயல்படும் இடத்தை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.