Showing posts with label R.பத்மநாபன். Show all posts
Showing posts with label R.பத்மநாபன். Show all posts

Wednesday, 21 January 2015

அனைத்திற்கும் தீர்வு சமபங்கீட்டுமுறை சமூகமே

R.பத்மநாபன் 
760\D054
தலைவர், உழைப்போர்
உரிமைக் கழகம்

புராதன பொதுவுடைமை சமூகத்தில் மனிதன் உழைப்பின் பயனை அறிந்து, சமபங்கீட்டு முறை சமூகமாக வாழ்ந்தான்.  சமபங்கீட்டு முறை சமூகத்தில் மனித உழைப்பு அவரவர் சக்திக்கு இயன்றவாறுதான் இருந்தது. ஆனால் பயன்கள் அவரவர்களுக்குத் தேவையான அளவு பங்கிடப்பட்டது. மனிதன் மனிதம் என்ற உன்னத நிலையைப் புரிந்து கொண்டான். தனிநபர்  கட்டளைகள் கிடையாது. கூட்டு விவாதமுறை முடிவுகள் அடிப்படையில் சமூகம் முன்னேறியது. சமூகம் பல குழுக்களாக மாறிய பொழுது பண்டமாற்று முறை உருவானது. அப்போதும் சமபங்கீட்டு முறை சமூக அமைப்பே தொடர்ந்தது. சமூகத்தில் நிர்வாக அமைப்பு முறை தொடங்கி, பின் அதுவே அரசு என்று உருவெடுத்தது.

அரசு தொடங்கியவுடன் அதற்கு உள்ளடங்கிய கருவிகளாக நீதி, பாதுகாப்பு, வரி வசூலிப்பு, பரிபாலனம் என்ற அமைப்புகள் உருவாகின. அரசைக் கண்காணிக்க உருவான கூட்டுவிவாதமுறை குழுக்கள் சமபங்கீட்டு முறை சமூகத்தில் இருந்தது. அது அரசாங்கம் என அழைக்கப்பட்டது.
தனி மனித சொத்துரிமை உருவானபோதுதான் உழைப்புச் சுரண்டல் தொடங்கியது. உழைப்புச் சுரண்டல் என்பது நாளுக்கு நாள் பலவிதமாக அதிகரித்தது. அதனுடைய வளர்ச்சி சந்தை, மூலதனம், லாபம் என்று அடிமை சமூக அமைப்பை உருவாக்கியது. அடிமைச் சமூக அமைப்புமுறை, நிலப்பிரபுத்துவ அமைப்பு முறையாகப் பரிணமித்துப் பின் முதலாளித்துவ அமைப்பு முறையாக மாறியது.

முதலாளித்துவ அமைப்பு முறையில் அரசு அடக்குமுறை கருவியாக மாறி, முதலாளித்துவ அமைப்பில் இருந்து சமூகம் விடுபடாமல் பாதுகாக்கின்றது. முதலாளித்துவச் சமூகத்தில் மனிதம் மறைந்து போனது. உழைப்பின் பெரும்பகுதி சுரண்டப்பட்டுத் தனி மனித சொத்துக்களாக மாறி, குறிப்பிட்ட சிலரின் உடமையானது. அரசு அவர்களின் கேடயமாக மாறிப் போனது.

நவீன சமூகத்தின் அத்தனை பிரச்சனைகளுக்கும், உழைப்புச் சுரண்டலும், முதலாளித்துவ அமைப்பு முறையும்தான் காரணம், மனித சமூகம் மறுபடியும் மனிதத்துடன் நிறைவாக வாழ, மீண்டும் சமபங்கீட்டு முறை சமூகத்தை அமைப்பது அவசியம். உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக, உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டால் சமபங்கீட்டு முறை சமூகம் நிச்சயம் உருவாகும். சமபங்கீட்டு முறை சமூகமே அனைத்திற்கும் தீர்வு! உணர்வோம்! உருவாக்குவோம்!!

உலக நாடுகளில் அதற்கான பணிகளை உழைக்கும் வர்க்கம் தொடங்கி விட்டது. இந்தியாவில் உழைக்கும் மக்கள் ஒன்றாய் இணையாமல் பலவிதக் கூறுகளாகப் பிரிந்து, முதலாளித்துவத்திற்கு ஆதரவாக உள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், முதலாளித்துவத்தின் பிரதிநிதியாகவே மாறிவிட்டது. இந்திய மக்கள் இதைப் புரிந்து கொள்ள இயலாமல் சாதி, மத, இன, பிராந்திய உணர்வு கயிறுகளால் கட்டப்பட்டு உள்ளனர். இந்தக் கயிறுகளை அறுத்து மக்களை ஒற்றுமைப் படுத்துவதே உழைக்கும் மக்களின் பிரதானக் கடமை.

Wednesday, 20 August 2014

வெற்றியின் பாதை

R.பத்மநாபன்
760\L054
தலைவர், உழைப்போர்
உரிமைக் கழகம்

இன்றைய சமூக நிலையில் மனித எண்ணங்களில் பலவித சிந்தனை மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதனால், உளவியல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகள் தோன்றுகின்றன. உளவியல் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல் மனிதன், அன்றாட நிகழ்வுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தவிக்கின்றான். சிலர் எதிலும் ஈடுபடமுடியாமல் அமைதியாகி விடுகின்றனர். பலர் பலவித எதிர்விளைவுகளுக்கு உள்ளாகின்றனர். இதனால் மனச் சிதைவும், தற்கொலை எண்ணங்களும் ஏற்படுகின்றன.

Friday, 20 June 2014

இனி

R.பத்மநாபன்
760\L054
தலைவர், உழைப்போர்

உரிமைக் கழகம்

            சுதந்திரப் போராட்டத்திற்குப் பின் சுதந்திர இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற சோசலிச ஜனநாயகக் குடியரசாகப் பிரகடனப்படுத்திக் கொண்டார்கள். ஆனால் சுதந்திரப் போராட்டம் நடந்த போது இந்திய கம்யூனிஸ்டுகள் இந்தியா ஒரு சோசலிச நாடாக உருவாக வேண்டும் என்று முயற்சித்தார்கள். சுதந்திர இந்தியா பெரும்பான்மையினரான உழைக்கும் மக்களுக்கான அரசாக இருக்க வேண்டும் என்றும், அதற்கான சட்டம் உருவாக வேண்டும் என்ற கோரிக்கையை முன்  வைத்தார்கள். அன்றைய தினம் ஆட்சியாளர்கள் இந்தியாவில் ஒரு முதலாளித்துவ ஆட்சி அமைப்பதிலேயே கவனமாக இருந்தார்கள். சாதாரண மக்களுக்கான பொருளாதாரம் மேம்பட விவசாயம், கைத்தொழில், சிறுதொழில், நடுத்தரத் தொழில், உயர் தொழில், அரசு சார்பு தொழில் என இந்தியப் பொருளாதாரத் திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால் மத்தியில் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் ஆட்கள் தான் மாறினார்களே தவிர இந்திய பொருளாதாரத்தை முற்றிலும் ஒரு முதலாளித்துவ பொருளாதாரத்திற்குக் கொண்டு சென்று விட்டார்கள். 1991-க்கு பிறகு இந்திய ஆட்சியாளர்கள் பெரும்பான்மை மக்கள் நலன்களுக்கு எதிராக உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்ற கொள்கையை அமுல்படுத்தி, கார்ப்பரேட் நிர்வாக முறையைப் புகுத்தி, பன்னாட்டு முதலாளிகள் கொள்ளையடிக்க வழி அமைத்தார்கள்.
            சோவியத் மற்றும் உலக நாடுகளில் ஏற்பட்ட சோசலிச பின்னடைவுக்குப் பிறகு ஏகபோக முதலாளித்துவத்தின் சுரண்டல்முறை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பெரும்பான்மை உழைக்கும் மக்களைச் சுரண்டத் துவங்கிவிட்டது. உழைப்பின் நேரம் அதிகரிப்பு, சம்பளக் குறைப்பு, நிரந்தர வேலையின்மை எனப் பல வழிகளிலும் நேரடியாகச் சுரண்டத் துவங்கியுள்ளது. சாதாரண மக்களுக்கான மானியங்கள் வெட்டப்பட்டு, பெருமுதலாளிகளுக்குச் சலுகைகள் வாரி வழங்கப்பட்டன. அது மட்டுமல்லாமல் உழைப்பாளி மக்கள் போராடிப் பெற்ற சலுகைகள் பறிக்கப்பட்டன. பெரும்பான்மை மக்களின் நலன்களுக்காக வசூலிக்கப்படும் வரிகளில் பெரும்பகுதி அரசாங்கத்தின் உதவியுடன் சூறையாடப்படுகிறது. ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுப் பெருமுதலாளிகளின் ஏஜெண்டுகளாகவே செயல்படுகின்றன. உலகத்தோடு இணைவோம் என்ற மாய கோஷத்தைச் சொல்லிக் கொண்டு இந்தியாவின் செல்வத்தையும், கனிம வளங்களையும் இந்தியப் பெரு முதலாளிகளுக்கும் அந்நிய ஏகபோக முதலாளிகளுக்கும் ஆட்சியாளர்கள் தாரை வார்க்கிறார்கள். உழைக்கும் பெரும்பான்மை மக்களுக்குச் சொந்தமான செல்வங்கள் கொள்ளை போவதைத் தடுக்க, மக்களைத் திரட்டி, பலமுனைப் போராட்டங்களை நடத்திக் கொண்டே பெரும்பான்மை மக்கள் நலன் காக்கும் மாற்றுக் கொள்கை அரசை உருவாக்க கம்யூனிஸ்டுகள் அரசியல் களப்பணியில் இருக்கிறார்கள்.
            உலகம் முழுவதும் உள்ள ஊடகங்களும், கார்ப்பரேட் முதலாளிகளின் கையில் சேர்ந்துவிட்டன. உண்மையான செய்திகள் கூட மறைக்கப்படுகின்றன. ஜனநாயக முறையில் இயக்கம் நடத்துவதற்குக் கூட அனுமதி மறுக்கப்படுகிறது. இனியும் உழைக்கும் வர்க்கம் பொறுமையாக இருக்காது. உலக இடதுசாரி இயக்கங்களோடு அணிதிரண்டு உழைக்கும் வர்க்க அரசை உருவாக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

Friday, 7 March 2014

மனிதன்! மனிதம்!! சமூகம்!!! - எளிய குறிப்புகள் - 4

R.பத்மநாபன் - 760/L054

            சந்தைப் பொருளாதாரத்தின் இன்றைய நிலையில் உலகச் சமூகம், மனிதம் மற்றும் மனிதன் பற்றி இன்னும் விரிவாக அறிவோம். மனிதனுக்கும், மூலதனத்துக்கும் இன்றைக்கு ஏற்பட்டுள்ள இடைவெளியைக் கணக்கிட முடியாது. மூலதனம் இயங்கி பெரும் லாபம் ஈட்டினால் மட்டுமே முதலாளித்துவம் தொடர்ந்து நீடிக்க முடியும். இதனால் உலகம் முழுதும் ஒரே மாதிரியான கலாச்சாரமும், பண்பாடும் இருந்தால்தான் தற்போதைய நுகர்வோர் கலாச்சார சந்தையைப் பாதுகாக்க முடியும் என்ற புதிய அணுகுமுறை கையாளப்படுகிறது.

Thursday, 26 December 2013

மனிதன்! மனிதம்!! சமூகம்!!! - 3

R.பத்மநாபன்
760/L054
தலைவர், உழைப்போர் உரிமைக்கழகம்

      மனிதப் பண்புகள் சந்தையின் நிலைக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறது. சமூகத்தில் அனைவரும் சமமாகவும், ஒற்றுமையுடனும் வாழும் சூழலில் இருந்த சட்ட திட்டங்களும், கட்டுப்பாடுகளும் நிலைகுலைய ஆரம்பித்தன

Tuesday, 15 October 2013

எளிய குறிப்புகள்… மனிதன்! மனிதம்!! சமூகம்!!! - 2

R.பத்மநாபன், 760/L054, தலைவர், உழைப்போர் உரிமைக்கழகம்

            உற்பத்தியும் சந்தை முறையும் உருவாவதற்கு முன் இருந்த சமூகம் பண்டமாற்று முறை சமூகமாக இருந்தது. அதற்கு முந்தைய சமூகம் சம பங்கீட்டுமுறை சமூகமாகவே இருந்தது.

            சந்தைமுறை சமூக அமைப்பு உருவாகிய பொழுதுதான், புதிய நாகரீகங்களும், பல அடுக்குமுறை மனித கட்டுமானங்களும் தோன்ற ஆரம்பித்தன. சந்தையை கட்டுப்படுத்துவதற்கும், ஒழுங்கு படுத்துவதற்கும் நிர்வாக அமைப்புமுறையும், பின் அதுவே அரசாகவும், ஆட்சிமுறையாகவும் மாறியது.

Saturday, 17 August 2013

மனிதன்! மனிதம்!! சமூகம்!!!

ஆர்.பத்மநாபன் 760/எல் 054, தலைவர், உழைப்போர் உரிமைக் கழகம்

மனிதன்: மனிதன் மண்ணில் பிறந்தவுடன் தான் காணும் சூழ்நிலையில் இருந்து உலகத்தையும், அருகில் இருக்கும் மனிதர்களின் சமூகத் தன்மையுடன் தான் வளர்கிறான். சிந்தனையும் செயலும் பழக்க வழக்கங்களும் அதே தன்மையுடன்தான் இருக்கும். அவன் வாழும் சூழலில் பேசப்படுகின்ற விஷயங்கள், கற்பனை கதைகள், மூளையில் பதிவாகி புதிய சிந்தனைகள் தோன்றுகின்றன. சமூக சிந்தனைகளும், விஞ்ஞான சிந்தனைகளும் புதிதாக சிந்திக்கச் சிந்திக்க பல புதிய விஷயங்கள் உருவாகின்றன. விஞ்ஞானக் கோட்பாடுகள் உலகைப் புதிய கண்டுபிடிப்புகளின் மூலம் நவீனப்படுத்துகின்றன. மனித மூளையில் இருந்து உருவாகும் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் மனிதன் மனிதனாக வாழ்வதற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும். ஆக்கப்பூர்வமான வேலைகளுக்குப் பயன்தரும் கண்டுபிடிப்புகளாக அவை இருக்கும் வரையில் மனிதன் மனிதனாகவே இருக்கிறான். அவன் வாழ்கின்ற சமூகத்தில் இருக்கும் குறைகளையும், வித்தியாசங்களையும் பற்றி சிந்தித்து சமூக விஞ்ஞான கோட்பாடுகள் உருவாகின்றன. அவற்றால் பழைய சமூக முறைகள் மறைந்து புதிய சமூக முறை தோன்றுகின்றது. அத்தகைய மாற்றம் ஏற்றத் தாழ்வுகள் அற்றதாகவும், மனிதன் மனிதனாகவே வாழ்வதற்கு ஏற்றதாகவும் உருவாக வேண்டும்.
மனிதம்: பொதுவாக மனிதம் என்பது சக மனிதனை நம்மைப் போலவே அவனையும் உணர்வது. அது இருபாலருக்கும் பொதுவாகவும் சமமாகவும் பின்பற்றப் பட வேண்டும். மனிதர்கள் அனைவரையும் சமமாக உணர்கின்ற நிலையே மனிதம்.
சமூகம்: மனிதன் தனித்து வாழ்வது என்பது இயலாத செயல். மனிதன் கூடி வாழ்வதே சமூகம். அது சிறியதாகவும் இருக்கலாம். பெரியதாகவும் இருக்கலாம். சமூகமாக வாழ சில கட்டுப்பாடுகளும், சட்ட  திட்டங்களும் வகுத்து அனைவரும், சமமாக வாழும் சூழ்நிலையை உருவாக்கினால் அச்சமூகம் சிறந்த சமூகமாகத் திகழும். மனிதன், மனிதம், சமூகம் இவற்றைச் சீராக இணைப்பதற்கு உரிய வழிகளை உருவாக்க வேண்டும். நாம் இருக்கும் இன்றைய சமூகச் சூழல்களைப் பற்றி அறிய வேண்டியது அவசியம். இப்போது இருக்கும் சமூகச் சூழல் நீடித்தால் மனித குலம் தொடர்ந்து நீடிக்குமா? மனித நாகரீகம் மனிதப் பண்புடன் இருக்குமா? என்ற சிந்தனையுடன் புரிந்து கொள்வதும் இன்றைய தேவை. உலகில் உள்ள பல நாடுகளில் பலவித நாகரீகங்கள், சிந்தனைகள், கலாச்சாரங்கள் வித விதமாகத் தோன்றின.

<மனிதன் மனிதம் சமூகம் தொடரும்>

Friday, 14 June 2013

அமையட்டும் மக்கள் நலன் காக்கும் அரசு அமைப்போம் நிச்சயமாக



R.பத்மநாபன், 760/L054, தலைவர், உழைப்போர் உரிமைக்கழகம்

      செப்டம்பர் 17, 2011 அன்று உலகமே அதிர்ச்சியில் உறைந்தது! ஏகாதிபத்திய நாடான அமெரிக்காவில் முதலாளித்துவக் கொள்கையினால் ஏற்பட்ட பாதிப்பினால் மக்கள், உலகையே கட்டுப்படுத்தும் பெருமுதலாளிகள் வாழும் தெருவான வால்ஸ்ட்ரீட்டை முற்றுகையிட்டனர்.

Sunday, 21 April 2013

புதிய பாதைக்கான போர்ப்பயணம் வெல்லட்டும்


R.பத்மநாபன், 760/L054, தலைவர், உழைப்போர் உரிமைக்கழகம்

 

இன்றைய உலகில் மக்களின் வாழ்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. ஏகாதிபத்திய நாடுகளின் நிபந்தனைகளும் முதலாளித்துவ ஆட்சி முறைகளும் மக்களின் உரிமைகளைப் பறித்து வாழ்க்கை முறைகளை சீரழித்துக் கொண்டு இருக்கிறது. நுகர்வோர் கலாச்சாரமும் புதிய பொருளாதாரக் கொள்கையும் மக்களை வாழ்வதற்கு வழியின்றி செய்கின்றது.

Wednesday, 13 February 2013

மார்ச் 23 மாவீரன் பகத்சிங் நினைவாக

 - ஆர் பத்மநாபன் 261/L054 தலைவர், உழைப்போர் உரிமைக்கழகம்

      பகத்சிங்... இளைஞர்களை ஈர்க்கும் ஒரு மந்திரச் சொல்!
1918ல் ஜாலியன் வாலாபாக் பயங்கரத்தைக் கண்ட ஒரு 11 வயது இளைஞனாக ஆங்கில அரசை எதிர்க்க உறுதி பூண்டார். சோசலிசமே மக்களை நிரந்தரமாக விடுவிக்கும் என சோசலிசத்திற்கு ஆதரவான அனைத்து இளைஞர்களைத் திரட்டி. மாபெரும் மக்கள் தலைவன் ஆனான். 1931, மார்ச் 23ல் ஆங்கில ஏகாதிபத்திய அரசு தேசத்துரோகக் குற்றம் சாட்டி பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவரையும் தூக்கிலிட்டது.

Monday, 24 December 2012

படித்ததில் பிடித்தது!



R.பத்மநாபன் 261\L054
தலைவர், உழைப்போர் உரிமைக் கழகம்

      இளைஞன் ஒருவன் தத்துவஞானி சாக்ரடீசை சந்தித்தான். எனக்குப் பரந்த அறிவும், வெற்றியும் வேண்டும். அதற்கான வழிகளைச் சொல்லுங்கள் என்று கேட்டான்.

      சாக்ரடீஸ் அவனைப் படகில் கடலுக்குள் அழைத்துச் சென்று தண்ணீரில் தூக்கிப் போட்டார். நீச்சல் தெரியாத அவன் மூச்சுத்திணறி மேலே வந்து காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கதறினான்.

Saturday, 13 October 2012

அடுத்த தலைமுறைக்கான சூழலியல் கல்வி - அவசிய தேவை



R.பத்மநாபன்  261\L054 தலைவர், உழைப்போர் உரிமைக் கழகம்

குழந்தைகளை நல்ல மானிடராய் ஆக்குவது கல்வி. கல்வியின் உள்ளடக்கம், பயிற்றுமுறை குறித்து விவாதித்து சிந்தனையாளர்கள் குழந்தைகளுக்கு சூழலியல் கல்வி இன்றையத் தேவை என முன் மொழிந்துள்ளனர்.

Wednesday, 1 August 2012

நமது தொழிலகம் "அசோக் லேலண்ட்" - வரலாறு - ஒரு பார்வை



R.பத்மநாபன் 261\L054
தலைவர், உழைப்போர் உரிமைக்கழகம்



      நமது நிறுவனம் 1948ல் ``ஆஸ்டின்'' மாடல் கார்கள் உற்பத்தி செய்யும் ஒரு ஆலையாக முதன் முதலில் எண்ணூரில் உருவானது. பிறகு 1950ல் வியாபார ரீதியான கமர்சியல் வண்டிகள் உற்பத்தி துவங்கப்பட்டது. அப்போது உதிரி பாகங்கள் வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வண்டிகளில் பொருத்தப்பட்டு வண்டிகள் உற்பத்தியானது. 1967ல் டபுள் டெக்கர்  வண்டிகளும், 1970ல் காமெட் வகை என்ஜின்களும் மற்றும் ஏஎட வகை வண்டிகளும் 4 ஷ் 4, 6 ஷ் 4 டிராக்டர் மாடல் வண்டிகளும் உருவானது. 1976ல் பயணிகள் வண்டி வைக்கிங் உற்பத்தி துவங்கியது. பிறகு 1980களில் நமது நிறுவனம் விரிவாக்கம் செய்யப்பட்டு ஓசூரில் புதிய கிளை துவங்கியது. 1981ல் எண்ணூரில் சீட்டா வகை பயணிகள் வண்டி உற்பத்தி செய்யப்பட்டது. 1982ல் ஆள்வார், பந்தாரா என கிளைகள் உருவாயின.