Showing posts with label K.நாகராஜ். Show all posts
Showing posts with label K.நாகராஜ். Show all posts

Tuesday, 25 December 2012

பழமொழி - உண்மைப் பொருள் அறியலாமே...?



K.நாகராஜ்
T.No.5399, Shop X

களவும் கற்று மற...
      களவாடுவதையும் கற்று பின் மறந்துவிட வேண்டும் என்று நேரிடையாக ஒரு பொருள் உலக வழக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
      ஆனால் இப்பழமொழியின் நிஜ வடிவம் ``களவும் கத்தும் அற'' என்பதாகும். அதாவது தமிழ் மொழியில் களவு என்பதற்கு திருட்டு, கத்து என்பதற்கு பொய் என்பதும் பொருள். இதன் மூலம் திருட்டையும் பொய்யையும் தவிர்த்துவிடு என்பதே உண்மைப் பொருள்.

Wednesday, 1 August 2012

ஊடல் பாடலில் சித்து விளையாடும் சிலேடைத் தமிழ் | கவிதை



K.நாகராஜ்
T.No.5399, Shop X

``வெள்ளரிக்காயா விரும்பும் அவரைக்காயா
உள்ள மிளகாயா ஒரு பேச் சுரைக்காயா...''
வெள்ளரிக்காய், அவரைக்காய், மிளகாய், சுரைக்காய்
என்று ``காய்'' வார்த்தைகளில் ஊடல் தெரிகிறதா... நண்பர்களே!

மீண்டும் ஒரு முறை இப்போது கவனமாகப் படித்துப் பாருங்கள்... தெரியும்!