Showing posts with label V.கோவிந்தசாமி. Show all posts
Showing posts with label V.கோவிந்தசாமி. Show all posts

Tuesday, 11 March 2014

பூமி என்ற பூலோக சொர்க்கம்

V.கோவிந்தசாமி - 352/K302 Mechanical Maintenance

      பூமியின் மேற்பரப்பில் ஐந்து கிலோமீட்டர் உயரம் வரை உள்ள பகுதிகளில் வெண்மேகங்களும், கரு மேகங்களும் சஞ்சரிக்கின்றன. பதினோரு கிலோ மீட்டர் உயரத்திற்கு அப்பால் எந்த மேகமும் இல்லை. பதினெட்டு கிலோ மீட்டர் உயரத்துக்கு மேல் எவ்வித சலனமும் இன்றி அமைதி குடி கொண்டிருக்கிறது என்று வானியலாளர்கள் கூறுகின்றனர். பவன மண்டலத்தில் உயரே போகப் போக வெப்பம் குறைந்து கொண்டே போகிறது. பூமியின் மேற்பரப்பில் இருந்து 16 கிலோமீட்டர் உயரம் வரை நைட்ரஜன், ஆக்சிஜன் ஜடவாயுக்களும், அதற்கு மேலே ஹைட்ரஜன், ஹீலியம், ஓசோனும் உள்ளன. ஓசோன் என்பது ஆக்சிஜனின் மற்றொரு வகை. சூரியனின் புற ஊதாக் கதிர்களின் வீரியத்தினால் ஆக்சிஜன் ஓசோனாக மாறியதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பூமியின் உட்புறத்தை குடைந்தால் மண்ணாங்கட்டி, சரளைக் கல், கூழாங்கல் பாறைகள் உள்ளன. 40 அடி தோண்டிய பின் நீர் ஊறுகிறது. ஆயிரம் அடி ஆழத்துக்கு கீழே போனால் செடிமென்டரி பாறைகள் உள்ளன. பூமியைக் குடைந்து கொண்டு கீழே செல்லச் செல்ல வெப்பம் உயர்ந்து கொண்டே போகிறது. ஒவ்வொரு 35 மீட்டருக்கும் ஒரு டிகிரி சென்டிகிரேட் வெப்பம் உயர்கிறது. 100 கி.மீ. ஆழத்தில் 3000 டிகிரி வெப்பம் இருக்கும். எனவே, பூமியின் தரைப்பரப்பு 100 கி.மீ. ஆழத்துக்கு அதிகமாக இருக்க முடியாது என்று மதிப்பீடு. எனவே, நமது பூமியின் மேலோட்டப்பகுதி என்பது ஒரு ஆப்பிள் பழத்தின் தோலைப் போன்றது. பூமியின் மையத்தில் உள்ள எரி குழம்பு, ஒட்டுக் குழம்பு பகுதியில் ஏற்படும் .துவாரங்களின் வழியே வெளியேறுகிறது. அதையே எரிமலை என்கிறோம்.

Thursday, 26 December 2013

பூமி என்ற பூலோக சொர்க்கம்

V.கோவிந்தசாமி
262/K302
Mehanical Maintenance

      சூரியனைச் சுற்றி வரும் கிரகங்களில் பூமி மட்டும்தான் உயிர்கள் வாழும் தகுதி படைத்தது. மற்ற கிரகங்களில் உயிர்கள் உள்ளனவா? அதிலும் குறிப்பாக செவ்வாய் கிரகத்தை ஆராய போட்டி. நான்கு நாடுகளை அடுத்து இந்தியாவின் மங்கள்யான் பயணம் தொடர்கிறது. இப்படிப்பட்ட இப்பூவுலகைப் (பூமியை) பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

Tuesday, 15 October 2013

படித்ததில் பிடித்தது



V.கோவிந்தசாமி, 352/K302, Mechatronics Maintenance

கோவண உழவனை
வேடிக்கைப் பார்க்கின்றன
பேண்ட் அணிந்த
வயற்காட்டு பொம்மைகள்!

சிறைபட்ட காற்றுக்கு
சிறிய முள்ளால் விடுதலை....
``பஞ்சர்!''

நெல்லு போட்டோம்
கம்பு போட்டோம்
சோளம் போட்டோம்
போட்ட பணம்
எடுக்கல...
பிளாட் போட்டோம்
உடனடி விற்பனை!

சாதிக்கா பிறந்தோம்...?
இல்லை....
சாதிக்கப் பிறந்தோம்!

Saturday, 17 August 2013

அறிவியல் வரலாறும், அறிவியல் பார்வையும் - 2

வி.கோவிந்தசாமி 352/கே202, மெகானிக்கல் மெயிண்டனன்ஸ்

      சென்ற இதழில் அறிவியல் வரலாறு பற்றி பார்த்தோம். அறிவியல் பார்வைக்கு சில உதாரணங்களை உங்கள் முன் வைக்கிறோம்.
      உலகமும் மனிதனும் தோன்றி வளர்ந்த வரலாற்றை அறிந்தவர்கள் மதமும், கடவுளும், சாதியும் ஆதியிலே இல்லை, பாதியிலேயே வந்தவை என்பதைக் கற்றுக் கொள்வார்கள். தற்போது கிளப்பி விடப்படும் மதவெறியும், ஜாதி வெறியும் அர்த்தமற்றவை என்பதைப் புரிந்து கொள்வார்கள்.

Friday, 14 June 2013

அறிவியல் வரலாறும்அறிவியல் பார்வையும்



V.கோவிந்தசாமி, 352/K302, Mechanical Maintenance

      அறிவியல் என்றதும் கணினி, கைப்பேசி, விண்வெளிப் பயணம், அணுகுண்டு, படியாக்கம் (குளோனிங்), சோதனைச் சாலைகள் சம்பந்தமானவை என்ற முடிவிற்கு வந்து விடுகிறோம். இதனால் அறிவியல் என்றாலே நமக்குச் சம்பந்தமில்லாத விஷயம் என்ற முடிவிற்கு வந்து விடுகிறோம். ஆனால், அறிவியல் மேலே சொன்ன சில விஷயங்களோடு முடிந்துவிடுவதில்லை. வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் அறிவியல் உண்டு. ஏன் சமையலில் கூட அறிவியல் உண்டு. உயிர் சத்துக்களை எல்லாம் நீக்கிவிடும் வகையில் சமையல் செய்து சாப்பிட்டு அதன் காரணமாகவே பல நோய்களை வரவழைத்துக் கொள்வது அறிவியலுக்குப் புறம்பான சமையற்கலை. இதைப் பற்றி வேறு யாரும் வந்து நமக்குக் கற்றுத் தர வேண்டியதில்லை. நாமே இதில் தேர்ந்தவர்கள்.

Sunday, 21 April 2013

இந்த ஞானம் வந்தால் பின் வேறெது வேண்டும்?


V.கோவிந்தசாமி, 352/K302, Mechanical Maintenance

 

      புனிதமான செயல்களுக்குள் புதைந்து கிடப்பதே புகழ் என்கிறார் சாக்ரடீஸ். அடுத்தவர் நலனை முன்னிறுத்தி தம்மை மெழுகாய் உருக்கி, தியாக வாழ்வு வாழ்ந்தோரெல்லாம், இறவாப் புகழுடையோரே.

      சிலருக்கு வரவேண்டிய ஞானம் வந்துவிட்டால், அவர்களைக் கட்டிப் போட யாராலும் முடியாது. ஒரு ஞானத் தூண்டல் அது. அது தூண்டப்பட்டுவிட்டால், அவர்களது உறுதி வைரத்தின் பலத்தையும் சாய்த்துவிடும். அவர்கள், இந்தச் சமூகத்தை எப்படியாவது புரட்டிப் போட வேண்டும் என்று துடிப்பார்கள். இந்தத் துடிப்பே ஏழை எளியோரின் துயர் துடைக்கும் மாமருந்தாய் அமைகிறது.

Wednesday, 13 February 2013

கனவுகளும் கற்பனைகள் (சென்ற இதழ் தொடர்ச்சி)

வி.கோவிந்தசாமி 352/கே302 மெக்கானிக்கல் மெய்ன்டனன்ஸ்

      அமெரிக்க ராணுவ ஆராய்ச்சித் தலைவரான வான்னவர் புஷ் 1945ல் அட்லாண்டிக் வீக்லி என்ற பத்திரிகையில் நான் நினைத்தால் என்ற கட்டுரையை எழுதினார். அந்தக் கட்டுரையில் அவர், அப்போது நம்மிடம் உள்ள கருவிகளைச் சரியாகப் பயன்படுத்தினால், மனிதனால் உலகம் இதுவரைப் பெற்றுள்ள அத்தனை அறிவையும் அணுகவும் கட்டுப்படுத்தவும் முடியும். மேலும் தகவல்களையும் கம்ப்யூட்டர்களுக்கு இடையில் சங்கிலி போல் இணைக்க முடியும் என்றார். வான்னவர் புஷ்ஷின் கனவுதான் இன்று உலகம் முழுதும் பரவி, விரவி, உள்ளங்கையில் உலகாக சுருங்கி இருக்கும் இண்டர்நெட்.

Tuesday, 25 December 2012

கனவுகளும் கற்பனைகளும்



V.கோவிந்தசாமி 352/K302 Mechanical Maintenance

      பொதுவாக இந்தத் தலைப்பைப் படிக்கிற ஒருவருக்கு ஏதோ ஒரு சினிமா ரசிகன், நடிகையைப் பற்றி காணும் கனவுகள், கற்பனைகள் பற்றி சொல்லப்படும் சமாச்சாரமாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றும்! அல்லது 10 ஆண்டுகளாக லாட்டரி சீட்டு வாங்கும் ஒருவன் தான் எப்படியும் ஒரு நாளைக்கு கோடீஸ்வரனாக ஆகிவிடலாம் என கனவு கண்டு வாழும் ஒரு அப்பாவி பற்றிய விஷயமாக இருக்கலாம் என்று கூடத் தோன்றும்.

Saturday, 13 October 2012

இணைதளம்... ஆனால் பல தளங்களில் பிரச்சனைகள்



V.கோவிந்தசாமி 352/K302 Mechanical Maintenance

      இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் பிரதான பங்கு வகிப்பது தகவல் தொழில்நுட்பம். உலகமே உள்ளங்கையில் சுருங்கிவிட்டது. நோய் தீர கொடுக்கப்படும் மருந்தில் எப்படி பக்க விளைவுகள் உண்டோ அது போல்தான் இணைய தளமும், செல் போன்களும். உலக அளவில் இணைய தளத்தைப் பயன்படுத்தும் 10 நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. அனுப்புனர், முகவரி கையெழுத்து இல்லாமல் வரும் கடிதத்தை அனாமதேய கடிதம் என்போம்.

Wednesday, 1 August 2012

நம்மைச் சிந்திக்க வைக்கும் சில வரிகள் | கவிதை



V.கோவிந்தசாமி,
352/K302, Mechanical Maintenance

மகாத்மா காந்தி
மீண்டும் பிறக்க வேண்டும்
ராட்டையோடு அல்ல...

சாட்டையோடு!
லாரியில் மணல்
கசியும் நீர்
ஆற்றின் கண்ணீர்