Showing posts with label S.ரகுபதி. Show all posts
Showing posts with label S.ரகுபதி. Show all posts

Wednesday, 20 August 2014

மனிதன் மனிதனாக வாழ பத்து அம்சங்கள்

S.ரகுபதி
258/C879

மிகவும் மதிக்கப்பட
வேண்டியவர்கள் _ தாய், தந்தை
மிக மிக நல்ல நாள் _ இன்று
மிகப் பெரிய வெகுமதி _ மன்னிப்பு
மிகப் பெரிய தேவை _ நம்பிக்கை
மிகக் கொடிய நோய் _ பேராசை
கீழ்த்தரமான விசயம் _ பொறாமை
நம்பக் கூடாதது _ வதந்தி
செய்யக் கூடாதது _ நம்பிக்கைத் துரோகம்
விலக்க வேண்டியது _ சோம்பேறித் தனம்
உயர்வுக்கு வழி _ உழைப்பு

Friday, 20 June 2014

பரிசு

S.ரகுபதி
258/C879

சிகரெட் புகையுங்கள்..
மது அருந்துங்கள்...
பான்பராக் சாப்பிடுங்கள்...
பரிசுகளை வெல்லுங்கள்...
முதல் பரிசு : மரணம்
இரண்டாம் பரிசு : புற்றுநோய்
மூன்றாம் பரிசு : காச நோய், பக்கவாதம்
ஆறுதல் பரிசு : பண நஷ்டம்

பரிசுகள் 100% உத்திரவாதம்

Sunday, 27 April 2014

தண்ணீர் தினம் - மார்ச் 22

S.ரகுபதி
258\C879

உலக தண்ணீர் நாள் மார்ச் 22ம் தேதி. இந்நாளையொட்டி தண்ணீரை நாம் எப்படி சிக்கனமாகப் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றிச் சிந்தித்தால் பூவுலகின் சுற்றுச்சூழலைக் காக்க நம்மாலும் சிறிய பங்களிப்பைத் தர முடியும். காய்கறிகளைக் குழாயில் கழுவுவதற்குப் பதிலாக, பாத்திரத்தில் இட்டுக் கழுவலாம். வாஷ் பேசினில் தண்ணீரைத் திறந்து விட்டுக் கொண்டே பல்துலக்க, முகம் கழுவுவதற்குப் பதிலாகத் தேவையான தண்ணீரை மட்டும் எடுத்துப் பயன்படுத்தலாம். ஷவரில் குளிப்பதைவிட பக்கெட்டில் தண்ணீரைப் பிடித்துக் குளிக்கலாம். வாஷிங்மிஷினை எப்போதும் ஃபுல் லோடில் <ஊன்ப்ப் கர்ஹக்> பயன்படுத்தலாம். எல்லா பைப்புகளிலும் தண்ணீர் வெளியேறும் அளவைக் கட்டுப்படுத்தி வைக்கலாம். ஒழுகும் குழாய்கள், டாய்லெட் கசிவுகளை உடனடியாகப் பழுது பார்க்கலாம். வெயிலற்ற காலை, மாலை வேளைகளில் மட்டுமே தாவரங்கள், புல்வெளிகளுக்குத் தண்ணீர் விடலாம். அதிக தண்ணீர் தேவைப்படாத ஆல், அரசு, அசோகம், வேம்பு, செண்பகம், இயல்வாகை, புங்கை போன்ற உள்நாட்டு மரங்களை வளர்க்கலாம். என்ன நண்பர்களே, தண்ணீர் தங்கம் போல; சிக்கனமாகப் பயன்படுத்துவோம்; சுற்றுச் சூழலைக் காப்போம்!

Saturday, 17 August 2013

கரிசலாங்கண்ணிக் கீரை

எஸ்.ரகுபதி 221/C879

வயல் வரப்புகளிலும், வாய்க்கால் கரைகளிலும் நீர்ப்பிடிப்புள்ள இடங்களிலும் உற்பத்தியாகும் கரிசலாங்கண்ணிக் கீரை நமது உடலில் உள்ள கல்லீரலை வலுப்படுத்தும் தனிக்குணம் வாய்ந்தது. இக்காரணத்தால் இக்கீரையை மஞ்சள் காமாலை மற்றும் சோகை போன்ற நோய்களுக்கு பயன்படுத்துகின்றனர். இக்கீரையை பச்சடியாகவும், துவையலாகவும், பருப்புடன் சேர்த்து கூட்டாகவும் செய்து உண்டால் கல்லீரலுக்கு சக்தியும், வலிமையும் ஏற்படும்.

Sunday, 21 April 2013

வாழ்க்கை


S.ரகுபதி, 221/C879

 

நல்ல எண்ணங்களில் கவனமாக இருங்கள்!

அவைகள் தான் சொற்களாக வருகின்றன!

நல்ல சொற்களில் கவனமாக இருங்கள்!

அவைகள் தான் செயல்களாக அமைகின்றன!

நல்ல செயல்களில் கவனமாக இருங்கள்!

அவைகள் தான் உங்கள் ஒழுக்கத்தைக் காட்டுகின்றன!

நல்ல ஒழுக்கத்தில் கவனமாக இருங்கள்!

அதுதான் உங்கள் வாழ்க்கையை உருவாக்குகிறது!

Tuesday, 25 December 2012

பப்பாளிப் பழம்





S.ரகுபதி
221\C879

      பப்பாளிப் பழம் இனிமையான சத்து மிகுதியான பழமாக இருப்பதோடு. மிக மலிவாக கிடைப்பதாக இருந்தும், பெரும்பான்மை மக்கள் இந்தப் பழத்தை விரும்பிச் சாப்பிடுவதில்லை. இந்தப் பழத்தை பற்றிய சில தவறான கருத்துகளே அதற்கு காரணம்.

Saturday, 13 October 2012

சாப்பிடாதீர்கள்



S.ரகுபதி 221/C879

பசியில்லாத போது...
கவலையாக இருக்கும்போது...
தூக்க மயக்கத்தில்...
களைப்பாக இருக்கும்போது...
வேலை நிறைய இருக்கும்போது...

Wednesday, 1 August 2012

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்



S.ரகுபதி
221\C879

நூறு ஆண்டுகள் வாழ பத்து எளிய வழிமுறைகள்

1.     நாம் வசிக்கும் இடத்தில் சூரிய வெளிச்சமும், சுத்தமான காற்றும் ஏராளமாக கிடைக்க வேண்டும்.

2.     பல், ஈறு இவற்றை தினமும் காலை, இரவு இரு வேளையும் பல் துலக்கியால் தேய்த்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.