Showing posts with label அற்புதம் ஜேசுராஜ். Show all posts
Showing posts with label அற்புதம் ஜேசுராஜ். Show all posts

Thursday, 22 January 2015

என்ன செய்வார்கள்? இனி...

அற்புதம் ஜேசுராஜ்
எவரெடி தொழிலகம்



அசிங்கமாக இருப்பதாகச் சொல்லி
ஆற்றங்கரையில் இருந்து
அப்புறப்படுத்தினார்கள்
எங்கள் வீடுகளை...

அழகூட்டுவதாகச் சொல்லி
அங்கேயே
கட்டிக் கொண்டார்கள்
அவர்களின் மாடிகளை!

கடலுக்குள் போய்விடும்
கவலை வேண்டாமென
கழிவுகளைக் கொட்டினார்கள்...
குளிர்பான ஆலைக்கு வேண்டுமென
குழாய் பதித்து
நீரை உறிஞ்சினார்கள்!

அப்போதெல்லாம் ஆற்றுமணலில்
அழுதுபுரண்டபடி
மாரியாத்தா கேட்பாள் என்று
மண்ணை வாரித் தூற்றுவாள் அம்மா!

இன்று...!

அவள் வாரித் தூற்றிய மண்ணையும்
வாரிக் கொண்டு போகிறார்கள்
லாரிகளில்...!
என்ன செய்வார்கள்... இனி...
அம்மாவும்...
மாரியாத்தாவும்...?

Wednesday, 20 August 2014

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்

அற்புதம் ஜேசுராஜ்
எவரெடி தொழிலகம்

1. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தைப் பண்ணு <இது தவறு>
ஆயிரம் பேரிடம் போய்ச் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு <இதுவே சரி>.
2. படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்; எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான் <இது தவறு>
படிச்சவன் பாட்டைக் கொடுத்தான்; எழுதுனவன் ஏட்டைக் கொடுத்தான்  <இதுவே சரி>
3. ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் <இது தவறு>
ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன் <இதுவே சரி>
4. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு! <இது தவறு>
நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு! <இதுவே சரி>
<மாட்டை வாங்கும்போது, அது பதிக்கும் தடமே `சுவடு' ஆகும். அழுத்தமான சுவட்டைப் பதிக்கும் மாடே பலம் வாய்ந்தது ஆகும்>

படித்ததில் பிடித்தது


அம்மா இங்கே வா.. வா..
ஆசை முத்தம் தா.. தா...
பாடம் படித்தன
அனாதை இல்ல குழந்தைகள்.!

Saturday, 28 June 2014

மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி

அற்புதம் ஜேசுராஜ்
எவரெடி தொழிலகம்


இதயத்திற்கு வலிமை தரும் நெல்லிக்கனியை உண்டு தண்ணீரைக் குடித்தால், அது எப்பேர்ப்பட்ட தண்ணீராக இருந்தாலும் இனிக்கும்.

தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால் அது தேகத்திற்கு புத்துணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும். டானிக்காக செயல்படும். தொற்று நோய்கள் ஏதும் தொற்றாது. இதயம், சிறுநீரகம் பலப்படும்.

நெல்லிச் சாறுடன் பாகற்காய் சாறை சேர்த்து சாப்பிட்டால் கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி சர்க்கரை வியாதியைத் தடுக்கும்.

Thursday, 26 December 2013

நம் உடல் எனும் அதிசயம்

அற்புதம் ஜேசுராஜ்
எவரெடி தொழிலகம்

      குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.
நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.
நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு. அது கான்கிரீட்டை விட வலிமையானது.
நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும். தினந்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.

Tuesday, 15 October 2013

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்



அற்புதம் ஜேசுராஜ், எவரெடி தொழிலகம்


  • தினமும் காலையில் ஒரு கப் தயிர் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் அது மூளையை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது.
  • ஜலதோஷத்தினால் தொண்டை கட்டிக் கொண்டால், மிளகைப் பொடி செய்து, ஒரு ஸ்பூன் நெய்யை சூடு செய்து, அதில் மிளகுப் பொடியைச் சேர்த்துக் குடித்தால் தொண்டைக் கட்டு விலகும்.
  • ஒரு தேக்கரண்டி கசகசாவை எடுத்து இரண்டு முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து காய்ச்சி சிறிது கற்கண்டும் சேர்த்து பருகினால் நிம்மதியான உறக்கத்தைப் பெறலாம்.
  • வயிற்றுக் கடுப்பு உள்ளவர்கள், சுடச்சுட வடித்த கஞ்சியை சாப்பிட உடனே குணமாகும்.

Saturday, 17 August 2013

யார் முட்டாள்?

அற்புதம் ஜேசுராஜ், எவரெடி தொழிலகம்

அமெரிக்க பாடசாலை ஒன்றில் எட்டரை வயது சிறுவன் ஒருவனை ``இவன் அடிமுட்டாள், பாடசாலையில் இருந்தால் மற்ற மாணவர்களையும் கெடுத்துவிடுவான்; இனி இவனுக்கு பாடசாலையில் இடமில்லை.'' என்று பள்ளி ஆசிரியர்கள் அவனை அந்தப் பாடசாலையில் இருந்து வெளியேற்றி விட்டனர். அந்தச் சிறுவனின் தாயார் கவலை கொண்டாலும் தைரியமாக வீட்டில் வைத்து அவனுக்குப் பாடங்களைக் கற்றுக் கொடுத்தார். தாயின் கல்வியிலேயே வளர்ந்த சிறுவன், பின்னாளில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டான்.
      வருடா வருடம் அக்டோபர் மாதம் 21-ம் தேதி இரவு 9.59 மணிக்கு தெருவிளக்குகளைத் தவிர மின்சார விளக்குகள் அனைத்தையும் ஒரு நிமிடம் அணைத்து அமெரிக்காவை இருளாக்கிவிட்டு மீண்டும் ஒளிரவிட்டு தொலைக்காட்சி, வானொலியில் இப்படி அறிவிப்பார்கள் ``எடிசன் பிறந்திருக்காவிட்டால் உலகம் இப்படித்தான் இருளாக இருந்திருக்கும்.''

      மேலே கூறிய அந்த முட்டாள் சிறுவன்தான் பின்னாளில் விஞ்ஞானிகளின் தந்தை எனப் போற்றப்படும் தாமஸ் ஆல்வா எடிசன் ஆவார். இப்போது சொல்லுங்கள்; அந்த ஆசிரியர்கள் கூறியது போல எடிசன் முட்டாளா? ஆகவே, யாரும் இங்கு முட்டாள் இல்லை. நீங்களும் அடுத்தவர் அபிப்பிராயத்தில் வாழ்வதை விட்டுவிடுங்கள். உங்களை நீங்களே நிர்ணயப்படுத்துங்கள். உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வைரம் இருக்கிறது. அதைப் பட்டைத் தீட்டுங்கள்!

Sunday, 21 April 2013

2025ல் இந்தியாவில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் வரும் எச்சரிக்கை ரிப்போர்ட்!


அற்புதம் ஜேசுரஜ், எவரெடி தொழிலகம்

 

தமிழ்நாட்டில், நிலத்தடி நீர்மட்ட அளவு குறைந்து கொண்டே செல்கிறது. குளங்கள் வற்றுவதால் சூழ்நிலை சீர்கேடு, தண்ணீருக்கான சண்டைகள் அதிகரித்து வருகின்றன. இப்படியே போனால் 2070ல் தமிழ்நாடு பாலைவனமாக மாறும் வாய்ப்புக்ள அதிகம் என்று எச்சரிக்கின்றனர்.

Wednesday, 13 February 2013

நீரிழிவு நோயுள்ளவர்கள் சாப்பிட வேண்டிய காய்கறிகள்

அற்புதம் ஜேசுராஜ், எவரெடி தொழிலகம்

      தற்போது நீரிழிவு (சர்க்கரை) நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆகவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் கவனிக்க வேண்டிய அம்சங்களை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
      பழங்கள் மற்றும் காய்கறிகள் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தந்தாலும், நீரிழிவு நோயாளிகளுக்கு சில நேரங்களில் அவை கெடுதலை விளைவிக்கும். ஏனெனில் நிறைய காய்கறிகளில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் பொருள் உள்ளது. உதாரணமாக உருளைக்கிழங்கு, கேரட்,

Tuesday, 25 December 2012

காளான்... பேல்பூரி... பானிபூரி... உஷார்



அற்புதம் ஜேசுராஜ்
எவரெடி தொழிலகம்

      சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காளான், பேல்பூரி, பானிபூரி விற்கும் தள்ளுவண்டிக் கடைகள் சாலையோரங்களில் ஆயிரக்கணக்கில் முளைத்திருக்கின்றன. ஒரு பிளேட் ரூ.10\- என்பதால் மாலை நேரத்தில் இக்கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் மொய்க்கின்றன. மாணவர்கள், தொழிலாளர்கள் என பல தரப்பினரும் தினமும் விரும்பி காளான் உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.