Saturday 13 October 2012

மருந்தில்லா மருத்துவம்



B.டில்லி 264/L602 சித்த வைத்தியர் - 8122309822

எட்டு எட்டா மனுஷன் வாழ்வப் பிரிச்சுக்கோ...!

இப்ப எந்த எட்டில் நீ இருக்கே புரிஞ்சுக்கோ...!

      - இது ரஜினியின் `பாட்ஷா' படத்தில் வரும் பாடல். இந்த எட்டுக்கும் மனிதனின் உடலுக்கும் உயிருக்கும் நெருங்கியத் தொடர்பு இருக்கின்றது. இரண்டு சக்கர வாகனத்தில் 8 (எட்டு) போட்டு காட்டினால்தான் ஓட்ட (லைசன்ஸ்) அனுமதி கிடைக்கும்.

      ஆனால் நான் சொல்லும் எட்டு மனித வாழ்வில் தவிர்க்க முடியாத எட்டு.

      இந்த எட்டில் உடலின் ஆரோக்கியம் அடங்கியுள்ளது. இதை அனுபவத்தில் கண்டால் உண்மை புரியும். மனிதனுக்குப் பயன்படும் இந்த எட்டிற்கு விதிமுறைகளும், நெறிமுறைகளும் இருக்கின்றன. கோயில்களில் வழிபாட்டு முறைகளில் அஷ்ட பந்தனம் என்ற முறையைச் செய்வார்கள். `அஷ்ட' என்றால் `எட்டு' என்று பொருள்.

      உடலில் சில நோய்களுக்கு அஷ்ட சூரணம் அல்லது அஷ்ட வர்க்க சூரணம் என்ற மருந்து இருக்கிறது. இது எட்டுவிதமான பொருட்கள் சேர்ந்தது. சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், இந்துப்பு, சீரகம், கடுஞ்சீரகம், பெருங்காயம் ஆகியவைகளை முறைப்படி சுத்தி செய்து தூள் செய்து 1 கிராம் முதல் 2 கிராம் வரை சாப்பிட்டு தண்ணீர் குடிக்க வேண்டும். அல்லது நெய்யில் கலந்து சாப்பிட வேண்டும்.

      இதன் மூலம் செரியாமை, அஜீரணம், வயிற்றுவலி, பசியின்மை, குன்மம், ருசியின்மை, வாதகுன்மம், அஜீரண பேதி ஆகிய நோய்கள் குணமாகும்.

      யோகம் செய்பவர்கள் வாசி யோகம் செய்து விட்டு, பிறகு குண்டலினி யோகம் செய்ய வேண்டும். இந்த இரண்டு யோகத்திற்கு இடைப்பட்ட நேரத்தில் சில நிமிடங்கள் எட்டு போட்டு நடப்பார்கள். ஏனெனில் ஓய்வு கிடைப்பதோடு, அடுத்து வரும் பயிற்சிக்கு உடல் ஆயத்தமாகிறது. வாசி யோகங்களில் நாடி சுத்தி, பிராணாயாமம், யோகவாசி ஆகிய மூன்றுக்கும் ஆண் பெண் கிழமைக்கு ஏற்றவாறு மாற்றித் தொடங்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த எட்டு போன்ற அமைப்பு உண்டாகும்படி நடக்க வேண்டும்.

      இந்த எட்டிற்கான வழிமுறைகளை நெறிமுறைகளை அடுத்த இதழில் தொடர்வோம்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா