அ.பன்னீர்செல்வம் 261\36354
அமிழ்தினும் இனிய தமிழே!
அகத்தியன் வழிதனிலே
வந்திட்ட தமிழே!
இலக்கண இலக்கியம்
படைத்திட்டதாலே
தொல்காப்பியம்
மலர்ந்திட்ட தமிழே!
வள்ளுவனின் செய்யுளிலே
வானுயர நின்ற தமிழே!
அவ்வையின் பொன்மொழியில்
ஆத்திச்சூடியான தமிழே!
கம்பனின் கவிதனிலே
காவியமாய் வாழும் தமிழே!
பாரதியின் புதுமையிலே
படைக்கலனாய் வந்த தமிழே!
முக்கனியின் சுவைச்சேர
முப்பாலும் இனித்திருக்க
செம்மொழியாய்
கனிந்திட்ட தமிழே!
உலகத்தின் செவிதனிலே
வெற்றி முரசு ஒலித்திடவே...
சங்கநாதங்கள் முழங்க
சங்கே முழங்கு தமிழே!
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா