K.N.சஜீவ்குமார் 217\37918
வாய்விட்டுச் சிரித்தால்
நோய் விட்டுப் போகும் என்பார்கள். ஆனால் நம் அமைச்சர்களும் அதிகாரிகளும் அடிக்கும்
காமெடிகளுக்கு வாய்விட்டுச் சிரித்தாலும், நமக்கு வயிற்றெரிச்சலும், இரத்தக் கொதிப்பும்தான்
வருகிறது.
ஐஸ்கிரீம் 20 ரூபாய் கூடினாலும் மக்கள் கவலைப்படுவதில்லை.
ஆனால் அரிசி விலை ரூ.2 கூடினாலும் அவர்கள் போராட்டத்தில் இறங்கிவிடுகிறார்கள் என்று
ப.சிதம்பரம் காமெடி செய்தார். உணவுக் கிடங்குகளில் எலியும், புழுவும் தின்னும் அரிசியை
தங்களுக்குக் கேட்கும் மக்களின் போராட்டம் அவருக்கு எரிச்சலை ஏற்படுத்துவது ஏன்?
நிலக்கரி ஊழலில் மத்திய அமைச்சர் ப.சி. ழங்ழ்ர்
கர்ள்ள் என்றார். அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தபோது, நான் அப்படிச் சொல்லவில்லை. அரசுக்கு
நஷ்டமேதும் இல்லை என்றுதான் சொன்னேன் என்றார். இது இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று
யோசித்து குழப்பமும், சிரிப்பும் வந்தது.
பேனி பிரசாத் வர்மா என்ற அமைச்சர் விலை உயர்வால்
விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர் என்றார். விவசாயிகள் தற்கொலை அதிகரிக்கும் சோகத்தைத்
திசைத்திருப்பி காமெடி செய்தார். மாண்புமிகு பிரதமரோ ``வார்த்தைகளில் பதில் சொல்வதை
விட மௌனமே சிறந்தது'' என்றார். அவரது கட்டுப்பாட்டில் இருந்த நிலக்கரித் துறை உட்பட
பல ஊழல்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அதிகார உச்சத்தில் இருக்கும் அவரது பதில் சிரிப்பையும்
பயத்தையும் ஏற்படுத்துகிறது.
ஐந்து நிமிடத்திற்கு ஒரு பெண் இந்தியாவில் பாலியல்
துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுகிறார் என்ற புள்ளிவிபரம் நம்மை நடுங்க வைக்கும் வேளையில்,
ஆந்திர ஈ.எ.ட. தினேஷ் ரெட்டி பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்களுக்கு பெண்கள் அணியும்
நவ நாகரிக உடைகளே காரணம் என்று காமெடி செய்தார். இத்தனைக்கும் இந்தக் குற்றங்களால்
பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் குழந்தைகள் என்பதையும், பலர் புடவை, சுடிதார், பர்தா போன்ற
உடைகள் அணிந்திருந்ததையும் மறைத்து குற்றத்துக்கு ஈ.எ.ட. யே வக்காலத்து வாங்குகிறார்.
குஜராத்தில் பெண் குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல்
இருப்பதற்குக் காரணம் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதைவிட அழகாக இருப்பதையே விரும்புகிறார்கள்
என்று நகைப்புக்குரிய கருத்தை வெளியிட்டார் நரேந்திர மோடி.
கோஷ்டி பூசல், ஊழலால் ஆட்சி இழந்த எடியூரப்பா
``எனக்கு யாரோ பில்லி, சூனியம் வைத்துவிட்டனர்'' என்று காமெடி செய்தார்.
பொறுப்புவாய்ந்த பதவிகளில் அமைச்சர்களாய் அதிகாரிகளாய்
இருக்கும் இவர்களால் வடிவேலுவும், சந்தானமும், விவேக்கும் வேலையிழந்து விடுவார்களோ?
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா