Saturday 13 October 2012

நவீன அறிவியலின் சிற்பி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்



C.தவமணி 268\36971

      நவீன அறிவியலின் சிற்பியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சமர்ப்பித்த    உ = ம்ஸ்ரீ2 என்ற கட்டுரை வெளியான ஏழு மாதங்களில் புகழின் உச்சிக்குச் சென்றார். அப்படியென்றால் கலிலியோ, நியூட்டன் கோட்பாடுகள் தவறா என்ன? என்று நம் மனதில் கேள்வி எழும். தவறில்லை என்பதே அதற்கான பதில்!

      பூமியே பிரபஞ்சத்தின் மையம் என்று நம்பியிருந்த அந்தக் காலத்தில் மதவாதிகளின் துன்புறுத்தலுக்கு உள்ளான கலிலியோ (1606ம் ஆண்டு) பூமி உருண்டை வடிவம், பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது. சூரியன் பூமியைச் சுற்றவில்லை என தன் காலத்தில் அவரே கண்டுபிடித்த தொலை நோக்கி மூலம் ஆய்ந்தறிந்து நிரூபித்தார் என்றாலும், கோள்களும் சூரியனும் அந்தரத்தில் எப்படி மிதக்கின்றன என்ற கேள்வி அறிவியலாளர்களைத் துளைத்தெடுத்தன. அதன் பின்பு வந்த ஐசக் நியூட்டனின் (1665-67) நிறை ஈர்ப்பு கோட்பாடு இயற்பியலின் பல புதிர்களுக்கு விடையளித்தது.

      பொருட்களின் கனம் என்பது விசையின் வேகத்தைப் பொருத்தது. உதாரணத்திற்கு ஒரு பந்து உந்தித் தள்ளும் போது உருள்கிறது. விசையின் வேகத்தைப் பொருத்து அது உருள்கிறது. அதுபோல்தான் பிரபஞ்சமும்.     அதேபோல காலம் வேறு, இயக்கம் வேறு. காலம் என்றென்றைக்கும் இருந்து கொண்டிருக்கும். இரு நிகழ்வுகளுக்கு இடையிலான காலத்தை அளவிட முடியும் என்றார். நியூட்டனின் கோட்பாட்டை வைத்துதான் கோள்களின் இயக்கத்தை கண்டுபிடிக்க முடிந்தது.

      கலிலியோ, நியூட்டன், மைக்கேல்சன், லாரன்ஸ் ஆகிய நால்வர் இட்ட அஸ்திவாரத்தின் மேல்தான் என்னுடைய சார்பியல் கோட்பாடு அமைந்துள்ளது என்று தன்னடக்கத்தோடு கூறினாராம் ஐன்ஸ்டீன். இதன் மூலம் அறிவியல் கண்டுபிடிப்புகள் தனி மனிதனுடையது அல்ல என்பது தெளிவாகிறதல்லவா?

      ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் புரிந்தும், புரியாதது போல் உள்ளது என்ற போது, சார்பியல் தத்துவம் எளிமையானது என்கிறார் ஐன்ஸ்டீன். உதாரணத்திற்கு கற்பனையாக பிரபஞ்சத்தைக் கலைத்து விடுவோமேயானால் இடம், காலம் என்பதே கிடையாது. உதாரணத்திற்கு ஒரு கார் 100 கி.மீ. வேகத்தில் ஓடுகிறது என்றால் பூமியை ஓய்வாக வைத்துத்தான் காரின் ஓட்டத்தையும் வேகத்தையும் அளவிட முடியும். இது போல மேலும் பல உதாரணங்களோடு சார்பியல் தத்துவத்தை எளிமையாகப் புரிந்து கொள்ள முடியும். உதாரணமாக கற்பனையாக வைத்துக் கொள்வோம். ஒளி வேகத்தில் பூமியிலிருந்து விண்கலத்தில் 30 வயது நிரம்பிய ஒருவர் தன்னுடைய 5 வயது மகனுக்கு டாடா காண்பித்துவிட்டு ஒரு மாதம் கழித்து திரும்பி வந்தார் அவருக்கு 30 வயது ஒரு மாதம் மட்டுமே ஆகியிருக்கும். ஆனால் அவர் மகனோ 35 வயது நிரம்பியவனாக இருப்பார். ஆக பூமியில் இருப்பது போல் வெளியில் காலம் ஒன்று இருப்பதில்லை.                   

(ஐன்ஸ்டீன் தொடர்வார்)

1 comment:

  1. Anonymous11:55 am

    please give more detailed information

    ReplyDelete

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா