Wednesday, 13 February 2013

அக்குபங்சர் - வாழ்வியல் மருத்துவம்

Healer R.மாதவன் D.E.C.E., M.Acu.
அக்குபங்சர் வாழ்வியல் மருத்துவ
ஆலோசகர், செல்: 9840732871
353\37026

இயற்கை விதி மீறல் என்பது
தாகம் அற்ற நிலையில் நீர் அருந்துவது. தாகம் இருக்கும் போது நீர் அருந்தாமல் இருப்பது.
பசிக்கும்போது சாப்பிடாமல் இருப்பது. பசிக்காத போது சாப்பிடுவது.
தூக்கம் வரும்போது விழித்திருப்பது. ஓய்வு தேவைப்படும்போது உழைப்பது. அதிக கடினமான உடல் உழைப்பு.

இயல்பான எண்ணங்களுக்கு மாறாக நடந்து கொள்வது.
அளவுக்கு அதிகமான சுவையுடன் உணவு உட்கொள்ளல்.
புகையிலை, பீடி, சிகரெட் மற்றும் மதுபான வகைகள் உபயோகித்தல்.
      போன்றவை எல்லாம் இயற்கையான இயல்புகளுக்கு எதிரான செயல்களாகும்.
      இதனால் செரிமானத் திறன் பாதிக்கப்பட்டு சாப்பிட்ட உணவின் பெரும் பகுதியானது கழிவுப் பொருள்களாக மாறுகின்றன. இந்தக் கழிவுப் பொருள்கள் உடல் உறுப்புகளில் தேக்கம் கொள்வதுதான் நோயின் முதற்கட்டமாகும். இந்தக் கட்டத்தில் உடலானது தேங்கிய கழிவுகளைத் தும்மல், சளி காய்ச்சல், வாந்தி, பேதி, அலர்ஜி, அரிப்பு, என பல வகைகளில் வெளியேற்றுகிறது. உடலே, உடலைத் தூய்மைப் படுத்தும் இந்த அற்புதமான பணிக்கு நாம் ஒத்துழைக்காமல் மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு அடக்கும்போது கழிவுகள் மேலும் பெருகி உள் உறுப்புகளில் நிரந்தரமாகத் தங்கி விடுகின்றன. இதனால் சம்பந்தப்பட்ட உறுப்பு பாதிப்படைகிறது. இப்பொழுது நோய் என்பது இரண்டாவது கட்டத்தை அடைந்துவிடுகிறது. பல வருடங்களுக்கு இப்படித் தொடரப்படும் இயற்கை மீறல்களாலும் மருந்து மாத்திரைகளைக் கொண்டு உடலின் சுத்திகரிப்பு செயலைத் தடுப்பதாலும் பாதிக்கப்பட்ட உறுப்பில் கழிவுகள் மேலும் மேலும் தேங்கி அந்த உறுப்பே சீரழிகின்ற நிலைக்குத் தள்ளப்படுகிறது.
      இது நோயின் மூன்றாவது கட்டமாகும். இந்த நிலையில் தான் ஸ்கேன், எக்ஸ்ரே மூலம் சீரழிந்த உறுப்பைக் கண்டுபிடித்து அறுவை சிகிச்சை மூலம் உறுப்பையே வெட்டி எறிகிறார்கள். எனவே நோயின் இறுதி நிலையைத் தான் ஸ்கேன், எக்ஸ்ரே மூலம் கண்டறிகிறார்கள். நோயின் தன்மை எந்த கட்டமாக இருந்தாலும் சரி, கழிவு தேக்கம்தான் நோய், கழிவு நீக்கம்தான் சிகிச்சை.
      இந்தக் கழிவு நீக்கப் பணியை உடல்தான் செய்கிறது. உடலுக்குப் போதுமான சக்தி கிடைக்கும்போது உடலே மருத்துவராகச் செயல்படுகிறது. பாதிக்கப்பட்ட உள் உறுப்புகளை இயக்குவதற்குப் போதுமான சக்தி கிடைக்கும் போது உடலே தேங்கிய கழிவுகளை வெளியேற்றத் தொடங்குகிறது. நோயும் நீங்கத் தொடங்குகிறது. எனவே, நோய்க்கு சிகிச்சை என்பது சம்பந்தப்பட்ட உறுப்பு சிறப்பாக இயங்க சக்தியைக் கொடுப்பதுதான்.
      அந்த சக்தி தேவையை நிறைவேற்றும் பணியைத்தான் அக்குபங்சர் மருத்துவம் செய்கிறது. எனவே, அக்குபங்சர் ஒரு சக்தி மருத்துவமாகும். பஞ்ச பூத சக்தியை அடிப்படையாக கொண்ட மருத்துவமாகும்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா