Showing posts with label 2013 02 February. Show all posts
Showing posts with label 2013 02 February. Show all posts
Thursday, 21 February 2013
அக்கம்பக்கம்
-
ஏ.சி.சி.எல்.: 9.1.2012 அன்று ஏ.சி.சி.எல். தொழிற்சங்கம், நிர்வாகத்திற்கிடையில் நடந்த பேச்சுவார்த்தை முன்னேற்றகரமான முறையில் இருந்தது. ஏ.சி.சி.எல். சங்கத் தலைவர் தோழர் டி.என்.நம்பிராஜன் மற்றும் பொதுச்செயலாளர், சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் அசோக்லேலண்ட் இந்துஜா குழுமத்தின் இ.டி. திரு.உதயசங்கர், மற்றும் ஏ.சி.சி.எல். தொழிலகத்தின் ஹார்டுராக் நிறுவன உரிமையாளர் திரு.தரம்வீர்சிங் மற்றும் ஏ.சி.சி.எல் முன்னாள் சி.இ.ஓ. திரு.எஸ்.என்.பாலசுப்பிரமணியன் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் உற்பத்தி நின்று போயிருந்த கம்பெனியை நடத்துவதில் தான் உறுதியாக இருப்பதாகவும், அதற்காக வங்கிக்கடன் உதவியை நாடி இருப்பதாகவும் திரு.தரம்வீர்சிங் தெரிவித்துள்ளார். தற்போது தொழிலாளர்களுக்கு சம்பளத்தில் ஒரு பகுதி தரப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிச் சூழலிலும், தொடர்ச்சியாக முயன்று ஏ.சி.சி.எல்.-ல் உற்பத்தி துவங்க பெருமுயற்சி எடுத்து வெற்றி பெற்ற தோழர் டி.என்.நம்பிராஜன் தலைமையிலான சங்கத்தைப் பாராட்டுகிறோம்.
Labels:
2013 02 February,
அக்கம்பக்கம்
இசையால் வளமாகும் கற்பனைத்திறன் - பாகம் 10
உரிமைக்குரல்: மேடைக் கச்சேரிகள் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?
ஜெ.எஸ்.: மேடைக் கச்சேரிகள் இரைச்சலின் கூடாரமாக
மாறிவிட்டன என்பது அனைவரும் அறிந்ததுதான். சங்கீதமும்,
சாகித்தியமும் பின்னுக்குத் தள்ளப்பட்டு,
கண்ணைப் பறிக்கும் விளக்குகளின் அர்த்தமில்லாத நடனங்களும்,
விரசமான நடன அமைப்புகளுமே பிரதானப் படுத்தப்பட்டு விட்டன என்பது
வருத்தத்திற்குரியது. விதி விலக்குகளும் உண்டு.
Labels:
2013 02 February,
பயனியர்
சுதர்சனக் கிரயா
நம் அன்றாட அலுவல்களில் ஒரே
விதமான அசைவுகளால் உடல் பழக்கப்பட்டு, நாளடைவில் உடலில் ஒரு இயந்திரத்தனமான
இயக்கம் பெரும்பாலோருக்கு அமைந்து விடுகிறது. ஆதலால் நம் உடலின் முழுமையான ஆற்றல் படிப்படியாகக்
குறைந்து வருகிறது.
ஆகவே, நண்பர்களே!
உடல் நலனைக் காக்க நாம் சிறு சிறு அசைவுகள் மூலம், நம் உடலை சுறுசுறுப்பாக வைத்துக்
கொள்ள முடியும். அதற்கு மூச்சுப் பயிற்சி இன்றியமையாத தேவையாக உள்ளது. மூச்சை ஏற்றி, இறக்க
உள்ளிழுப்பு,
வெளியேற்றப் பயிற்சி நமக்கு மிகவும் நன்மை பயக்கும்.
வாழ்த்துகிறோம்
பாட்டாளி வர்க்கத்தின் உன்னதத்
தோழன் `சிஐடியு'வின் தமிழ் மாநில 12வது மாநாடு திருச்சியில் பிப்ரவரி 1, 2, 3, 4 தேதிகளில் நடைபெறுகிறது. அம்மாநாட்டில் அசோக் லேலண்ட் தொழிலகக்குழுவின் பிரதிநிதியாக
உழைப்போர் உரிமைக் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் சி.தவமணி (268\36971) பங்கேற்கிறார். உழைக்கும் வர்க்கத்தின் குரலை எதிரொலிக்க மாநாட்டிற்குச் சென்றுள்ள
அவரை வாழ்த்துகிறோம்!
திருச்சியில் நடைபெறும் சிஐடியு
மாநில மாநாடு வெல்லட்டும்!
Labels:
2013 02 February
கண்ணீரின் அர்த்தம்
எஸ்.கெஜராஜ் 375/கே 700
சென்னையில் பிரதான திரையரங்கில்
கூட்டம் நிரம்பி வழிந்தது. இதற்காக முக்கிய விநியோகஸ்தர்கள், முன்னணி
இயக்குனர்கள்,
மூத்த இசை அமைப்பாளர்கள் மற்றும் பிரபல நடிகர், நடிகையர்கள்
அனைவரும் அந்தப் படத்தின் ப்ரிவியூவைக் காண வந்திருந்தனர். மேலும் திரையிடப்போகும்
படத்தில் இருப்பவர் அனைவருமே புதியவர்கள். தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர், நடிகர், நடிகையர்
மற்றும் பின்னணிப் பாடகர்கள் எல்லோரும் புதியவர்கள்.
Labels:
2013 02 February,
S.கெஜராஜ்,
சிறுகதை
வரவேற்கிறோம்... கூட்டுறவு சங்கத் தேர்தல்....
- ஆசிரியர்க்குழு
தமிழக அரசு
கொண்டு வந்த சட்டத்தின்படி கூட்டுறவு அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம்
அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இது வரவேற்கத்தக்கது. கூட்டுறவு தேர்தல் ஆணையம்
வாக்காளர் பட்டியலை முழுமையாகத் திருத்தி ஒவ்வொரு கூட்டுறவு நிறுவனமும் வெளியிட வேண்டும்.
தேர்தலுக்கான
இதர நடைமுறைகளுக்கும், பிரச்சாரத்திற்கும்
உரிய கால அவகாசம் அளித்து தேர்தலை நடத்த அரசு முனைப்பு காட்ட வேண்டும் என்பதே உறுப்பினர்களின்
எதிர்பார்ப்பு!
Labels:
2013 02 February,
ஆசிரியர் குழு
விளையாட்டு என்றால் விளையாட்டா என்ன?
கே.என்.சஜீவ்குமார் - 217/37918
விளையாட்டு
ஒரு சிறந்த பொழுதுபோக்கு மட்டுமல்ல; மக்களுக்கு பல நோய்களும்,
கலப்பட உணவுகளும் கிடைக்கும் இக்காலத்தில் அது அவசியமானதும் கூட. ஆஸ்திரேலியாவும்,
நெதர்லாந்தும் உலகின் ஆரோக்கியமான நாடுகளாகக் கருதப்படுகின்றன. இந்நாடுகளில்
1%க்கும் குறைவான பேர்களுக்கு மட்டுமே இதயநோய் வருகிறது. காரணம்
இந்நாடுகள் விளையாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஆகும். ஆனால், இந்தியாவில் தனியார்மயம், தாராளமயம், உலகமயத்திற்கு பின் வயல்களும், ஏரிகளும் காணாமல் போவதுபோல,
விளையாட்டு மைதானங்களும் ரியல் எஸ்டேட் முதலைகளின் பசிக்கு இரையாகின்றன.
விளைவு, பணம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, தீய பழக்கங்களுக்கு ஆளாகும் இளைஞர் சமூகத்தை உருவாக்கி வைத்துள்ளோம். உதாரணத்திற்கு,
டெல்லி மாணவி கற்பழிப்பில் ஒரு குற்றவாளிக்கு வயது 17 மட்டுமே.
Labels:
2013 02 February,
K.N.சஜீவ்குமார்,
கட்டுரை
டாக்டர் அம்பேத்கரின் இன்றைய தேவை - நூல் அறிமுகம்
எம்.ஆதிகேசவன்
- 264 / ஜெ066
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் சென்னை பல்கலைக் கழகத்தில்
டாக்டர் அம்பேத்கர் பற்றி ஆற்றிய சொற்பொழிவே நூல் வடிவம் பெற்று வந்துள்ளது. அம்பேத்கர்
பிறந்து, வாழ்ந்து,
இறந்த பின்பும் இன்றும் அவர் தேவைப்படுகிறார் என்பதே இந்நூல்
நமக்குத் தரும் செய்தி.
Labels:
2013 02 February,
M.ஆதிகேசவன்,
கட்டுரை
Wednesday, 13 February 2013
கையில காசு - வாயில தோசை
எஸ்.சுகுமார் - 266/சி858
வெளியில் விளையாடிவிட்டு
வீட்டுக்குள் ஓடிவந்த வித்யா ``அம்மா பசிக்குதும்மா எப்பம்மா சோறு செய்வே? ரொம்ப
பசிக்குதும்மா''
என்று சமையல் செய்வதற்கான ஏற்பாடு இருக்கிறதா இல்லையா என்று
சமையல்கட்டை நோட்டம் விட்டுக் கொண்டே கேட்டாள்!
மெல்ல தன் அருகில் வந்த குழந்தையை
வாரியணைத்து ஆறுதல் சொல்லக்கூடத் தெம்பில்லாமல் ``அப்பா வரட்டும் கண்ணு, வந்தவுடன
உனக்கு சோறு செஞ்சி கொடுக்குறேன். போய் விளையாடு'' என்று கூறி பெருமூச்சு விட்டாள்
கோமதி.
Labels:
2013 02 February,
S.சுகுமார்,
சிறுகதை
கனவுகளும் கற்பனைகள் (சென்ற இதழ் தொடர்ச்சி)
வி.கோவிந்தசாமி
352/கே302 மெக்கானிக்கல் மெய்ன்டனன்ஸ்
அமெரிக்க ராணுவ ஆராய்ச்சித்
தலைவரான வான்னவர் புஷ் 1945ல் அட்லாண்டிக் வீக்லி என்ற பத்திரிகையில் நான் நினைத்தால்
என்ற கட்டுரையை எழுதினார். அந்தக் கட்டுரையில் அவர், அப்போது நம்மிடம் உள்ள கருவிகளைச்
சரியாகப் பயன்படுத்தினால், மனிதனால் உலகம் இதுவரைப் பெற்றுள்ள அத்தனை அறிவையும் அணுகவும்
கட்டுப்படுத்தவும் முடியும். மேலும் தகவல்களையும் கம்ப்யூட்டர்களுக்கு இடையில் சங்கிலி
போல் இணைக்க முடியும் என்றார். வான்னவர் புஷ்ஷின் கனவுதான் இன்று உலகம் முழுதும் பரவி, விரவி, உள்ளங்கையில்
உலகாக சுருங்கி இருக்கும் இண்டர்நெட்.
Labels:
2013 02 February,
V.கோவிந்தசாமி,
கட்டுரை
அக்குபங்சர் - வாழ்வியல் மருத்துவம்
Healer R.மாதவன் D.E.C.E.,
M.Acu.
அக்குபங்சர் வாழ்வியல் மருத்துவ
ஆலோசகர், செல்: 9840732871
353\37026
இயற்கை விதி மீறல் என்பது
தாகம் அற்ற நிலையில் நீர் அருந்துவது. தாகம் இருக்கும்
போது நீர் அருந்தாமல் இருப்பது.
பசிக்கும்போது சாப்பிடாமல் இருப்பது. பசிக்காத போது சாப்பிடுவது.
தூக்கம் வரும்போது விழித்திருப்பது. ஓய்வு தேவைப்படும்போது
உழைப்பது. அதிக கடினமான உடல் உழைப்பு.
Labels:
2013 02 February,
R.மாதவன்,
கட்டுரை
பொடுதலை
அனந்த நாராயணன் 275\L192
ஒரு அரசனுக்கு ஒரு நாள் திடீரென
மூட்டுவலி ஏற்பட்டது. தாங்க முடியாத வலியால் துடித்தான். உடனே அரண்மனை வைத்தியருக்குத்
தகவல் சென்றது. வைத்தியர் வந்து பார்த்துவிட்டு இதற்கு ``பொடுதலை''யை அறுத்து
வந்து கசக்கிக் கட்டினால் சரியாகப் போய்விடும். நான் சென்று பொடுதலையை அரிந்து வருகிறேன்
என்று சொல்லிச் சென்றார். வழியில் உறவின் ஒருவர் இறந்துவிட்டதால் அரசருக்குத் தகவல்
அனுப்பிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார்.
Labels:
2013 02 February,
ஆனந்த நாராயணன்,
கட்டுரை
கிரைம் ஸ்டோரி - குற்றம் (சட்டம் என்ன சொல்கிறது?)
பிரேம்
என்.பிரேமராசன், பி.எஸ்.சி., பி.எல்.,
கடந்த இதழில் குற்றம் என்பதன்
தேவைகள் (எலிமென்ட்ஸ் ஆப் கிரைம்) குற்றத்தின் வகைகள், பிரிவுகள், இந்திய
தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.) 1860 படி என்னென்ன தண்டனைகள்
என்பதைப் பகிர்ந்து கொண்டோம். இதன் தொடர்ச்சியாக எங்கு, எப்படி, எதனால்
குற்றங்கள் ஏற்படுகின்றன. அதற்கான தண்டனைகள் என்னென்ன என்பது பற்றி இப்போது காண்போம்.
அஞ்சலி
முகநூலில்
இருந்து எஸ்.உமாகாந்தன் 221/L210
பெண் என்பவள் தாயென்றால்...
பெண் என்பவள் தெய்வமென்றால்...
பெண் என்பவள் நீர் நிலமென்றால்...
அவிழ்க்கப்படும் ஆடைகள் எவருடையவை?
அடுத்தடுத்து துகிலுரிதல் தொடர....
அம்மணமாகும் தேசத்தின் மானம் காக்க...
உயராத கரங்கள்
உதவாக் கரங்களே!
Labels:
2013 02 February,
S.உமாகாந்தன்,
எஸ்.உமாகாந்தன்,
கவிதை
தொழிற்சங்க அரங்கில் நமது கடமைகள் - பாகம் 2
உபரி மதிப்பு
ஆரம்பகால சமூகத்தில் பண்ட மாற்றுமுறை இருந்து வந்தது. நெற்பயிர் செய்தவன் நெல்லையும்,
பழங்களைப் பயிர் செய்தவன் பழங்களையும் கொடுத்து பரிமாறிக் கொண்டனர்.
நாளடைவில் சமூகத்தில் விஞ்ஞானம் வளர்ச்சி பெற்று உற்பத்தி முறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது.
விலங்குகளையும், உடல்
உழைப்பையும் கொண்டு உற்பத்தி செய்தவர்கள் எந்திரங்களின் துணை கொண்டு உற்பத்தியில் ஈடுபட்டனர்.
பண்டமாற்று முறை ஒழிந்து பணம் எனும் பொதுவான வர்த்தக பரிவர்த்தனை சாதனம் உருவானது.
உற்பத்தி சக்திகளில் ஏற்பட்ட மாற்றம், உற்பத்தி உறவுகளிலும் ஏற்பட்டது. ஆண்டான் (அரசன்) அடிமை
(வேலை செய்பவர்கள்) முறை விஞ்ஞான வளர்ச்சியால் உருவானது. உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் தாஜ் மஹால்
பல்வேறு அடிமைகளைக் கொண்டு அக்காலகட்டத்தில் கட்டப்பட்டது.
Labels:
2013 02 February,
கட்டுரை,
கி.சுரேஷ்
கலங்காதே கமல்..
சு.சக்கீர் - 240\J030
உலக நாயகனே...
உங்களுக்கு இப்படி ஒரு சோதனையா என்று பரிதாபப்படும் அளவுக்கு,
விஸ்வரூபம் திரைப்படச் சிக்கல் உருவாகியுள்ளது. மருதநாயகம்,
மர்மயோகி என ஒரு சில திரைப்படங்கள்,
தயாரிப்பு நிலையிலேயே நிறுத்தி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது
கூட நீங்கள் இந்த அளவு வருத்தப்பட்டிருக்க மாட்டீர்கள். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
ஆட்சிகாலத்தில், கருத்துச்
சுதந்திரம், பத்திரிகைச்
சுதந்திரம் பாதுகாக்க தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் போன்ற அமைப்புகள்
நடத்திய போராட்டங்களில் முன்னணியில் அணிவகுத்து நின்றவர் நீங்கள்.
Labels:
2013 02 February,
கட்டுரை,
சு.சக்கீர்
நீரிழிவு நோயுள்ளவர்கள் சாப்பிட வேண்டிய காய்கறிகள்
அற்புதம் ஜேசுராஜ், எவரெடி தொழிலகம்
தற்போது நீரிழிவு (சர்க்கரை) நோயால்
பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆகவே நீரிழிவு
நோய் உள்ளவர்கள் கவனிக்க வேண்டிய அம்சங்களை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
பழங்கள் மற்றும் காய்கறிகள்
உடலுக்கு ஆரோக்கியத்தைத் தந்தாலும், நீரிழிவு நோயாளிகளுக்கு சில நேரங்களில்
அவை கெடுதலை விளைவிக்கும். ஏனெனில் நிறைய காய்கறிகளில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின்
அளவை அதிகரிக்கும் பொருள் உள்ளது. உதாரணமாக உருளைக்கிழங்கு, கேரட்,
Labels:
2013 02 February,
அற்புதம் ஜேசுராஜ்,
கட்டுரை
பாப்பா பாட்டு
கோ.ஜெயகாந்தன்
360\38519 டூல் ரூம்
என்னாடி... என்னாடி...
முகம் பார்க்கும் கண்ணாடி...
குழந்தையும் அதுபோலத் தாண்டி... (என்னாடி)
தாய் என்பவள் அன்பு காட்டுவாள்!
தந்தை என்பவன் வழி நடத்துவான்!
அப்போ... ஆசிரியன் என்பவன் யாரடி?
அன்பு காட்டுவான்... அறிவு புகட்டுவான்...
நாட்டுக்கே தலைவனாக்கி வழி நடத்துவான்!
இதெல்லாம்... நடக்குதாடி...
இது இல்லாமதான் தகிதனத்தோம் போடுறோம்டீ!
என்னாடி... என்னாடி...
முகம் பார்க்கும் கண்ணாடி...
குழந்தையும் அதுபோலத் தாண்டி... (என்னாடி)
Labels:
2013 02 February,
கவிதை,
கோ.ஜெயகாந்தன்
காசிருந்தால் மருத்துவம்
க.ராமையன்
221\36038
ஒரு அரசின் அடிப்படைக் கடமைகளில்
ஒன்று சுகாதாரமும், ஆரோக்கியமும். ஒரு நாட்டின் செல்வம் அம்மக்களின் மனிதவளம்தான்.
அனைவருக்கும் ஆரோக்கியம் என்ற ஐக்கிய நாடுகள் சபை முன் வைத்த உறுதிமொழியில் நம் நாடு
கையெழுத்திட்டு 35 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனால் இன்றைய நிலை என்ன?
Labels:
2013 02 February,
க.ராமையன்,
கட்டுரை
Subscribe to:
Comments (Atom)











