Sunday 21 April 2013

அக்குபங்சர் - வாழ்வியல் மருத்துவம் - 3


Healer R.மாதவன் D.E.C.E., M.Acu, அக்குபங்சர் வாழ்வியல் மருத்துவ ஆலோசகர், செல்: 9840732871, 353\37026

 

``காய்ச்சல்'' என்றால் என்ன? அதை எவ்வாறு குணப்படுத்துவது? முதலில் பார்ப்போம்.

``காய்ச்சல்'' - என்பது மிகவும் அத்தியாவசியமானது. காய்ச்சல் ஏற்பட்டால்தான் பிற்காலத்தில், எந்தவிதமான நாட்பட்ட நோய்களாலும் பாதிக்கப்பட மாட்டோம் என்பதை நாம் அறிய வேண்டும். உண்மையில் ``காய்ச்சல்'' என்பதே ``நோய் எதிர்ப்பு சக்திதான்'' காய்ச்சல் என்ற நோய் எதிர்ப்பு சக்தி ஜூரம் தணிக்கும் இரசாயன மாத்திரைகளால் சிதைக்கப்படும்போது நோய் எதிர்ப்புத் திறன் உடலில் வெகுவாகக் குறைகிறது. உடலில் ஏற்படும் நோயை குணப்படுத்திட காய்ச்சல் என்ற நோய் எதிர்ப்பு சக்தி தோன்றியதோ அந்த சக்தி நீக்கப்பட்ட நிலையில் நோயின் தீவிரம் அதிகமாகிறது. நோய் எதிர்ப்பு சக்தி மீண்டும் திரண்டு வரும் போது சிறிது கால இடைவெளியில் மீண்டும் காய்ச்சல் தோன்றுகிறது.

      ஒவ்வொரு முறை ஜூரமும், வலியும் ஏற்படும்போதும் ஒரு குறிப்பட்ட நோய் அல்லது சில நோய்கள் நிச்சயமாகத் தீவிரமாக எதிர்த்து அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.

      அது எந்தப் பெயர் கொண்ட ஜூரமாக இருந்தாலும் சரி, ஜூரம் தானே அடங்கும் வரையில், ஒரு நாளோ, இருண்டு நாளோ அல்லது ஒரு வாரமோ உடல் சமச்சீர் நிலையை அடையும் வரையில் அழகான அமைதியான பொறுமையை மேற்கொள்ளுங்கள்.

      இரசாயன மருந்துகளின்றி ``காய்ச்சல்'' தானே சரியாக நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள்.

1.     ஜூரத்தின் போது வெப்பம் மிகவும் இருக்குமானால், நெற்றியிலும், அக்குளிலும் லேசான ஈரத்துணியை வையுங்கள்.

2.     தாகம் எடுக்கும் வரை ஒரு வாய் தண்ணீர்க்கூட அருந்த வேண்டாம்.

3.     தாகம் தொடங்கும்போது எந்த அளவுக்கு போதும் என்கிறதோ அந்த அளவிற்குத்தான் தண்ணீர் அருந்த வேண்டும்.

4.     தாகம் முழுமையாக எடுக்கும் வரை உணவு கூடாது. பால், டீ, ஹார்லிக்ஸ், பிரட் போன்றவைகளும் கூடாது.

5.     தாகம் முழுமையாக அடங்கிய பிறகுதான் பசி உணர்வு வரும்.

6.     பசி உணர்வு ஏற்பட்டதும் கஞ்சியும், மறு வேளையிலிருந்து உணவும் முறையாக உண்ணுங்கள்.

7.     பசி எடுத்து சாப்பிட ஆரம்பித்து நாலைந்து நாட்களுக்குப் பால், டீ, காபி, ஹார்லிக்ஸ் போன்றவற்றைக் கண்டிப்பாகத் தொடக்கூடாது. அதன் பின்னரும் தவிர்த்துக் கொண்டால் உடல் நலனுக்கு மிகவும் நல்லது.
      இந்த முறையைப் பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஜூரத்தின் போது கடைப்பிடியுங்கள். உங்கள் வாழ்நாளில் நோய் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா