அனந்த நாராயணன், 275/L192
நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென
தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியைச் செய்து முடிக்க இரண்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளது.
இரண்டு மணி நேரம் முடிந்ததும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றிவிடுகிறது.
விடியற்காலை 3 மணி முதல் 5 மணி வரை நுரையீரல் நேரம். இந்நேரத்தில் சுவாசப்பயிற்சி செய்து காற்றின் மூலம்
வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாக சேகரித்தால் ஆயுள் நீடிக்கும். தியானம் செய்யவும்
ஏற்ற நேரம். காலை 5 மணி முதல் 7 மணி வரை
பெருங்குடலின் நேரம். காலைக்கடன்களை இந்த நேரத்திற்குள் எழுந்து கழிவறைக்குச் செல்லும்
பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். காலை 7 மணி முதல் 9 மணி வரை வயிற்றின் நேரம். இந்நேரத்தில் கல்லைத் தின்றாலும் வயிறு அரைத்துவிடும்.
இந்நேரத்தில் சாப்பிடுவது நன்கு செரிமானமாகி உடலில் ஒட்டும்.
காலை 9 மணி முதல் 11 மணி வரை மண்ணீரல் நேரம். இந்நேரத்தில் பச்சைத் தண்ணீர் கூட குடிக்கக் கூடாது.
மண்ணீரலின் செரிமான சக்தி பாதிக்கப்படும். நீரிழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.
காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இதயத்தின்
நேரம். இந்த நேரத்தில் அதிகமாகப் பேசுதல், படபடத்தல் கூடாது.
இதய நோயாளிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்.
பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை சிறுகுடலின் நேரம். இந்த நேரத்தில் மதிய உணவை உட்கொண்டு சற்று ஓய்வெடுப்பது
நல்லது. பிற்பகல் 3
மணி முதல் மாலை 5 மணிவரை சிறுநீர்ப்பைகளின் நேரம். நீர்க்கழிவுகளை
வெளியேற்ற சிறந்த நேரம். மாலை 5 மணி முதல் 7 மணி வரை சிறுநீரகங்களின் நேரம். பகல் நேரப் பரபரப்பில் இருந்து விடுபட்டு
அமைதி பெற, எதிர்காலம் பற்றி சிந்திக்க, தியானம் செய்ய ஏற்ற நேரம்.
இரவு 9 முதல் 11 மணி வரை டிரிப்பிள் கிட்டர் நேரம். இது ஒரு உறுப்பல்ல. உச்சந்தலை முதல் அடிவயிறு
வரை உள்ள மூன்று பகுதிகளை இணைக்கும் பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.
இரவு 11 மணி முதல் 1 மணி வரை பித்தப் பை
இயங்கும் நேரம். இந்த நேரத்தில் தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை குறைபாடு ஏற்படும்.
இரவு 1 மணி முதல் விடியற்காலை 3 மணிவரை
கல்லீரலின் நேரம். இந்த நேரத்தில் நீங்கள் உட்கார்ந்திருக்கவோ அல்லது விழித்திருக்கவோ
கூடாது. உடல் முழுதும் ஓடும் ரத்தத்தைக் கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்துச் சுத்திகரிக்கும்
நேரம்.
நம்ம உடம்பைப் பற்றி நாம தெரிஞ்சிக்கிட இந்தத் தகவல்கள்
நமக்கு உதவியாக இருக்கும். இப்போ, நாம எப்படி வாழ்ந்திட்டு இருக்கோம்...?
எதைச் சரி பண்ணலாம்னு செக் பண்ணிக்குங்க பாஸ்....
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா