அ.அப்துல் வாஹித், 752/36991
5 S கொள்கைகளில் ஒன்றான ``பளிச்சென்று வைத்தல்'' உற்பத்தி. பகுதிகளில் கடைபிடிக்கப் படுகிறது. உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மீது கடைப்பிடிக்கப்படும்
நடைமுறை, நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மீது காண்பிக்கப்படுகிறதா
என்றால் கவலையோடு ``இல்லை'' என்றுதான் சொல்ல
முடியும்.
உதாரணத்திற்கு நமது தொழிலாளர்கள் பயணிக்கும் சார்ட்டர்டு
டிரிப் பேருந்துகளின் மோசமான நிலை! பேருந்துகளின் இருக்கைகள் தூசிப் படிந்து,
பல நாட்களாக சரிவரத் துடைக்காமல் அழுக்கேறிக் கிடக்கும் அவல நிலை! `பளிச்சென்று வைத்தல்' இதற்குப் பொருந்தாதா?
பேருந்துகளைச் சுத்தம் செய்து பளிச்சென்று வைக்காமல்,
சொல் ஒன்று செயல் வேறாக உள்ள நடைமுறை சரியானது அல்ல. இந்த அழுக்கேறிய
இருக்கைகளின் அவலத்திற்கான காரணத்தை விசாரித்ததில், பேருந்துகளைச்
சுத்தம் செய்ய கிளீனர்ஸ் அறவே இல்லை என்று தெரிய வருகிறது. ஆகவே, நிர்வாகம் உடனடியாக இப்பிரச்சனையில் கவனம் செலுத்த வேண்டும். சங்கமும் தலையிட
வேண்டும்.
நாம் பயணிக்கும் இருக்கைகள் தான் இப்படி என்று எண்ணி
அதிகாரிகள் பயணிக்கும் பேருந்துகளைப் பார்த்தால், அதைவிட மோசம்!
இந்நிலை களையப்பட வேண்டும். கொள்கைகள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு மட்டுமல்ல,
உழைக்கும் ஊழியர்களுக்கும் என்ற நிலை வர வேண்டும். பளிச்சென்று வைத்தல்
- உற்பத்தி பொருள்களுக்கு மட்டுமல்ல பணியாளர்கள் நலனுக்கும்தான்
என்பதை உணர வைப்போம்.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா