Saturday 17 August 2013

தலையங்கம்

      சங்கத் தேர்தல் முடிந்து நான்கு மாதங்களாகி விட்டன. வாரிசு வேலையும், விடுபட்ட 50 பைசா இன்சென்டிவ் தொகையும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஓட்டுப் போட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகள் இன்னமும் நிறைவேறவில்லை. ஆனால் நிர்வாகத்தின் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
      ஷாப் ஐஐ, இன்ஜின் அசெம்பிளி, பழைய சேசிஸ், டஈஐ என்று ஏறத்தாழ 700 தொழிலாளர்கள் சர்ப்பிளஸ் செய்யப்பட்டு மன உளைச்சலில் சிக்கித் தவிக்கும் நிலையை நிர்வாகம் உருவாக்கிவிட்டது. புதிய சேசிஸ் பகுதியில் நிர்வாகம் நினைத்ததை சாதித்துக் கொண்டது. நிர்வாகத்தின் கோரிக்கைகளை உடனுக்குடன் சங்கம் நிறைவேற்றிக் கொடுக்காமல் ஒப்பந்தத்தோடு இணைத்துப் பேசியிருந்தால் சங்கத்தின் கூட்டுபேர சக்திக்கு உதவியாய் இருந்திருக்கும்.

      அதே போல் வேலை நாட்கள் பிரச்சனையில், லேலண்ட் நிர்வாகத்தைப் போல் எந்த நிர்வாகமும் இவ்வளவு  வேலை நாட்களைக் குறைக்கவில்லை. இலாபம் வரும் போது மட்டும் அதை நிர்வாகம் நன்கு அனுபவிப்பதும், நெருக்கடி என்று வந்துவிட்டால் அதை ஒட்டுமொத்தமாக தொழிலாளர்கள் தலையில் திணிப்பதும் லேலண்ட் நிர்வாகத்துக்கு வாடிக்கையாகி விட்டது.
      ஆகவே, இனியாவது சங்கம் விழித்துக் கொண்டு, தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். பாரம்பரியமிக்க நமது சங்கம், ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனே துவக்கி, ஜனநாயக முறையில் செயல்பட்டு, தொழிலாளர்களை ஒற்றுமைப்படுத்தி, நிர்வாகத்தின் தாக்குதல்களை முறியடித்து, சிறப்பான ஒப்பந்தத்தை அமைத்திட வேண்டும் என்பது தொழிலாளர்களின் விருப்பம்.
      சங்கம் அதை நிறைவேற்றுமா?

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா