Saturday 26 April 2014

தேர்தல் : நாம் யார் பக்கம்?

கி.சுரேஷ் 
270\38313
சேசிஸ் அசெம்பிளி

பசி வந்தால் பத்தும் பறந்து போகும். தேர்தல் வந்தால் அனைத்தும் மறந்து போகும்! இந்தியாவின் 16வது மக்களவைக்கான தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கிவிட்டது. கூட்டணிகள், பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடுகள், வாக்குறுதிகள், பிரச்சாரங்கள் என பத்திரிகைகள் எழுதிய வண்ணம் உள்ளன. அரசியல் கட்சிகள் நடத்தும் நேர்காணலில் நிறைய பணம் உள்ளவர்களுக்கே சீட் <இடதுசாரிகளை தவிர> எனவும், 9 கட்டங்களாக வித்தியாசமான முறையில் தேர்தலைச் சந்திக்க உள்ளோம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை பல முனை போட்டிகள் உள்ளன. அரசியல் கட்சிகள் பல இருந்தாலும், கட்சிகளை இரு பெரும் பிரிவுகளில் பிரித்துவிடலாம். ஒன்று முதலாளித்துவ கட்சிகள், மற்றொன்று தொழிலாளர்களையும், அடித்தட்டு மக்களையும் சார்ந்த கட்சிகள். பெரும் முதலாளிகளிடமும், பெரும் நிறுவனங்களிடமும் நிதி பெற்று இயங்கும் கட்சிகள் பதவியை முதலாளிகளின் கொள்கைகளை அமல்படுத்தவும்; அடித்தட்டு மக்களைச் சார்ந்த கட்சிகள் மக்களிடம் நிதி பெற்று அவர்களுக்காக பணி செய்வதும், பதவியை பொறுப்பாக நினைத்து மக்கள் நலனுக்காக மட்டும் செயல்படவும் செய்கின்றன.

இந்தியாவின் தேர்தல் பயணத்தில் 1980க்குப் பிறகு தனிப் பெரும்பான்மை என்பது போய், கூட்டணி கட்சிகளுடனே ஆட்சிகள் அமைகின்றன. இந்தக் கூட்டணிகள் பெரும்பாலும் சந்தர்ப்பவாத கூட்டணிகளாக அமைவதால், வாக்காளர்கள் மத்தியில் சலிப்பு ஏற்படுகிறது. ஒரு மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது. இடதுசாரிகள் சொல்லும் மூன்றாவது மாற்று என்பது மூன்றாவதாக அமையும் அணி சேர்க்கை அல்ல, மாறாக மாற்றுக் கொள்கை. மாற்றுக் கொள்கை என்பது அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் முதலாளிகளிடமும், பெரும் நிறுவனங்களிடமும் பணம் பெற்று அவர்களுக்காக கொள்கையைத் தீர்மானித்து செயல்படுவதைத் தவிர்த்து, 90% உள்ள உழைக்கும் மக்களுக்கான கொள்கைகளை உருவாக்கி அதன்வழி செயல்படுவதையே கொள்கை மாற்று என்கிறோம். அதை நோக்கி பயணிக்கிறோம். விடுவார்களா? 10% பேர் 90% பேர் உழைப்பைப் பெற்று, 90% சதவிகிதத்தினரின் சொத்துக்கு நிகராக இந்த 10 சதவிகிதம் பேரின் சொத்துமதிப்பு இந்தியாவில் உள்ளது. இந்த மிகப்பெரிய இடைவெளியை உருவாக்குவது, உலகமயம், தனியார் மயம், தாராள மயம் என்னும் ஏகாதிபத்திய கொள்கைகளே!

இதை மாற்ற வேண்டும். இதை மாற்றுவது மக்கள் சக்தியே! அதை வழி நடத்துவது மாற்றுக் கொள்கை சொல்லுகிற அரசியல் கட்சிகளே! மக்கள் மத்தியில் புகுத்தப்பட்டுள்ளன. இந்த இடைவெளிக் கொள்கையை உடைத்து எறிய மேற்கண்ட மாற்றுக் கொள்கைக்கான கட்சிகளான இடதுசாரிகள் வலுப்பெற வேண்டும். தேர்தல் மூலம் மட்டும் இவை மாறிவிடுவது அல்ல! மாறாக தேர்தல் ஒரு இடைக்கால வழி, மக்களை சந்திப்பதற்கான தளம். பெரிய இலக்கை அடைவதற்கான ஒரு சிறிய கருவிதான் தேர்தல். ஆயிரம் அடி ஓட்டமும் ஒரு அடியிலே தொடங்குவது போல ஒரு அடி தான் தேர்தல்.

இந்தியா போன்ற படிநிலை, இடைநிலை கொண்ட சமூக பொருளாதாரக் கட்டமைப்பில், தேர்தலை முழுவதுமாக புறக்கணிப்பது என்பது பாசிசத்திற்கு வழி வகுக்கும். சமீபத்திய உதாரணம் நேபாளம். மேலும் இந்தியாவில் தேர்தல் முறை என்பது மாற்றப்பட வேண்டும். இங்கு விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில் <டழ்ர் தஹற்ங் நஹ்ள்ற்ங்ம்> பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்த நடைமுறை பல நாடுகளில் உள்ளது. எனவே வரும் தேர்தலில் நான் யார் பக்கம் என்பதை ஒவ்வொரு அரசியல் கட்சியின் கொள்கை வழிநின்று பார்த்து, முதலாளிகளுக்கான ஏகாதிபத்திய கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கும் கட்சிகளைத் தவிர்த்து, மக்களுக்காகவும், தொழிலாளர்களுக்காகவும், ஒரு மாற்றுக் கொள்கையை முன் வைக்கும் கட்சிகளை ஆதரித்து, அவர்களை வெற்றி பெறச் செய்வதே தற்போது நம் முன் உள்ள கடமை! இதுவே ஒரு இடைக்கால மாற்றாக இருக்க முடியும்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா