Showing posts with label 2014 04 April. Show all posts
Showing posts with label 2014 04 April. Show all posts
Sunday, 27 April 2014
அடிப்படை உரிமை
பிரேம் N..பிரேமராசன் B.Sc., B.L.
இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தில் அடிப்படை உரிமைகள் முக்கியமான பங்கு வகிப்பவை. அதில் பிரிவுகள் 14, 19, 21 மூன்றும் முக்கியமானவை. அதை கோல்டன் டிரை ஆங்கிள்ஸ் (Golden Triangles) என்று குறிப்பிடுவர்.
பிரிவு 14 : உவ்ன்ஹப் தண்ஞ்ட்ற்ள் _ சம உரிமைகள் : சட்டத்தின் முன் அனைவரும் சமம். இதில் ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் கிடையாது. இது ரூல் ஆப் லா (Rule of Law) என்று இங்கிலாந்தில் அழைக்கப்பட்டது. திருமதி.மேனகா காந்தி _ பாஸ்போர்ட் வழக்கும் திருமதி.இந்திராகாந்தி _ ராஜ்நாராயணன் தேர்தல் வழக்கும் இப்பிரிவின்படி போடப்பட்டு முக்கியத்துவம் பெற்றது.
பிரிவு 19 : இது ஆறு சுதந்திரங்களைக் குறிப்பிடுகிறது. பேச்சுரிமை, சங்கம் அமைக்கும் உரிமை, குடியுரிமை, இந்தியாவில் எங்கும் செல்ல உரிமை, வேலை, தொழில் செய்யும் உரிமை. தன் கருத்துகளை நல்ல முறையில் பேசவோ, எழுதவோ அல்லது பேசாமல் அமைதியாக இருக்கும் சுதந்திரமும் இதில் அடங்கும். Right not to speak, Freedom to observe silence.. இதில் தேசிய கீதம் வழக்கு முக்கியமானது. தேசிய கீதம் பாடும்போது சில குழந்தைகள் தேசிய கீதம் பாடாமல் மௌனமாக இருப்பது வழக்கானது. கூட்டம் போடுவது, கூடுவது, எந்த ஒரு இடையூறு இல்லாமல் அமைதியாக செல்வது, ஊர்வலம் நடத்துவது இவையும் இப்பிரிவில் அடங்கும். சங்கம் அமைப்பதும் சில வரைமுறைகளுக்கு உட்பட்டது. அதே போன்று தொழிலைத் தொடங்கவும், தகுந்த காரணத்துடன் மூடவும் உரிமை உண்டு. ஆனால் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் தொழிலை நடத்தும் உரிமை இல்லை.
பிரிவு 21 : இது வாழ்வதற்கும், சுதந்திரத்திற்கும் உறுதி அளிக்கும் பிரிவு. இப்பிரிவு அடிப்படை உரிமைகளில் இதயம் போன்றது. வாழ்க்கை மனிதனுக்கு முக்கியமானது. வாழும் உரிமை இயற்கையானது. இந்தப் பிரிவின்படி போடப்பட்ட வழக்குகளில் அ.ஓ.கோபாலன் கைது வழக்கு, திருமதி.மேனகா காந்தி பாஸ்போர்ட் வழக்கு முக்கியமானவை. மேனகா காந்தி வழக்கில் அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. அவர் பிரிவு 21_ஐ மீறுவதாக வழக்கு தொடர்ந்தார். ஆனால் உச்சநீதிமன்றம் பொதுநலன் கருதி பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் இதில் பிரிவு 21 விதி மீறல் இல்லை என தீர்ப்பளித்தது. மேலும் தனி மனித சுதந்திரம், வாழும் உரிமை, இறக்கும் உரிமை, கல்வி கற்க உரிமை, சுத்தமான காற்று, நீர் பெற உரிமை என பல உரிமைகளும் உண்டு. இப்போது நமது அரசு ரூ.10\_க்கு தண்ணீர் விற்கிறது. ஆனால், சட்டமோ கலப்படமின்றி சுத்தமான காற்றையும், நீரையும் மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று கூறுகிறது. இப்படி முக்கியமான அடிப்படை உரிமைகளை நாம் அறிந்து வைத்திருப்பது நமக்கும், நாட்டுக்கும் நல்லது.
Labels:
2014 04 April,
கட்டுரை,
பிரேம் N.பிரேமராசன்
சர்க்கரை (நீரிழிவு) வியாதிக்கு
அனுபவ மருந்துகளும், உணவில் மருந்துகளும்
இந்த வியாதியை நுணுக்கமாக கவனித்துப் பார்த்தால் முன்பே கூறியது போல், இரத்தத்தில் சர்க்கரை என்பது, உப்பு போன்றதுதான். ஆகவே இவர்கள் எந்த மாதிரியான உடலுள்ளவர்களாக இருந்தாலும் <வாத, பித்த, கபம்> அவர்கள், புளிப்பு உணவுகளை நிறுத்துவது அல்லது குறைப்பது நல்லது. தனித்து புளிப்பு உணவைச் சாப்பிடக் கூடாது. ஒரு சிலருக்கு கசப்பு உணவான வேப்பிலை, ஆடுதீண்டாபாளை, சிறியாநங்கை, பாகற்காய், வெந்தயம் போன்றவற்றைச் சாப்பிட சர்க்கரை குறையும். இன்னும் சிலருக்கு துவர்ப்பான உணவான நெல்லிக்காய், கடுக்காய், நாவற்கொட்டை போன்றவை சாப்பிட குறையும். அதாவது வாத உடம்புள்ளவர் <குண்டான இறுகிய> துவர்ப்பு சுவையுள்ள உணவுகளைச் சாப்பிட்டால் அவருக்குப் பொருந்தாது. பித்த உடம்புள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆகவே, மூன்று விதமான உடல்வாகுடையவர்களுக்குத் தகுந்தாற்போல் மருந்துகளைக் கையாள வேண்டும். 1. குண்டான இறுகிய வாத உடம்புடையவர்களுக்கு இயற்கையிலேயே எண்ணெய்ச் சத்து <கொழுப்புச்சத்து> மிகுந்திருக்கும். 2. ஒல்லியான பித்த உடம்புடையவர்களுக்கு இயற்கையிலேயே உப்பு சத்து மிகுந்திருக்கும். 3. குண்டான இறுக்கமல்லாத தளர்ந்த உடம்புடையவர்களுக்கு <கபம் உடம்பு> இயற்கையிலே நீர்ச்சத்து மிகுந்திருக்கும்.
Labels:
2014 04 April,
B.டில்லி,
கட்டுரை
``மாற்றம் தந்த ஏற்றம்''
S.கெஜராஜ்
375\K700
Mechatronics
375\K700
Mechatronics
``மேடம், நல்லா இருக்கீங்களா...?'' என்ற குரலைக் கேட்டு, தன் குழந்தைகளுடன் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சீதா, குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினாள். ``யார்... யார் நீங்க...?'' என்றாள் கேள்விக்குறியுடன்.
``மேடம் எங்களைத் தெரியலையா...?'', ``ம்ம்... எங்கேயோ பார்த்த ஞாபகம், ஆனா சட்டுனு நினைவுக்கு வரலையே`` என்றாள் சீதா விழிகள் படபடக்க. ``மேடம் போன வருடம் நடந்த அந்த சம்பவத்தை நினைச்சா எங்களுக்கே அவமானமாவும், வெட்கக்கேடாவும் இருக்கு'' என்றார்கள் சீதாவிடம் பேசியவர்கள்.
``இரு, இரு... இப்போ நினைவுக்கு வருது, நீ... நீங்க... ரங்கனும், கோபியும்தானே...?'' என்று சொல்லி, ``சரி, சரி வீட்டுக்குள்ளே வாங்க!'' என்று கனிவுடன் கேட்டுக் கொண்டு, அவர்களுக்கு அருந்த நீர் கொடுத்து ``நீங்கல்லாம் எப்படி இருக்கீங்க...?' என்றும் அவர்களை விசாரித்தாள் சீதா.
Labels:
2014 04 April,
S.கெஜராஜ்,
சிறுகதை
அக்குபங்சர் வாழ்வியல் மருத்துவம் _ பகுதி 10
Healer R.மாதவன் D.E.C.E., M.Acu
353\37026 செல்: 9840732871
அயோடின் :
353\37026 செல்: 9840732871
அயோடின் :
அயோடின் என்பது ஒரு தாதுப் பொருளாகும். இந்தத் தாது உப்பு மண்ணில் இருந்து விளையும் ஒவ்வொரு உணவுப் பொருளிலும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் அந்தந்த உணவுப் பொருளின் தன்மைக்கேற்ப கலந்துள்ளது. எந்த ஒரு உணவுப் பொருளும் அது இயற்கையாக விளைந்தால்தான் உணவு. இப்போது அயோடின் என்ற தாது உப்பை உணவுச் சமையலில் மிகவும் முக்கிய பொருளான உப்புடன் சேர்த்துள்ளனர். உப்பு இயற்கையான உணவாகும். அயோடின் இரசாயனமாகும். இயற்கையான உணவுச்சத்துகள் உயிருக்கு உயிர் ஊட்டக்கூடியவை. இரசாயனக் கலைவையான அயோடின் உடலுக்கு கேடு விளைவிக்கும்.
Labels:
2014 04 April,
R.மாதவன்,
கட்டுரை
உயர்கல்வி வாய்ப்புகளும், வழிமுறைகளும்
சு.சக்கீர்
240\J030
240\J030
தமிழகத்தில் பள்ளி இறுதியாண்டு தேர்வுகள் முடிவடைந்துள்ளன. தேர்வு எழுதிய மாணவர்கள் தமக்குக் கிடைக்கக்கூடிய மதிப்பெண்களின் அடிப்படையில், உயர்கல்வியைத் தேர்வு செய்யும் நடவடிக்கைகளைத் துவங்கியுள்ளனர். பெற்ற மதிப்பெண்கள், பொருளாதார நிலைமைகள், சமூக நீதி அடிப்படையில் ஒற்றைச் சாளர முறையில் பொறியியல், மருத்துவம், துணை மருத்துவம், இந்திய மாற்று மருத்துவம் போன்ற பல்வேறு விதமான உயர் படிப்புகளுக்கு மாணவர்களைத் தேர்வு செய்யும் முறை தமிழகத்தில் உள்ளது. பிற மாநில கல்வி முறைகளுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு முறை சாமானிய மக்களின் உயர்கல்வி கனவுகளை ஓரளவு நிறைவு செய்யும் விதமாகவே அமைந்துள்ளது.
Labels:
2014 04 April,
கட்டுரை,
சு.சக்கீர்
இசையால் வளமாகும் ஆளுமைத் திறன் _ பாகம் 16
ஜோ.சுரேந்திரன்
உரிமைக்குரல்: இசை கற்றுக் கொள்வதற்கு கால அளவு ஏதேனும் உண்டா?
JS: என்னிடம் அதிகமாக கேட்கப்படும் கேள்வி இதுதான். கற்றது கை மண்ணளவுதான். முயற்சி, பயிற்சியினால் கால அளவைக் குறைக்க முடியும். தேடல்தான் இசையை பற்றிய அறிவை இன்னும் செழுமைப் படுத்தும். பயனியர் இசை பயிற்சியகத்தின் சிறப்பே அதனுடைய பாடத்திட்டம்தான்.
அடிப்படை இசைக் கூறுகளை முறையாக கற்பிப்பது, இசைக் கருவிகளைப் பற்றி முறையான ஆளுமை, சிறப்பு _ வீடியோ, ஆடியோ பயிற்சி வகுப்புகள், ஐய்ற்ங்ழ்ய்ஹற்ண்ர்ய்ஹப் ஙன்ள்ண்ஸ்ரீ இர்ய்ஸ்ரீங்ழ்ற் _ யண்ள்ண்ற், இசை ஒலிப்பதிவு கூடங்களை பற்றி ஆய்வு! ஒலி _ ஒளி கூடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லுதல், சிறப்பான மியூசிக் ஸ்கேன் வகுப்புகள், மேடை பயத்தைப் போக்கும் வகையில் ஙன்ள்ண்ஸ்ரீ டங்ழ்ச்ர்ழ்ம்ஹய்ஸ்ரீங் இப்ஹள்ள், சர்வதேச இசைத் தேர்வுகளுக்கு டழ்ஹஸ்ரீற்ண்ஸ்ரீஹப் \ பட்ங்ர்ழ்ஹ் முறையான தேர்வுகளுடன் கூடிய செயல்முறை விளக்கங்களும் கூடிய பயிற்சி வகுப்புகள், பழ்ண்ய்ண்ற்ஹ் _ அஆதநங <கர்ய்க்ர்ய்> _ இரு சர்வதேச இசைக்கல்லூரிகளின் இசைத் தேர்வுகளுக்கும் பயிற்சி அளிப்பது பயனியர் மட்டுமே!
உரிமைக்குரல்: இசை வகைகள் எத்தனை? இசை வகைகளைத் தரம் பிரிப்பது எவ்வாறு? இசை வடிவங்களை இனம் கண்டு கொள்ள இயலுமா?
ஒந: முதலில் இந்திய இசை வகைகளை பார்க்கலாம். இரு பெரும் பிரிவுகளில் கர்நாடக சங்கீதம் \ ஹிந்துஸ்தானி சங்கீதம் என இரு பிரிவுகளை தன்னகத்தே கொண்டுள்ள இந்திய இசையின் பாரம்பரியம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
கர்னே + அடதி _ `கர்னே' என்பது வடமொழியில் இனிமையான என்று பொருள். `அடதி' என்பது செவி என்று பொருள்படும். காதுக்கு இனிமையான இசை கர்நாடக இசை என்று பொருள் கொள்ளலாம். கர்நாடக இசையின் சிறப்பே அதன் இராக கட்டமைப்புதான். ஸ்வரங்களின் இனிமையான சேர்க்கையே இராகம் ஆகும். கர்நாடக ஸ்வர சேர்க்கைகளின் அடிப்படையை விளக்க இந்த ஒரு உரிமைக்குரல் போதாது. கர்நாடக இசையின் சிறப்பு, ஹிந்துஸ்தானி இசையிலிருந்து அது எவ்வாறு வேறுபடுகிறது என்பதை இனி வரும் உரிமைக்குரலின் இதழில் நாம் காணலாம்.
Labels:
2014 04 April,
இசை,
ஜோ.சுரேந்திரன்
காற்று...
அனந்த நாராயணன்
275\L192
<1> தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று
<2> வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று
<3> கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல்க் காற்று
<4> மேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று
காற்று வீசும் வேகம் பொருத்து பெயர்கள்:
<1> 6 கி.மீ வேகத்தில் வீசும் காற்று `மென்காற்று`
<2> 6_11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று `இளந்தென்றல்`
<3> 12_19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று `தென்றல்`
<4> 20_29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று `புழுதிக்காற்று`
<5> 30_39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று `ஆடிக்காற்று`
<6> 100கி.மீ வேகத்தில் வீசும் காற்று `கடுங்காற்று`
<7> 101 _120 கி.மீ வேகத்தில் வீசும் காற்று `புயற்காற்று`
<8> 120 கி.மீ மேல் வேகமாக வீசும் காற்று `சூறாவளிக் காற்று`
275\L192
<1> தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று
<2> வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று
<3> கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல்க் காற்று
<4> மேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று
காற்று வீசும் வேகம் பொருத்து பெயர்கள்:
<1> 6 கி.மீ வேகத்தில் வீசும் காற்று `மென்காற்று`
<2> 6_11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று `இளந்தென்றல்`
<3> 12_19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று `தென்றல்`
<4> 20_29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று `புழுதிக்காற்று`
<5> 30_39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று `ஆடிக்காற்று`
<6> 100கி.மீ வேகத்தில் வீசும் காற்று `கடுங்காற்று`
<7> 101 _120 கி.மீ வேகத்தில் வீசும் காற்று `புயற்காற்று`
<8> 120 கி.மீ மேல் வேகமாக வீசும் காற்று `சூறாவளிக் காற்று`
Labels:
2014 04 April,
அனந்த நாராயணன்,
கட்டுரை
``கொற்கை'' சாகித்ய அகாடெமி விருது _ 2013
அ.பிரபாகரன்
எவரெடி தொழிலகம்
எவரெடி தொழிலகம்
``நாம் நம்ப வேண்டும் என்பதற்காக அல்ல; ஆழ்ந்த விசாரனையில் ஈடுபட வேண்டும் என்பதற்காகத்தான் புத்தகங்கள் எழுதப்படுகின்றன. ஒரு புத்தகத்தைப் பொறுத்தவரை அது என்ன சொல்கிறது என்று பார்க்கக்கூடாது: அது என்ன உணர்த்துகிறது என்றுதான் பார்க்க வேண்டும்.''
- உம்பெர்த்தோ ஈகோ
சமீப காலமாக நவீன தமிழிலக்கியத்தின் காத்திரமான படைப்புகள் கவனம் பெறுவது தமிழில் நிலவக்கூடிய ஆரோக்கியமான சூழலாகும். அவ்வகையில் ஜோ.டி.குருஸின் கொற்கை நாவல் சாகித்ய அகாடெமி விருது பெற்றது மிகப் பொருத்தமானதாகும்; இலக்கிய உலகுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாகும். இவரது முதல் நாவல் ``ஆழி சூழ் உலகு''. இது தமிழக அரசின் விருது பெற்றது. கொற்கை இரண்டாவது நாவல்.
நெய்தல் நிலக்காட்சி மற்றும் அதன் வாழ்வியல் அணுகுமுறையினை ப.சிங்காரத்தின் ``புயலிலே ஒரு தோணியும்'', ஹெர்னஸ்ட் ஹெமிங்வேயின் `கடலும் கிழவனும்' <பட்ங் ஞப்க் ஙஹய் ஹய்க் பட்ங் நங்ஹ> போன்ற படைப்புகள் முன்னெடுத்துச் சென்றாலும், அதனினும் கொற்கையின் இயங்குதளம் முற்றிலும் வேறானது. அன்றைய பாண்டியர் காலத்தின் கொற்கை துறைமுகம், இன்று தூத்துக்குடி துறைமுகம். அது பரதவரின் கதையாடலாக 1914_ல் தொடங்கி 2000 வரையிலான 86 ஆண்டு கால கடல்சார்ந்த மீன்பிடி வாழ்வின் களத்தைப் பதிவு செய்கிறது. இப்படைப்பு 1174 பக்கங்களில் விரிவடைந்து மீனவர் சமூகத்தின் உரையாடலாகவும், நெய்தல் நில சந்ததியரான பரதவ மக்களின் இலக்கிய ஆவணமாகவும் உள்ளடக்கி பெருநாவலுக்குண்டான தகுதியினை தானே தகவமைத்துக் கொள்கிறது.
கடல் மனிதர்களின் உடல் உழைப்பு சார்ந்த வாழ்வு, துக்கித்து வீழும் குடும்ப மரணம், ஒப்பனையற்ற பாலியல் வசவு மொழிகள், மீன்பிடித்து திரும்புகையில் தூரத்தில் தெரியும் கரையில் திருச்செந்தூர் மச்சானுக்கு கும்பிடு போடுதல், மற்றும் உள்ளூர்வாசிகளுக்கே தெரியாமலிருந்த தாசி வீடு தேடி காமக்களியாட்டம் நிகழ்த்த வரும் வெள்ளைக்காரர்கள், இப்படியாக பன்முக தளத்தில் இந்நாவல் ஆழமும், விரிவும் கொள்கிறது. ஐரோப்பிய காலனியத்தின் வருகையும், கத்தோலிக்க சமய நிறுவனத்தின் வசந்தமும் வேர்கொண்டு துளிர்த்த பரதவர் கடல்வாழ்வில் தான் பால்யத்தில் அறிந்து வாழ்ந்த அச்சமூகத்தையும் அவர்கள் பயன்படுத்திய மொழியிலே அடையாளப்படுத்தி வாழ்வியல் சித்திரமாக்கியதில் இப்படைப்பு தன்னளவில் கலைத்தன்மையோடு தேர்ச்சி பெறுகிறது. எண்பத்தியாறு பர்னாந்துமார்களின் குடும்ப வரலாற்றுத் தகவல் கூறுகளை புனைவுக்குள் துறுத்தி அதனை ஆவணப்படுத்தி பெரும் கலைப்படைப்பாக்கியதில் தன்னை அசலான கலைஞனென நிரூபிக்கிறார் ஜோ.டி.குருஸ். தமிழில் அவசியம் வாசிக்க வேண்டிய பிரதிகளில் கொற்கையும் ஒன்று.
Labels:
2014 04 April,
அ.பிரபாகரன்,
கட்டுரை
பொன்மொழிகள்
V.அண்ணாமலை
265\36065
கஷ்டம் வரும்! போகும்!!
ஆனால் நம்பிக்கை போனால்
திரும்பி வராது!
ஒரு மனிதனுக்கு
வாழ்க்கையின் முக்கிய சிந்தனை
ஆர்வம்! ஈடுபாடு!! வெற்றி!!
வாழ்க்கை ஒரு கலை! (ART) - A - Active, R - Relation, T - Time
265\36065
கஷ்டம் வரும்! போகும்!!
ஆனால் நம்பிக்கை போனால்
திரும்பி வராது!
ஒரு மனிதனுக்கு
வாழ்க்கையின் முக்கிய சிந்தனை
ஆர்வம்! ஈடுபாடு!! வெற்றி!!
வாழ்க்கை ஒரு கலை! (ART) - A - Active, R - Relation, T - Time
Labels:
2014 04 April,
V.அண்ணாமலை
விழிப்புணர்வு
விழிப்புணர்வு...
தன.சம்பத்
255\J144
விடியலுக்குக் காத்திருந்த
செங்கதிரைக் கண்டதுமே
கமலமுகம் மலர்ந்ததுவே!
அதுவும் ஓர் விழிப்புணர்வே!
சூடமதன் பக்கத்தில்
சுடர்விடும் தீக்குச்சி
சுதந்திரமாய் நெருங்கியதும்
கணப்பொழுதில் கவருவதேன்?
அதுவும் ஓர் விழிப்புணர்வே!
நன்றிக்குச் சான்றான
வாலாட்டும் நாயினமும்
அயலாரைக் கண்டதுமே
புயலாகப் பாயுவதேன்?
அதுவும் ஓர் விழிப்புணர்வே!
மலரிடம் சேகரித்த
மதுவதனை அபகரிக்க
நெருங்கியதும் தேனீக்கள்
கொட்டிடவே துரத்துவதேன்?
அதுவும் ஓர் விழிப்புணர்வே!
வனத்தினிலே வாழ்கின்ற
அப்பாவி விலங்கினமும்
சிங்கமதைக் கண்டதுமே
தலைதெறிக்க ஓடுவதேன்?
அதுவும் ஓர் விழிப்புணர்வே!
பிரிவினை அரக்கனுக்கு
நாளெல்லாம் இரையாகும்
அப்பாவி மாந்தருக்கு
விடியலும் ஏன் வரவில்லை?
விழிப்புணர்வேன் பெறவில்லை?
தன.சம்பத்
255\J144
விடியலுக்குக் காத்திருந்த
செங்கதிரைக் கண்டதுமே
கமலமுகம் மலர்ந்ததுவே!
அதுவும் ஓர் விழிப்புணர்வே!
சூடமதன் பக்கத்தில்
சுடர்விடும் தீக்குச்சி
சுதந்திரமாய் நெருங்கியதும்
கணப்பொழுதில் கவருவதேன்?
அதுவும் ஓர் விழிப்புணர்வே!
நன்றிக்குச் சான்றான
வாலாட்டும் நாயினமும்
அயலாரைக் கண்டதுமே
புயலாகப் பாயுவதேன்?
அதுவும் ஓர் விழிப்புணர்வே!
மலரிடம் சேகரித்த
மதுவதனை அபகரிக்க
நெருங்கியதும் தேனீக்கள்
கொட்டிடவே துரத்துவதேன்?
அதுவும் ஓர் விழிப்புணர்வே!
வனத்தினிலே வாழ்கின்ற
அப்பாவி விலங்கினமும்
சிங்கமதைக் கண்டதுமே
தலைதெறிக்க ஓடுவதேன்?
அதுவும் ஓர் விழிப்புணர்வே!
பிரிவினை அரக்கனுக்கு
நாளெல்லாம் இரையாகும்
அப்பாவி மாந்தருக்கு
விடியலும் ஏன் வரவில்லை?
விழிப்புணர்வேன் பெறவில்லை?
Labels:
2014 04 April,
கவிதை,
தனசம்பத்
சிந்திக்க சில வரிகள்...
M.பழனியப்பன்
760\K835
நல்ல நண்பர்களுக்கு அடுத்து
உயர்ந்த இடம் நல்ல புத்தகங்களே!
மனிதர்களை உயர்ந்த மனிதர்களாக்குவது
சோதனை நேரம்தான் வெற்றி நேரமல்ல!
உறுதியில்லாத மனிதன்தான்
அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை வைக்கிறான்!
மனிதனுடைய வலிமையை அழிப்பவை மூன்று
அச்சம், கவலை, நோய்!
கீழான இலட்சியத்தில் வெற்றி காண்பதை விட
உயர்ந்த இலட்சியத்தில் தோல்வி காண்பதே மேல்!
760\K835
நல்ல நண்பர்களுக்கு அடுத்து
உயர்ந்த இடம் நல்ல புத்தகங்களே!
மனிதர்களை உயர்ந்த மனிதர்களாக்குவது
சோதனை நேரம்தான் வெற்றி நேரமல்ல!
உறுதியில்லாத மனிதன்தான்
அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை வைக்கிறான்!
மனிதனுடைய வலிமையை அழிப்பவை மூன்று
அச்சம், கவலை, நோய்!
கீழான இலட்சியத்தில் வெற்றி காண்பதை விட
உயர்ந்த இலட்சியத்தில் தோல்வி காண்பதே மேல்!
Labels:
2014 04 April,
M. பழனியப்பன்,
கட்டுரை
மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடுவோம்... நண்பர்களே!
M. ஆதிகேசவன்
264\J066
264\J066
நம்பிக்கைக்கும், மூட நம்பிக்கைக்கும் இடையில் நுணுக்கமான வேறுபாடு உண்டு. அது புரியாமல் பலரும் தமக்குத்தாமே சமாதானம் சொல்லிக் கொள்கிறார்கள். பகுத்தறிவினால் சோதித்து அறியப்படாதது நம்பிக்கை. சோதித்து அறிய வாய்ப்பிருந்தும் அப்படிச் செய்யாமலே ஒன்றை உண்மை என நம்புவது மூட நம்பிக்கை.
அறிவியல் வளராத காலத்தில், உலகம் தட்டையானது என மனிதன் நம்பினான். அந்தக் காலத்து மனிதனுக்கு அது நம்பிக்கை. இந்தக் காலத்து விஞ்ஞானமோ உலகம் உருண்டையானது என நிரூபித்துவிட்டது. இப்போதும் அதைத் தட்டை என நினைத்தால் அது மூட நம்பிக்கை.
Labels:
2014 04 April,
M.ஆதிகேசவன்,
கட்டுரை
பழங்களைச் சாப்பிடுவோம்... பயன்பெறுவோம்!
E.கருணாகரன்
264/L460
Auto Engine
Dressing
கனிகளை உண்போம்! பலன்களைப் பெறுவோம்!
264/L460
Auto Engine
Dressing
அத்திப்பழம் சாப்பிட்டால் இரத்தம் விருத்தியாகும். இதயத்திற்கு நல்லது. சிவப்பணுக்கள் உற்பத்தியாகும். அன்னாசிப் பழம் சாப்பிட்டால் மலக்குடல் பிரச்சனை தீரும். இது மலமிளக்கியாக செயல்படும். அக்ரூட் உண்டால் மூளை வளர்ச்சி அடையும். மூளை பலம் பெறும். ஆப்பிள் இரத்த ஓட்டத்திற்கு சிறந்தது. இது இதயத்தைப் பலப்படுத்தும். ஆரஞ்சு பழமோ கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும். சூடு தணியும்; இரைப்பை பிரச்சனை தீரும்.
கருப்பு திராட்சை கருவிழிக்கு நல்லது; சூடு தணியும்; நீரிழிவு நோய் குணமாகும். சாத்துக்குடி நரம்புத் தளர்ச்சியை போக்கும்; இரைப்பைப் புண் சரியாகும்; நன்கு சீரணமாகும். பேரீச்சம்பழம் இரும்புச் சத்தைக் கொடுக்கும்; ஹீமோகுளோபின் உயரும்; விதைப்பை பிரச்சனை சரியாகும். மஞ்சள் வாழையால் சீரண உறுப்புகள் பலம் பெறும்; மலமிளக்கியாகச் செயல்படும்.
மாங்கனி இருதயத்தைப் பலப்படுத்தும்; நரப்புத் தளர்ச்சி, சீரணத்திற்கு நல்லது; மலமிளக்கியாகவும் செயல்படும். முந்திரிப் பழம் சிறுநீரகம் <கிட்னி> சம்பந்தமான நோய்களைக் குணமாக்கும். தர்ப்பூசணி பழம் சிறுநீர்ப் பிரச்சனையைத் தீர்க்கும்; தாகம் தணிக்கும்; உடல் குளிர்ச்சிக்கு நல்லது. மாதுளம்பழம் சிவப்பணுக்களை உண்டாக்கும்; சீதபேதி நிற்கும்; பெண்களின் கருப்பை பிரச்சனை தீரும்.
Labels:
2014 04 April,
E.கருணாகரன்,
கட்டுரை
ஆளவந்தானும், ராஜதுரையும்
S.சுகுமார்
266\C858
266\C858
செங்கழனியூர் பெயருக்கு ஏற்றார்போல செழுமையாக இருந்த ஊர்தான். இன்று தலைகீழாக மாறிவிட்டது. கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்தார்கள்! தேர் இழுப்பது, கூழ் ஊற்றுவது என்றெல்லாம் செய்துபார்த்துவிட்டார்கள். எந்த மாற்றமும் இல்லை.
விளைச்சல் இல்லை! விளைந்தால் நியாயமான விலை இல்லை. வேலையும் கிடைக்கவில்லை. கிடைத்தால் சரியான கூலி இல்லை! வாழ வழியின்றி தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வூர் மக்கள்! அதே நேரத்தில் ஆளவந்தான் குடும்பமும், ராஜதுரை குடும்பமும் மட்டும் செல்வச்செழிப்போடு அந்த ஊரின் எல்லா விவகாரங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக இருக்கிறார்கள்.
Labels:
2014 04 April,
S.சுகுமார்,
சிறுகதை
ஹைக்கூ... பூங்கா!
இனியவன் ஜி.ஸ்ரீதர் 256\38176
பாருக்குள்ளே நல்ல நாடு _ டாஸ்மாக்
``பாரு''க்குள்ளே தமிழ்நாடு
சிகரெட்டைப் பற்ற வைத்து
தீமைகள் விளைவிப்பதால்
தீ<ய>ப்பெட்டி
என்றானதோ?!
புலமையிலே பாத்திகட்டி
பேனா மை நீரைப் பாய்ச்சி
சங்கதிகளை சாகுபடி செய்வார்
சந்த நயத்தோடு
கவிஞர்
கடலோடு என்ன உறவோ கண்களுக்கு
கண்ணீரும் கரிக்கின்றதே
உப்பு!
Labels:
2014 04 April,
இனியவன் ஜி.ஸ்ரீதர்,
கவிதை
தண்ணீர் தினம் - மார்ச் 22
S.ரகுபதி
258\C879
258\C879
உலக தண்ணீர் நாள் மார்ச் 22ம் தேதி. இந்நாளையொட்டி தண்ணீரை நாம் எப்படி சிக்கனமாகப் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றிச் சிந்தித்தால் பூவுலகின் சுற்றுச்சூழலைக் காக்க நம்மாலும் சிறிய பங்களிப்பைத் தர முடியும். காய்கறிகளைக் குழாயில் கழுவுவதற்குப் பதிலாக, பாத்திரத்தில் இட்டுக் கழுவலாம். வாஷ் பேசினில் தண்ணீரைத் திறந்து விட்டுக் கொண்டே பல்துலக்க, முகம் கழுவுவதற்குப் பதிலாகத் தேவையான தண்ணீரை மட்டும் எடுத்துப் பயன்படுத்தலாம். ஷவரில் குளிப்பதைவிட பக்கெட்டில் தண்ணீரைப் பிடித்துக் குளிக்கலாம். வாஷிங்மிஷினை எப்போதும் ஃபுல் லோடில் <ஊன்ப்ப் கர்ஹக்> பயன்படுத்தலாம். எல்லா பைப்புகளிலும் தண்ணீர் வெளியேறும் அளவைக் கட்டுப்படுத்தி வைக்கலாம். ஒழுகும் குழாய்கள், டாய்லெட் கசிவுகளை உடனடியாகப் பழுது பார்க்கலாம். வெயிலற்ற காலை, மாலை வேளைகளில் மட்டுமே தாவரங்கள், புல்வெளிகளுக்குத் தண்ணீர் விடலாம். அதிக தண்ணீர் தேவைப்படாத ஆல், அரசு, அசோகம், வேம்பு, செண்பகம், இயல்வாகை, புங்கை போன்ற உள்நாட்டு மரங்களை வளர்க்கலாம். என்ன நண்பர்களே, தண்ணீர் தங்கம் போல; சிக்கனமாகப் பயன்படுத்துவோம்; சுற்றுச் சூழலைக் காப்போம்!
Labels:
2014 04 April,
S.ரகுபதி,
கட்டுரை
மனிதன் மகத்தானவன்
J.ஜேசுதாஸ்,
மாநிலச் செயற்குழு
தமுஎகச
தானே படைத்தவற்றிடம் மண்டியிட்ட மனிதனின் கதை மிகவும் ரசிக்கத்தக்க ஒன்றாகவே இருக்கிறது. மிருக வாழ்வில் இருந்து முற்றாக மனிதன் விடுபட்ட காலம் சுமார் 1.5 லட்சம் ஆண்டுகள் இருக்கலாம் என்றே ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இக்கால இடைவெளியில் உலகம் மாறி, சூழலும் மாறி, மனிதன் மாறி மாறி அவன் சிந்தனையும் மாற்றமடைந்து வந்துள்ளது.
மனிதனின் வாழ்வை இடைமறித்த இயற்கையின் மீது அவன் நடத்திய எதிர்த்தாக்குதல் அனைத்தும் தான் வாழ வேண்டும் என்ற கருத்தில் இருந்து உருவானது. இந்தச் சிந்தனைதான் அவனுக்கு இயற்கையை வழிபட வேண்டும் என்ற எண்ணத்தையும், அப்படி வழிபட்டால் தன்னை அது பாதுகாக்கும் என்ற ஆசையும் உண்டானது.
பேய் மழையிலும், கடுங்குளிரிலும், சூறாவளியிலும், அடர் இருட்டிலும், மேலும் தன்னைக் கொல்ல வரும் மிருகங்களோடும் போராடும்போதும், தன்னுடன் இருந்தவர்களை இழந்த போதும், இறந்தவனின் நினைவுகள் தன்னைவிட்டு அகலாத காரணத்தைத் தேட வேண்டி இருந்தது. பிணங்களே ஆதிகால கடவுளாக இருந்த வரலாறு, இன்னும் பல நாடுகளின் ஆதிவாசிகளிடம் அப்படியே இருக்கிறது. தனி மனிதனாக நின்று இயற்கையை எதிர்க்க இயலாதவன், இனமாக, குலக்குழுவாக நின்று எதிர்த்தான். விளைவு குலத்தலைவன் அல்லது தலைவி அந்தக் குலத்தின் தெய்வமாக பின்னாளில் உருவாகினர். மனித இன வரலாற்றில் இந்த மாற்றம் பற்றி சமூக அறிவியலாளர் திரு.வீல் டூரண்ட் கூறும்போது குலத் தலைவனுக்கோ, அரசனுக்கோ இன்று நாம் செய்யும் அனைத்துச் சிறப்புகளும் நவீன தெய்வங்களுக்கும் செய்யப்படுவதை அவர் மேற்கோள் காட்டுகிறார்.
இன்றைய தொல்பொருள் ஆய்வாளர்கள் அனைவரும் ஒரு விஷயத்தில் ஒத்த கருத்துடையவர்களாக இருக்கின்றனர். அது தென் அமெரிக்க மாயா நாகரிகமானாலும், எகிப்திய, ரோமானிய கலாச்சாரமானாலும், பண்டைய தமிழர் நாகரிகமானாலும் முன்னோர் வழிபாடும், மிகவும் சிறப்புக்குரிய ஒன்றாகவே இருந்துள்ளது.
பிணங்களைத் தாழிகளில் இட்டு மூடியதும், மம்மிகள் 4000 ஆண்டுகளாகியும் இன்றும் கெடாமல் இருப்பதும், இறந்தவனின் உடல் மீது பிரமிப்பூட்டும் கட்டிடங்களை எழுப்பி இருப்பதும், பிண வழிபாட்டுச் சின்னங்களே. குலத்தலைவன் இறந்தால் அந்தக் குலமே தற்கொலை செய்து கொண்ட காலமும் ஒன்று இருந்தது. மலையின் கீழே கூரான கம்புகள் நட்டு, மலையின் மீது ஏறி அதில் வீழ்ந்து மடிந்த பழங்கால வரலாற்றை எழுதி மாளாது. இதன் தொடர்ச்சியாக கணவன் தெய்வத்திற்குச் சமம், அவன் இறப்புக்குப் பின்பு வாழ்க்கை இல்லை எனக் கூறிய இந்திய அரசர்களின் மனைவிமார்கள் நூற்றுக்கணக்கில் தீக்குண்டத்தில் வீழ்ந்து சதிமாதாக்களான வரலாறு இந்தியாவில் ஏராளம். இதைக் கண்டு மிரண்டு போய் அயல் நாட்டு படையெடுப்பாளர்கள் செய்வதறியாது கைப்பிசைந்து நின்ற காட்சியும் உண்டு. அப்படியானால் கடவுள் என்பவர் யார்? ஆன்மா என்பது என்ன? பிரம்மம் எதைக் குறிக்கிறது. ஆவியும், பேய் பிசாசுகளும் இருக்கிறதா? இந்த உலகின் வாழ்வை இழந்து விட்டால் நாம் எங்கே போகிறோம்? காலம் காலமாக மனிதனின் இந்தக் கேள்விகள் தொடரத்தான் செய்கின்றன. கடவுள்களின் மறுபக்கத்தில் நவீன சமூகத்தின் விஞ்ஞான வளர்ச்சி பற்றிய சுவையான செய்திகளும் ஏராளம்... அதைப் பற்றியும் நாம் பேசித்தான் ஆகவேண்டும்.
<ஆகவே.... பேசுவோம்....>
Labels:
2014 04 April,
J.ஜேசுதாஸ்,
கட்டுரை
காட்சியும்... கருத்தும்...
K.N.சஜீவ்குமார்
217\37918
217\37918
காட்சி 1 : Jack_ம், Rose_ம் டைட்டானிக் கப்பலில் பயணம் செய்கிறார்கள். கப்பல் பனிப்பாறை மீது மோதி மூழ்குகிறது. கடல் கடந்து கரையை எட்ட வேண்டிய கப்பல், கடலின் அடியில் இருக்கும் தரையைத் தொட்டுவிடுகிறது. பனிப்பாறைகளின் தன்மை என்னவென்றால் 1\3 பாகம் தான் வெளியில் தெரியும், பாக்கி 2 \3 பாகம் வெளியில் தெரியாமல் நீருக்கு அடியில் இருக்கும்.
காட்சி 2 : ஒரு திருடன் தன்னை பிடிக்க ஓடிவரும் மக்களிடம் பிடிபடாமல் இருக்க தானும் அவர்களுடன் சேர்ந்து ``திருடன்! திருடன்!! பிடியுங்கள்!'' என்று கத்திக் கொண்டே ஓடுகிறான். எதிரே வரும் மக்கள் யாரைப் பிடிப்பது என்று தெரியாமல் விழிக்கின்றனர். நம் குடும்பங்களில் பிள்ளைகள் யாராவது அரசியல்வாதி ஆகப்போகிறேன் என்றால் வருத்தப்படுவோம். அரசியல் ஒரு சாக்கடை என்று அறிவுரை கூறுவோம். ஆனால் அவர்களே பில் கேட்ஸ் அல்லது அம்பானி ஆகப்போகிறேன் என்றால் அகமகிழ்ந்து போகிறோம். மும்பை தெருக்களில் துணிகளை முதுகில் சுமந்து விற்ற அம்பானியை ``உழைப்பால் உயர்ந்தவர்'' என்று கொண்டாடுகிறோம். ஆனால் காலில் கோணியைக் கட்டிக் கொண்டு வெயிலில் வெந்து ``ரோடு'' போடும் தொழிலாளியின் உழைப்புக்கு எந்த விலையும் இல்லை. அவர் உழைப்பால் எந்த உயர்வையும் அடையவில்லை.
Labels:
2014 04 April,
K.N.சஜீவ்குமார்,
கட்டுரை
Saturday, 26 April 2014
மீண்டும் ஒரு மே புரட்சி...
இ.தவமணி
இன்ஜின் & யூனிட் அசெம்பிளி
செயற்குழு உறுப்பினர், ALEU
இன்ஜின் & யூனிட் அசெம்பிளி
செயற்குழு உறுப்பினர், ALEU
தொழிலாளர்கள் நாட்டின் முதுகெலும்பு என்பார்கள். ஆனால் உண்மையில் முதுகெலும்பு மட்டுமல்ல, நாடி நரம்புகள் அனைத்தும் தொழிலாளர்களே! இவ்வுலகில் காணப்படும் அனைத்தும் தொழிலாளர்களின் உழைப்பால் உருவானது. இயற்கையின் சீற்றங்களில் இருந்து மனிதகுலத்தைக் காப்பாற்ற ஆறுகளைக் கட்டுப்படுத்தியவன் தொழிலாளி. ஏரிகளையும், அணைகளையும் கட்டியவன் தொழிலாளி. ஆலைகள், நவீன இயந்திரங்கள் அனைத்தும் தொழிலாளியின் உழைப்பின் மூலமாகவும், சிந்தனை மூலமாகவும் உருவானவையே. தொழிலாளர்களின் உழைப்பினால் உருவானவைகளை உண்டு கொழுப்பவர்களே முதலாளிகள். மனித உடலில் உருவாகும் நோய்க் கிருமிகளை அழிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி போல் தொழிலாளி வர்க்கம் செயல்படுகிறது.
முதலாளித்துவ அமெரிக்காவில் மனிதாபிமானமற்ற முறையில் 12 மணி நேரம், 18 மணி நேரம் என கடும் சுரண்டலுக்கு உள்ளான போது, எதிர்த்து போராடி 8 மணி நேரம் உழைப்பு, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம் என உலகிற்கு பறைசாற்றியவர்கள் தொழிலாளர்கள்.
முதலாளித்துவ கொள்கையினால் இந்தச் சமூகத்தை அனைவருக்குமான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியாது. கடும் வறுமையையும், வேலையின்மையையும் உருவாக்கி சமூகத்தின் வளங்களை சில பேர் அனுபவிக்க, பலபேர் வறுமையில் வாடச் செய்வது தான் முதலாளித்துவம். இதை மாற்றி உலகின் அனைத்து வளங்களையும் அனைத்து மக்களும் அனுபவிக்க முதலாளித்துவத்திற்கு மாற்றாக சோசலிச சமூகத்தைப் படைத்தவர்கள் தொழிலாளர்கள்.
இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் முதலாளித்துவத்தின் இன்னொரு வடிவமான பாசிசம் முன்னுக்கு வந்தது. ஹிட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரிகள், இன வாதத்தைத் தூண்டி, மனித இனமக்களை மனிதாபிமானமற்ற முறையில் அழித்த போது, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டு ஹிட்லருக்கு ஆயுத உதவி செய்து, முதன் முதலில் தொழிலாளி வர்க்க தலைமையில் ஆட்சி அமைத்த சோவியத் யூனியனை அழித்திட நினைத்தது. ஆனால் ஹிட்லர் படைகளை ஓட ஓட விரட்டி, ஹிட்லரின் ரிச்ஸ்டாக் மாளிகையில் தொழிலாளர்களின் செங்கொடியை ஏற்றியது சோவியத் யூனியனின் செஞ்சேனை.
இன்றைக்கு உலகமய, தாராளமயத்தினால் தொழிலாளர் வர்க்கத்தின் மீது அதிகப்படியான தாக்குதல் தொடுக்கப்படுகிறது. புதிதாக தொடங்கிய ஆலைகளில் சங்கம் அமைக்கும் உரிமை முற்றிலும் மறுக்கப்படுகிறது. 8 மணி நேர வேலைக்காக போராடிப் பெற்ற உரிமை இன்று பறிபோகிறது. காண்டிராக்டில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வேலை நேர அளவே கிடையாது. முதலாளித்துவத்தின் லாப வெறிக்காக உழைப்பாளி மக்கள் கசக்கிப் பிழியப்படுகின்றனர். இதை எதிர்த்து நாம் போராட வேண்டும். தற்சமயம் முதலாளித்துவத்தின் கை ஓங்கினாலும் இறுதி வெற்றி தொழிலாளி வர்க்கத்துக்கே என்பதை நிலைநாட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை. அதற்கான பணிகளில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள இந்த மேதின நாளில் சபதமேற்போம்!
Labels:
2014 04 April,
C.தவமணி,
கட்டுரை
Subscribe to:
Posts (Atom)















